அன்று ஈன்ற கவிதைகள்
இரவு என்பதென்ன விண்மீன்களின் காலம்
பெரிய வீட்டைவிட சின்ன வீட்டிற்கு மதிப்பதிகம் அதுபோல
பெரிய வீட்டைவிட சின்ன வீட்டிற்கு மதிப்பதிகம் அதுபோல
பேரொளி பகலைவிட சிற்றொளி இரவே இன்பம்
*****************************************************************************************************************************
தடைதகர்த்த புயலும் நீ - அதில்
தெறிக்கும் துகளும் நீ
தெறிக்கும் துகளும் நீ
நெல் புடைத்த காற்றும் நீ - அதில்
பறந்த உமியும் நீ
பறந்த உமியும் நீ
கடல் பரந்த நீரும் நீ - அதில்
நீந்தும் மீனும் நீ
நீந்தும் மீனும் நீ
என் பார்வை எதிலும் நீ - அதை
பார்க்கும் கண்ணே நீ
பார்க்கும் கண்ணே நீ
என்னதான் நீ
**************************************************************************************************************************
எல்லைக்கோட்டை தூக்கி செல்- எப்போதும் அதை தாண்டமாட்டாய்
என்னைக்கூட தூக்கி செல் -
எங்கேயும் துயர் காணமாட்டாய்
எங்கேயும் துயர் காணமாட்டாய்
என்னவென்று சொல்வேன் காதலை -
என்னுள்ளத்து நிகழ்ந்த மோதலை
என்றும் விரும்பேன் சாதலை
என்னுள்ளத்து நிகழ்ந்த மோதலை
என்றும் விரும்பேன் சாதலை
**************************************************************************************************************************
கரைக்கு என்ன தூரம் கடல் உள்ளவரை
தரைக்கென்ன பாரம் அவள் உள்ளவரை
மிதக்கும் மாயம் தவமின்றி
தாகம் தந்த வினை
தரைக்கென்ன பாரம் அவள் உள்ளவரை
மிதக்கும் மாயம் தவமின்றி
தாகம் தந்த வினை
*************************************************************************************************************************
அப்போது பார்த்த கடிதங்கள் - இப்போ
அவை செவ்வியல் காவியங்கள்
அவை செவ்வியல் காவியங்கள்
************************************************************************************************************************
அடிக்கடி மஞ்சள் பூசும் கோபுரங்கள் - மங்களம் நிறையட்டும்
**********************************************************************************************************************************
ஒரு செடியின் உரம் ஒரு தோட்டத்திற்கு போதுமா?
ஓங்கி வளர்ந்த காதலுக்கு ஒற்றை முத்தம் ஆகுமா?
ஓங்கி வளர்ந்த காதலுக்கு ஒற்றை முத்தம் ஆகுமா?
*********************************************************************************************************************
கடைசி பேருந்து
விட்டால் வழியில்லை
விடிந்தால் எதுமில்லை
விட்டால் வழியில்லை
விடிந்தால் எதுமில்லை
***********************************************************************************************************************
கால்வலிக்கும் தான் கடந்துவிடு
காலம் குறையும் தான் வாழ்ந்துவிடு
காலம் குறையும் தான் வாழ்ந்துவிடு
நாளை வருமென்று என்ன நிச்சயம் - இந்த
நாளை தொலைத்தபின் நாளை வந்தென்ன செய்யும்?
நாளை தொலைத்தபின் நாளை வந்தென்ன செய்யும்?
**********************************************************************************************************************************
நிலவின் மீது வீசிய கற்கள் - எனக்கான
நட்சத்திரத்தை வீசின
நன்றிகடனோ?
நட்சத்திரத்தை வீசின
நன்றிகடனோ?
************************************************************************************************************************
இன்று அவள் இருந்தாள்
இன்னும் இதயம் என்னிடம்தான்
இருந்தது..
இருக்கட்டுமே
அழகாய் இருந்தால்
இதயத்தைதான்
தரவேண்டுமா?
இன்னும் இதயம் என்னிடம்தான்
இருந்தது..
இருக்கட்டுமே
அழகாய் இருந்தால்
இதயத்தைதான்
தரவேண்டுமா?
