பெண்ணிடம்...

கைவளையல் போலிரு காதணிகள்...
பட்டாம்பூச்சி ஊஞ்சலாடவோ?
வளையல்களில் சிலசிறிய கம்மல்கள்....
எந்த பாட்டுக்கு தாளமடிக்கிறதோ?
உண்டு முடித்த இடத்தில் சிதிய பருக்கைகள்..
எந்த பறவைக்கு இரையாகவோ?
கையெந்திய நான்கைந்து புத்தகங்கள்...
அதற்குள் எத்தனை காதல்கடிதமோ?
அட இக்காலத்து பெண்ணிடம் எத்தனையோ நவீனத்துவம்...
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் இதுவோ?




உறங்கும் மார்பின் ஏற்றதாழ்வுகள்...
வாழ்க்கை சுழற்சி தத்துவமோ?
இடையில் கொஞ்சம் வளைவுகள் ...
வளைந்து கொடுக்கச்சொல்லும் அறிவுரையோ?
தேநீர் உற்றிய மேற்சட்டையின்  கிறுக்கல்கள்...
நவீன கவிஞனின் வரிபெற்ற சிம்மானமோ?
மரபணுவென்ற காற்சட்டை ...
இன்னொரு ரஷ்ய புரட்சியோ?
அட இக்காலத்து பெண்ணிடம் எத்தனையோ தத்துவம்..
நாணம் மறந்த நன்னிலை இதுவோ?
பாதி நிறைந்த பனிக்கூழ் விழுங்கினால்(ள்) ...
பார்வையாளனை வதைக்கிறது...
அடுத்தமுறை அருகமர ..
பேருந்தே தவங்கிடக்கிறது...
சாலைதனில் போனால் ...
மறியல்கள் மறித்துபோகிறது...
தேவதை என்ற சொல்லுக்கெல்லாம்...
தேவைகள் கிடக்கிறது...
அட இக்காலத்து பெண்ணிடம் இத்தனை வசீகரமா?
தேனீக்கள்சூழும் மலர் இதுவோ?...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post