வருகின்ற வழியெல்லாம் பூவனம்!
வரவேற்பறையாய் புவனம்!
போகிற போக்கில் பொழிந்த பொக்கிஷம்!
பொய்கை வாக்கில் பெய்த அா்சதை!
வெயில் கால நிழலாய் கானகம்!
வெட்கை நேர நீராய் பானகம்.!
ஆற்றின் அழகெல்லாம் இயற்கையின் பொற்பதம்!
பற்றி கொண்டால் வாழ்க்கை அற்புதம்!
முடிந்தது என்பதெல்லாம் நின்றுபோன தூறல்!
அதன்பின் வருவதெல்லாம் வசந்த கால சாரல்!
தூறலை நின்றதெண்ணி துயர் பட்டால் சாரலை சுகிக்க மாட்டாய்
நின்னடி பணிந்தால் எனக்கென்ன தருவாய் இறைவா?
என்னையே தருவேன் , என்றான் இறைவன்....
நான் செல்லும் பாதை சரிதானா ?
சுற்றி இருப்பவன் குறைகூறினால் சரி ..
0 تعليقات