கடவுள் என்பது என்ன? 2 - மனம்

மீண்டும் ஒரு இதுவரை...
  படிப்பவர்கள் ஆனைவருக்கும் ஒரு சின்ன முன்னுரை ... அதாவது நாம் இதற்கு முன் கண்ட பகுதிகளின் ஒரு சுருக்கம்....
கடவுள் என்பது என்ன? இந்த தலைப்பில் நாம் இதுவரை ஒரு அறிமுகம் அதாவது இதன் செயல் என்ன என்று பார்த்தோம்... பின் முதற் பகுதியில் மூளையை கடவுளாய் ஒப்பிட்டு பார்த்தோம்... இனி ...
அடுத்த தேடல்...
இப்போது நாம் அகம் என்ற பெரும்பிரிவில் மூளையை பார்த்தோம்.. இனி மனம் பற்றி பார்க்கலாம்...
முதலில் மனம்... அது என்ன மனம் நாம் செய்யும் செயல்கள் கனவுகள் என அனைத்தும் மூளையின் கட்டுபாட்டில் இருக்க மனம் மட்டும் என்ன தனியாக?.. சரி அப்படியே தனியென்று வைத்துக்கொண்டாலும் நம் உடலில் அதன் இடம் எங்கு? இது போன்ற கேள்விகள் முதன்மையாக தொன்றுதொட்டு வைக்கபட்டுக்கொண்டே இருக்கின்றன...
அறிவியல் படி நாம் மனதை ஆராய்வது சற்று சிரமம் தான்... ஆயினும் கடவுளை கண்டறிய வேண்டுமே...
மனம் உளவியல் ரீதியாக சொல்லப்போனால் காதலுக்கும்... நேச பாசங்களுக்கும்... பக்திக்கும்.. ஆசைகளும்... இச்சைகளும் தங்கும் இடம்... காரணம் மனம் நம்பும் மூளை நம்பாது...
இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்... பார்க்கலாம்... அதற்குமுன் உங்கள் மனதினை மூளையுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்...
மனம்.. ஒரு அதிசயமான ரகசியம் தான்... அதன் பரிணாமங்கள் தான் குணங்களை உருவாக்குகிறது...
காதல் நேசம் எல்லாம் உயிரியல் படி நம் உடம்பின் அணுவிலும் உள்ள நான்கு க்ரோமோசோம் ஆகிய அடினைன்... குவானைன்... தைமைன் அல்லது தைமசைன்... சியானைன் முதலிய இந்த நான்கு கூறுகளின் அமைப்பை சார்ந்து தான் குணங்கள் உருவாகின்றன .... இன்றைய அறிவியல் அல்லது மனிதவியல் ஆய்வாளர்களின்  நம்பிக்கையெல்லாம் இதுதான்... நாம் மேற்கண்ட இந்த நான்கின் அமைப்பினில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் சில சுரபிகளே... நம் நடவடிக்கைகளை செய்கிறது என்கின்றனர்...
உதாரணமாக.... அடினைன் நுண்கூறிலிருந்து சுரக்கும் அட்ரினலின் என்னும் சுரபு தான் நம்மை கோபப்படவும் பயபடவும் வைக்கின்றன ... பெரும்பாலும் இது போன்ற சுரபுகள் மூளையில் 65%மும்... உடலில் பல்வேறு பாகங்களில்.. மீத சதவீகிதமும் சுரப்பதாக ஒரு ஆய்வு தகவல் உள்ளது...
காதல் என்பது தைமசைன் அல்லது தைமைன்( கண்டுபிடித்தவர்கள் இருவராகதான் இருக்க வேண்டும் பெயரிடுவதில் சண்டைவந்திருக்கலாம்)  இருந்து.. சுரக்கும் தைடனலின்... மற்றும் சியானைனில் சுரக்கும் சியாமலின் (இது சரியா தெரியல உச்சரிப்பினால் வந்தபிழை) சேர்ந்து சுரப்பதால் உண்டாகிறது..
இதுபோல் பல சுரபுகள் நம் உடலில் பல்வேறு வேலைகளை செய்தாலும்.. நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது... சாதாரணமாய் யாருக்கும் காதல் வயப்படுவதில்லை... எல்லா நேரமும் காதல்செய்வதும் இல்லை . எப்போதுமே கோபமாய் இருப்பதும் இல்லை ... ஆனால் இந்த ரசாயன மாற்றங்கள் அதன் இஷ்டப்படி நடப்பதில்லையே..