அக்கௌண்ட் பைலை தந்துவிட்டேன்
அம்மேடம் வசைபாடும் முன்னே
அம்மேடம் வசைபாடும் முன்னே
*****************************************************************************************************************************
மேற்கில் இன்று சூரியனில்லை
மேகக்கூட்டமும் இல்லை
மேகக்கூட்டமும் இல்லை
எங்கேயும் காற்றென்பது இல்லை
என்னில் கூட சுவாசம் இல்லை
என்னில் கூட சுவாசம் இல்லை
ஆற்றினில் நீருமில்லை
அதிலாடும் நிலவுமில்லை
அதிலாடும் நிலவுமில்லை
காலடியில் மணலுமில்லை
காதுகேட்க குரலுமில்லை
காதுகேட்க குரலுமில்லை
அட இந்த விண்வெளி வாழ்க்கை கொஞ்சம் கூட இனிதில்லை
(கடைதெருக்களின் நெரிசலில் எழுதியது)
***************************************************************************************************************************
அங்கிருந்து வந்தன ஆசைகடிதங்கள்
அப்போதும் இருந்தன அந்தகவிதைகள்
அன்று தெரிந்தது அந்த களவாண்ட காதலி
அவ்வேளையி்ல் அந்த நிலவினில் இருந்தாள் என்று
அப்போதும் இருந்தன அந்தகவிதைகள்
அன்று தெரிந்தது அந்த களவாண்ட காதலி
அவ்வேளையி்ல் அந்த நிலவினில் இருந்தாள் என்று
(அப்புறம் என்ன படிச்சிட்டு படுத்து தூங்கிட்டேன் நாமெல்லாம் என்ன பாகுபலியா?)
*******************************************************************************************************************************
தூரதேசத்தில் சில பச்சை பூக்கள்
தூங்கா இரவில் சில நட்சதிரங்கள்
தூவானம் எங்கிலும் பல தூறல்கள்
துன்பத்தில் கூட சில சந்தோஷங்கள்
தூங்கா இரவில் சில நட்சதிரங்கள்
தூவானம் எங்கிலும் பல தூறல்கள்
துன்பத்தில் கூட சில சந்தோஷங்கள்
போதும் இவ்வாழ்க்கை இப்படியே ஓடட்டும்
******************************************************************************************************************************
சிறகினில் பிறந்த இறகென
சுதந்திரம் கேட்பேன்
கிளைதனை பிரிந்த சறுகென
சாவையும் கேட்பேன்
சுதந்திரம் கேட்பேன்
கிளைதனை பிரிந்த சறுகென
சாவையும் கேட்பேன்
அனைவருக்கும் அன்பைதரும் ஆறாக
அன்னை மனமாக வாழ கேட்பேன்
அன்னை மனமாக வாழ கேட்பேன்
அடுத்தவருக்கும் அணைக்கும் உதவும்
அளவில் கரங்கள் கேட்பேன்
அளவில் கரங்கள் கேட்பேன்
ஒருவேளை இறைவனைக் கண்டால்
**********************************************************************************************************************************
அருகிருந்து அலையவிடுவது
எந்தவகை ஊடலோ
அலைக்கும் கரைக்கும்
எந்தவகை ஊடலோ
அலைக்கும் கரைக்கும்
அதுபோல் தானே என்னிதய
அவஸ்தைகள்
அவஸ்தைகள்
**********************************************************
****************************************************************
தவறென்ன சிறு ஸ்பரிசத்தில்
தாகம் தீர்க்க தண்ணீர் குடிப்பதில்லையா!?
பிழையென்ன சிறு கூடலில்
பாடலில் தாளம் கூடுவதில்லையா?
தாகம் தீர்க்க தண்ணீர் குடிப்பதில்லையா!?
பிழையென்ன சிறு கூடலில்
பாடலில் தாளம் கூடுவதில்லையா?
மோகம் என்ன பெருங்கடலா?
மோதல் என்ன கர்ணகவசமா?
மோதல் என்ன கர்ணகவசமா?
