அணுவின் அண்டம்:
ஆரம்பததிற்கு முன் :
நீங்கள் இவ்வேளையில் , இனிய மாலையில் மழைத்தூறும் சாரலில் குளிற்காற்றில் சுடும் தேநீர் சுகம் துய்க்கலாம் அல்லது தனியறையில் மூலை பிரதேசத்தில் அமர்ந்து அன்றுமுதல் இன்றுவரை ரகசியமாய் காப்பதாய் சொல்லி அனைவரின் கைகளிலும் மூளையிலும் படிந்த அந்தமாதிரியான புத்தகங்கள் படித்து ரசித்து கொண்டிருக்கலாம். அல்லது பேருந்தில் ஜன்ணளோற இருக்கையில் அமைதியாய் தியாநித்திருக்கலாம் ; இல்லை உங்கள் முதலாளியிடாமோ காதலிடமோ வாங்காத வசை வாங்கிக்கொண்டிருக்கலாம். இல்லை இடத்னையும் விட்டு ஜென் நிலை அடைந்திருக்கலாம். இவ்வேளையில் இது எதற்கு என்று கேட்கலாம்; அவசியம் தான் அறிவது அவசியந்தான்; சான்துணையும் கல்லதோர் என்பதுபோல் மரணத்திற்கு சில நொடிகள் முன்கூட இந்த அறிதல் அவசியம் தான்; நாம் பிறந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரும் அதிசயம் இது; பிறவிப்யன்இது..
அட எங்களுக்கு தெரியாதா ? அணுவை பற்றி; சின்ன குழந்தைக்கூட சொல்லும் ; இப்ப கூதந்க்குளத்துல கூட அதான; என்பாற்க்கே இந்த கட்டுரை மேலும் அவசியம்.
சரி அணு என்றாள் என்ன? கல்லா ; நீரா; மண்ணா; காற்றா; காதலா; அல்லது ஆகாயமா? என்றாள் அத்தனையும் என்பதே என் பதில்..
யார்றா இவன் அணுனா ப்ரோட்டான் ; எலக்ட்ரான்; நுத்திரான்; நீயுகிலியச் ; பாசித்றான்; +/- அவ்ளோத்ானே ..
அட ஆமாங்க இதுக்கு எல்லாம் தமிழ்ல என்ன சொல்லுங்க பார்க்கலாம்?
வெள்ளக்காரன் கண்டுபிடிசான் ; அவன் பேரு வெச்சான் தமிழ்ல எப்புடி அதுக்கு பேரு இருக்கும்...
அணுங்குற வார்த்தை பல ஆயிரம் வருசம் முன்னவே தமிழ்ல இருக்கு தெரியுமா? அணுவையே பார்த்தவங்க அதுக்குள்ள மட்டும் பார்த்துறுக்க முடியாதா? சரி நாம ஒரு பேரு வச்சிக்கலாம்..
ந்யூக்லியஸ் - கரு
ந்யூட்ராந்ஸ் - சமனித்த்துகள்
ப்ரோடாந்ஸ் - கருவிடததுகள்
எலெக்ட்ராந்ஸ் - எதிர்விசைத்துகள்
பாஸிட்ராந்ஸ் - நேர்விசைத்துகள்
அது என்ன அணு? :
அணு ஒரு பொருளின் நுண்ணிய கட்டமைப்பு ; அதாவது நீங்கள் வெய்யிலில் ஒளியில் பறக்கும் தூசிகளை பார்த்திருந்தால் அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு; அல்லது உங்கள் உடலை கோடி மடங்காய் பிரித்து அதில் ஒரு மடங்கின் லட்சத்தில் ஒரு பங்கு
கண்ணுக்கு தெரியாத கிருமீனு சோல்திரோம் இல்லையா அதில் நூற்றுல ஒரு பங்கு. இப்படி நமக்கு எளிதில் புலப்படாத காணமுடியாத ஒரு துகளின் துகள் அணு; ஆனால் அதற்கும் வடிவமுண்டு , எடையுண்டு , விசை, பரப்பு, செயல்பாடு, ஆக்கம், அழிவு, வினை , எதிர்வினை, எல்லாம் உண்டு. இதுவே ஐன்ஸ்டீன் ; நியூட்டான் , கெல்விந் , கெப்லர் , போர், மற்றும் க்வாண்டம் சித்தாந்தங்களின் மூல படிமம்.
மேற்சொன்னவைகள் அனைத்திற்கும் ஒரு சக்தி தேவை . எங்கிருந்து வருகிறது இந்த சக்தி என்பது தான் இன்னும் அறிவியலின் அறியாத ஒரு படலம். என்றாலும் பல்வேறு தேடலில் அதற்கான சக்தி அதனுள் இருந்தே வெளிப்படுவது குறித்து விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்..
(தொடரும்)
إرسال تعليق