அதற்கும் ஒரு தூண்டுதல் தேவை படுகிறது... அந்த தூண்டுதல் மனதிடமிருந்து தான் வருகிறது... ஆம் மனம் மூளையின் ஒரு பகுதி வேலையை செய்ய வைக்கிறது... உடல் உறுப்புகளை வேலைசெய்ய கட்டளையிடும் மூளைக்கே இந்த மனம் கட்டளையிடுகிறது...
ஒருவேளை இதயம் தான் மனமோ? ... காலங்காலமாய் என் மனதின் உச்சாணிக்கொம்பிலிருந்து என்னையே அசைக்கும் மகாசிறந்த கவிஞர்கள் அப்படித்தானே சொல்கிறார்கள்... ஏன் ... இதயத்தை திருடிக்கொண்டு உயிரினை தொலைத்த கவிஞர்கள் எத்தனை அவர்தம் பாடல்கள் தான் எத்தனை...
ஆனால் இதயம் தான் மனமா ... அட அது வெறும் சதை இயந்திரம் தானே.. நம் வீட்டிலிருக்கும் பில்டர் போல... ஆனால் அது துடிக்கிறதே... சுழலக்கு ஏற்றவாறு துடிக்கிறதே.... கமல் அவர்கள் அன்பேசிவத்தில் ... "இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்...  அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும் " என்று இதயத்தை அன்பின் கருவியாக சொல்கிறார்... ஆம் எரிதழலால் எரிக்கமுடியாத இதயங்கள் பல புதைக்கபட்டிருக்கின்றன...
ஆயினும் இதயம் என்பது தன்னிச்சையாக செயல்படுவது கிடையாது ... ஆனால் மாற்று இதயங்கள் செயல்படுகின்றன..
சரி இறுதியாய் ஒரு முடிவுக்கு வருவோம்... மனம் என்பது மூளையின் ஒரு உறுப்பு அதாவது தாளமஸ் அல்லது பினியல் கிளாண்ட் என்பது போல ஒரு கிளாண்ட் ... மெடுலா ஆப்லாங்கேட்டா எனும் முதுகு தண்டுடன் சேர்ந்த ஒரு கிளாண்ட் தான் மனம் என்பது...
சரி மனம் என்பது கடவுளா... ஆம் என்கிறது ஆன்மீகம்... ஆதாரங்களை தேடிகிறோம்நாம்....
கடவுளின் சில அம்சங்களை மனம் தன்வயபட வைத்திருக்கிறது...
ஆற்றல்.... மனதின் ஆற்றல் இப்பிரஞ்சத்தையே மாற்றவல்லது... எங்கோ இருந்த ஓர் அரசனை மனம் தான் புத்தனாக்கியது... விவேகானந்தரும் கூட...
அடங்காமை.... பல்வேறு விதங்களில் ஞானிகள் சொல்வதே மனதை அடக்கு என்பது தான்... மனம் அடங்காது அது ஆசைபடி அலையும்...
கற்பனை... மனதிற்கில்லாத கற்பனையா?..
திரிபடுதல்.. சமயத்திற்கு ஏற்றவாறு மாறுவதில்லையா?
வழிநடத்தல்... ஆம் மனம் ஞானிகளை நன்னிலை நோக்கி வழிநடத்துகிறது... சமயங்களில் நம் மனமே நம்மை பாதாளத்தில் தள்ளிய நிகழ்வுகள் இருக்கிறதல்லவா?
சத்தியம்... உங்கள் மனம் எப்போதும் சத்தியத்தின் வடிவாகவே உள்ளது... வெளியுலகில் எத்தனை தீயோர் ஆயினும் அவன் மனம் சொல்லும் அவன் செய்வது தவறென்று...
வடிவில்லாமை... தற்போதைக்கு நம்மால் மனதின் வடிவத்தை வரையறுக்க இயலவில்லை...
நிலையின்மை... விளக்கவேண்டிய அவசியம் இல்லை விலங்கு மனத்தால் என்று திருவாசகமும்... மனம் ஒருகுரங்குஎன்று வாலியும் பாடியது இன்றும் உங்கள் மனதிற்க்கு தெரியும்...
கருணை... அன்னை தெரசா போன்ற மனமுள்ளவர்கள் இன்று குறைவுதான் என்றாலும் ஏதோ ஓர் மனிதகுல மாணிக்கங்கள் தம் மனதினாலே கருணை செய்கின்றன...
அட இன்னும் கூட சொல்லாமே.... அப்புறம் மனம் தான் கடவுள்னு முடிவே பண்ணிருவீங்க... அதனால இதோட முடித்து.. தொடர்கிறேன்...
(தேடல்கள் தொட ... ரும்...)

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post