இன்னும் கூட வெட்கமா? மொழிந்த சொற்கள் போல பொழிவாய் மோக மேகமே
***************************************************************************************************************************
உலையென கொதிக்கிறேன் - உனக்கென் தவிக்கிறேன்
உமியென பறக்கும்படி - ஓரிரு
முத்தம் தான் தந்திடு தூறல்களே
உமியென பறக்கும்படி - ஓரிரு
முத்தம் தான் தந்திடு தூறல்களே
*************************************************************************************************************************
விடுமுறையை எண்ணி திளைக்கும் குழந்தைபோல.... எண்ணி மகிழ்கிறேன் .. மழைதுளிகளை
**************************************************************************************************************************
மறந்தால் மீண்டும் முதலிலிருந்து துவங்கனுமாம்
மறந்துகொண்டே இருக்கிறேன் அவளது முத்தங்களை...
மறந்துகொண்டே இருக்கிறேன் அவளது முத்தங்களை...
*************************************************************************************************************************
காதருகினில் ஒரு குறள் - அதில் கொஞ்சும் / கொஞ்சம் கவிதைகள்
காதலியோ மடியினில்....
காதலியோ மடியினில்....
*************************************************************************************************************************
இரு சிகரங்கள் இடையில் கொஞ்சம் இடைவெளி - அதிருக்கட்டும் அவை சிகரங்களா ?
கோபுரங்களா?
*****************************************************************************************************************************
குற்றாலத்தில் ஐந்தருவி - அனைத்திலும்
குளிக்கும் அவள் பாஞ்சாலியோ
குளிக்கும் அவள் பாஞ்சாலியோ
*****************************************************************************************************************************
தரைதளத்தில் ஒரு பெண்ணழகி - நான்
தரையில் இல்லை ...
தரையில் இல்லை ...
*****************************************************************************************************************************
நாளடைவில் என் விழிகள் சுருங்கின
நாற்பதடிக்கு மேல் பார்வை தெரியவில்லை
நேற்றைய தேதி நியாபகம் இல்லை
நினைவிருக்கிறது
காண்பதெல்லாம் நீயாய் தெரிந்த காதல் சூன்ய காலம்
நினைவிலில்லை
காலம் கடந்தாயிற்று நீ இறந்து என்று
அதனால்
உயிரிருக்கிறது
பைத்தியமாய் திரிவதை காட்டிலும் சுதந்திரம் உண்டோ
ஆகவே இத்தலைமுறைக்கு சொல்கிறேன்

ஆதலால் காதல் செய்வீர்
*****************************************************************************************************************************
இப்போது மடிந்தால் இம்மேகதாரகை!
சில நூறு தூறலாய் அதில் நூறு சாரலாய்!
குளமாய் நதியாய் கடலாய் ஊற்றாய்!
உயிர்த்தாள் உயர்ந்தாள் நடந்தாள் படர்ந்தாள்....
சில நூறு தூறலாய் அதில் நூறு சாரலாய்!
குளமாய் நதியாய் கடலாய் ஊற்றாய்!
உயிர்த்தாள் உயர்ந்தாள் நடந்தாள் படர்ந்தாள்....
****************************************************************************************************************************
மழை தாய்வீடு சென்ற மருமகள் ....
மழை தாழ்ந்துவந்த புதுகடல்....
மழை தாழ்ந்துவந்த புதுகடல்....
************************************************************************************************************************
அடுக்கடுக்காய் சேர்த்த மேகமெல்லாம் - இன்று
அத்தைவீட்டுக்கு வந்தனவோ ?
அத்தனை தூறல்களாக!- இங்கு
அமிர்தம் தூவினவோ....?
அல்லது பிறந்து வளர்கின்றதா!
அத்தைவீட்டுக்கு வந்தனவோ ?
அத்தனை தூறல்களாக!- இங்கு
அமிர்தம் தூவினவோ....?
அல்லது பிறந்து வளர்கின்றதா!
***************************************************************************************************************************
இன்றும் கூட எஞ்சியிருக்கிறது
நாளை உலகம் உன் புகழ் பாட - இருக்கிறது
ஒரு வாய்ப்பு
ஒரு வாய்ப்பு
இன்னும் கூட யோசனை எதற்கு
கனவுகள் காண்பதற்கு மட்டுமல்ல - அதற்கு
நனவாகும் ஆற்றல் உண்டு
கனவுகள் காண்பதற்கு மட்டுமல்ல - அதற்கு
நனவாகும் ஆற்றல் உண்டு
*******************************************************************************************************************************
إرسال تعليق