நான் எழுதின குட்டி கதை..

இன்று காலையும் அதை சந்தித்தேன். என்னை பார்த்து அது சிரித்தது... நான் என்னை சரிபார்த்துக்கொண்டேன்... நிஐம் தான் எதிரில் ஒரு அமானுஸ்யம்...

யாரது ? ஏன் சிரித்து? எனக்கும் அதற்கும் என்ன தொடர்பு?.. என் ஞாபக புத்தகத்தில் ஏங்கேனும் இந்த நிகழ்வின் முன்னுரை இருக்கிறதா?...

இல்லை நிச்சயமாக இல்லை இன்னும் நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்... ஆனால் தெளிவாக இருக்கிறேன்...

ஏதோ ஒன்றில் பிழை இக்காட்சி , இல்லை நான் அல்லது அது... அட நான் திரைப்படமாபார்க்கிறேன்... அல்லவே...

ஒருவேளை ஏதோ ஒரு பள்ளத்தில் சறுக்கி வேறு உலகம் வந்துவிட்டேனோ.. இருங்கள் என் அறையில் தான் நான் இன்னும் இருக்கிறேன்...

சரிசரிஅது ஏன் இன்னும் ஏதும் பேசவில்லை நான் அருகில் செல்வதா வேண்டாமா?.. சென்று பார்ப்போம்...  அட இது கதவில் இருக்கும் உருவப்படமா? அட ச்சே.. அதுவும் இல்லை... பின் என்ன?

ஒருவேளை க்வாண்டம் ப்ரோஜக்ஷனா இருக்கும்... இந்த 2017 ல் இதெல்லாம் ஜுஜூபி.. என் மனம் சொல்லிக்கொண்டிருக்க நானோ பல்விளக்கிக் கொண்டிருந்தேன்...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم