மாலை பொழுதில் மரம் தூறும் சாரலில்... நான் அவளை கண்டேன் எதிரில்.
நாளை பொழுது துவங்கும் வேளையில் நித்திரையின்றி... நான் அவளை கண்டேன் கனவில்.
பகல் முழுதும் பழகிபோன பாசிபிடித்த ஏசல்கள் சாபங்கள்... நான் அவளை கண்டேன் இரவில் கனவில்..
பிறர்க்கு என்னிடம் இல்லாததாய் தோன்றும் மூளைக்குள் பெயர்தெரியா சுரபிகள் சுரக்க ... நான் அவளை கண்டேன் பூங்காவில்...
நாட்கள் நகர நகர அறிமுகமில்லை பேச்சுக்களில்லை எங்கள் நெருக்கம் வளர... நான் அவளை கண்டேன் என் மூக்கின் நுனி உரசும் அவள் மூக்கின் ஸ்பரிசத்தில்..
நாளைய தினம் காதல் பேசலாம் என்றே இன்றே ஒத்திகை பார்க்கும் வேளையில்... நான் அவளை கண்டேன் என் முகம் பார்க்கும் கண்ணாடியில்..
இன்று மாலையே அவள் முந்திக்கொண்டாள் ஒத்திகை பாராமல் எப்படி சொன்னாளோ ... நான் அவளை கண்டேன் இனியகுரலில்.
விடிந்தது முதல் நாயாய் அலைகிறேன் அவளை காணவில்லை உடைந்து விழுந்த போது .... நான் அவளை கண்டேன் மணமகளாக
இன்னொருவனிடம் காதல் சொல்லத்தான் என்னிடம் ஒத்திகை பார்த்தாளோ? ... நான் அவளை கண்டேன் என் தோல்விகளின் மனித உருவாக.
إرسال تعليق