கற்பனை தாகங்கள்... 1- கடலில் ஒரு தேடல் (முதற்பகுதி)

இதோ நான் தான்.. கன்னியாகுமரி கடல் எதிரே ஏதோ மௌனதவம் செய்வதுபோல கரையில் அமர்ந்திருந்தேன்... அருகிருப்போரின் அநுமான தகவல் இது.. உண்மையில் நானோ கற்பனை தேரில் உலாவந்து கொண்டிருந்தேன்.. அந்திம தாரைகள் ஔிர்ந்திடும் மாலையில் மணற்பரப்பின் தகிக்கும் இளம்சூட்டில் படர்ந்திருந்த நான்; அலைகடலின் ஈரகாற்றின் சுகத்தில் மூழ்கின தருணம்... காற்றிலும் இருந்தது உப்புசுவை..

எங்கேயோ எப்போதோ முக்கடல் கூடினம் தேசம் என்று எழுதி வைத்தேன் என்ற நினைவு என் மூளையில் கீற்றுபோல் மின்னி மறைந்தது. அப்படி ஒரு சுகபோதையில் என் கற்பனைகளை ஒருமுறை கடலிலே சலவை செய்து கொள்ள எண்ணதேரினை கடலினுள் பாய்ச்சினேன்... வாருங்கள் செல்வோம்... கடல்பற்றி சில நினைவுகள்... அலையலையாய் மிதந்து வரும் என் கற்பனையை உங்கள் சிரத்திலும் செலுத்தி மனதில் விதைக்க போகிறேன்...

முதற்மட்டில் ஒரு வியப்பு ; கடலின் பரந்த பிரம்மாண்ட தன்மை, அலைகளின் ஆசை கலந்த ஆட்டம் ... பசி கலந்த ஆவேசம்... ஆழ அமர்ந்த முத்துக்கள்... பவளங்கள் பெட்ரோலிய மாங்கனீஷ பாறைகள்... நட்சத்திர மீன்கள் , தன்னை தானே வண்ணமயமாய் அலங்கரித்துகொள்ளும் ஆக்டோபஸ்கள்... அடக்கமாய் பணிவாய் நிதானமாய் உதாரணமாய் வாழும் ஆமைகள்.. எத்தனை விசித்திரம் எவ்வளவு வியப்பு ; கடலுக்குள் தனி நிலவுலகம்.. ஆம் நிலவின் உலகமும் கடல்தான் ... பசிபிக் கடல்தான் நிலவின் தாய்மடி...கர்ப்பபை...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم