சாட்டிலைட்_கவிதைகள்‬... இறுதி பகுதி..

நாம் நெருங்காத நொடியெல்லாம் நகராத யுகங்கள்...
நான் இருந்தாலும் நாமாகாமல் நான் நான் இல்லை...

எழாம் முறை உன் ஓர பார்வையை நான் கவனிக்க தவறவில்லை..
எதிர் நிற்கும் போதும் ஓர பார்வை என்பது.. நிராயுதபாணியை தாக்கும் கொடூரம்...

ஏன் என்று நான் கேட்டவில்லை . கேட்பதும் நாகரீகம் இல்லை...
நான் ஏன் சொல்ல வேண்டும் . பெண்ணுக்கு இன்று சுதந்திரமா இல்லை...




காரணம் தேவையில்லை. என் தேடலின் நிலை வேறு...
எனக்கு நீ ஏற்றவள் என்பது மூடத்தனம். நீ ஓன்றும் அத்தனை சிறப்பில்லை..

உனக்கும் வேறொருவன் இல்லை என்றில்லை .. உன் ஓர பார்வையின் கோர பசி என்னை தின்கிறது அவ்வளவே...
காலம் நிறைய இருக்கு.. காத்திருக்கும் தீர்மானம் கூட இருக்கு .. என்றாலும் ஒன்று இளமை குறைந்த காலம் தான்...

உன் பார்வையின் பசி அவ்வளவு சாதுவாக தெரியவில்லை... 
அதனளவு நாட்கள் இவ்வுலகுக்கு இல்லை...

விருப்பம் இருந்தால் கொஞ்சம் இறங்கிவா...
என் ஈர்ப்பினாலே என்னில் கலந்துவிடுவாய்...


நான் உன்னை விழுங்குவேன்..
நீ என்னில் நீராடுவாய்..


உலகம் பற்றி யோசிக்காதே.. உன் தேவையை
உலகம் ஏற்று யோசிக்காதே...


தினம் என்னை நீ வட்டமிடுகிறாய்....
நான் சுயமாய் சுழல்கிறேன்...


நீ தூரம் போய் நிற்கிறாய்... ஆனால்.
நான் சாரம் போய் நிற்கிறேன்...


பிறர்க்காய் உழைத்தே நாம் நளிந்தோம்.. இனி நாம்
அவர்க்காய் பிறக்கவில்லை என்றறியட்டும்...


வா உன் ராட்டின ராடார்களை அறுத்தெறி..
என் சுவாச வலையத்திற்குள் வந்து உன்னை அறி..

இப்படி தான் பூமி சாட்டிலைட் கிட்ட தன் காதலை சொன்னது...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم