ஆறடி ஆண்மகன் நான்...
ஆறாம் அறிவின் சிகரம் நான்...
இயற்கையை அறிய முற்படும் செயற்கைகோள் விஞ்ஞானி நான்...
ஈடென எவர்வரினும் ஒரு துளி கணம் நான்...
உலகம் என்னை மதிக்க மறந்தாலும் மிதிக்க சலிக்கவில்லை...
ஊனுருகி அழுதாலும் ஆதரவு யாருமில்லை...
என்னில் நிறைய திறனுண்டு சமயத்தில் நாடும் நாடக நண்பர்களுக்காக...
ஏதும் காட்டா குழந்தை முகம் எனக்களித்த சாபம்...
ஐந்தாம் முறையாய் முயற்சிக்கிறேன் இதுவரை தோற்ற தோல்வியை...
ஒடவோ ஒதுங்கவோ முடியாது நான் நானின்றி இவ்வுலகம் வாழாது...
ஓய்வெடுக்க விடாமல் இழிவுபடுத்தும் வித்தையில் தான் என்னவர்களுக்கு எத்தனை ஆனந்தம்...
ஓள மெனி டைம் யூ லூஸ் ... யூஸ் லெஸ் ஸ்டுப்பிட்... என் காதுகளுக்கு பழகிப்போன எண்ணை காய்ப்புகள்..
என்றேனும் ஒரு நாள் வெல்வேன் பார் உலகே... நீ
என் காலடியில் நாய்குட்டியாய் அலைவாய் பாருலகே...
إرسال تعليق