கடவுள் என்பது என்ன - 3 : உயிர்

கடவுள் என்பது என்ன - 3 : உயிர்


மீண்டும் ஒரு இதுவரை:
    நண்பர்களே இதுவரை நாம் கடவுள் என்பது என்ன தொடரில்.. அறிவு , மனம் முதலியன பற்றி பார்த்துள்ளோம்.. அதனை தொடர்ந்து அகம் பிரிவில் . உள்ள உயிர் என்பதை கடவுளுடன் ஒப்பிட்டு பார்க்க போகிறோம்..


உயிர்: 

   ஒரு மனிதன் வாழ்கிறான் என்பது அவனுள் உயிர் என்று ஒன்று உள்ளதா இல்லையா என்பதை பொருத்து தான் முடிவு செய்கிறோம்.. வேடிக்கையாக சொன்னால் இதோ இக்கட்டுரையை படிக்கும் போது நீங்கள் உயிருடன் தான் இருக்கின்றீர்கள்.


  சரி உயிர் எப்படி கடவுளாக முடியும்? தேடலாம் வாருங்கள்.. இம்முறை உயிர் என்பதால் நாம் ஆன்மீகம் சார்ந்தும் அறிவியல் சார்ந்தும் தேட வேண்டியுள்ளது... முதலில் உயிர் என்பதை பற்றிய ஒரு சாராம்சம்...

   உயிர் இது வரை விவரிக்க படாத, உணரக்கூடிய ஒன்று... ஜனனம் முதல் மரணம் வரை நம்மை கட்டுப்படுத்தும் ஒன்று.. இரண்டு உயிர் எப்போதும் வளர்வது இல்லை அவற்றுள்  பாரபட்சம் இல்லை.. குழந்தையாயினும் முடியவாராயினும் உயிர் ஒன்று தான்.. நமது உடலில் உயிர் ஒரு ஆப்ாரேட்டிங் சிஸ்டம் போல செயல் படுகிறது...

  நமது உடலில் உயிர் எங்கு உள்ளது? பலவேளைகளில் பலரால் கேட்கப்படும் கேள்வி இது.. பதில் இன்றும் தீர்மாணமாக இல்லை... இருப்பினும் ஆன்மீகம் அதாவது ரிக் யஜுர் ஸாம அதர்வன வேதங்களும் உபநிசத்தங்களும் , திருமந்திரம், யோக , ஆயூர் , ஸித்த
   வைத்தியங்களும்..  ஒன்றை சொல்கின்றன.. உயிர் நாம் முதுகு தண்டின் கீழ் இடுப்புபகுதியில் உள்ளதாய் சொல்கின்றன... மேலும் அறிவியலும் சில முக்கிய டெஸ்ட் சாம்பிள் போன்றவற்றை முதுகு தண்டின் கீழ் தான் எடுகின்றன...






சரி உயிர் எப்படி கடவுள் ஆகும்? ஆன்மீகம் தைரியமாய் சொல்கிறது உயிர் கடவுளின் ஒரு பகுதி என்று அதாவது துகள் அளவு.. அறிவியழோ மறைமுகமாய் இது கடவுளின் ஒரு டச் என்கிறது..


உருவமின்மை: உயிருக்கும் கடவுளுக்கும் உருவமில்லை.

பொருள் இன்மை: அதாவது திட திரவ வாயு என ஏதேனும் ஒன்றாக இல்லாமை . ஆம் உயிர் என்பது திடமா? திரவமா? வாயுவா? இல்லையே இவை மூன்றும் அற்ற அல்லது மூன்றும் கலந்த ஒன்று..

ஒளி பொருந்திய: கடவுள் ஒளி வடிவமென கேள்வி பட்டுள்ளோம் .. உயிர் ஒளியாய் விண்ணில் கலப்பதாய் கேள்வி பட்டுள்ளோம்..
சூத்திரம் அற்ற: ஆம் இன்றுவரை கடவுளும் சரி உயிரும் சரி இன்னதுதான் என ஒரு சூத்திரமோ அல்லது அளவகளோ இல்லை..

சூட்சுமமான : விவரிக்க முடியாத ஆனால் உணரக்கூடிய ஒன்றாக இருக்கிறது..

சக்தி : நாம் உடலின் மொத்த சக்தியையும் தானே ஆட்டுவிக்கிறது..

(தேடல்கள் தொடரும்)....

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post