கானலுக்கும் காதல் வரும்
காவிரிக்கும் மோகம் வரும்
தார்சாலையும் கவி பாடும்
கார்முகிலும் கவி பாடும்
கார்த்திகையின் காதணியாய்
மாா்கழியின் முதற்பனியாய்
காண்பவருக்கும் அருங்கனியாய்
கண்மணி உன் கோலமடி
ஊர்வலமாய் நீ நடந்தால்
ஊற்றெடுக்கும் உள்ளமடி
கன்னி இவள் பாதையிலே
கார்மேகம் தூறுதடி
கட்டழகி பார்வைபட
கம்பன் வரும் சாலையிலே
கம்பீரமாய் காற்றிசைக்கும்
கட்டெறும்பு எனது கவி
அட நானா எழுதுனேன்? ஆச்சிரியம் தான்
إرسال تعليق