அன்று இந்நிகழ்வு இல்லையேல் அதை ஒரு தினமாக கருதகூட தேவையற்ற அற்பநாள்.. எனதறையில் மங்கிய ஒளியில் , அதை விழுங்கிட முயலும் இருளில் , மேல் சுழலும் மின் விசிறியின் சலனம்தவிர அனைத்தும் நிசப்தம் . தூக்கமில்லை துக்கமும் இல்லை வெறும் சிந்தனைகள் மட்டுமே; வசதியாய் படுத்துக்கொண்டு வாயிற்கதவை பார்த்துக்கொண்டு...
அங்கும் இங்கும் அலையலையாய் எழும்பிய சிந்தனைகள் எனை மீண்டும் என் கடந்த காலத்திற்கே திருப்புகையில் , சிந்தனையில் சலனம் , எத்தனை தோல்விகள் , அதன்பின் பேசபட்ட கேலிகள் , அதனால் வருந்தியும் கோபத்தை வெளிக்காட்டாத சகிப்புகள், அத்தோல்விக்கு பின்னிருந்த துரோகங்கள் , அதன்பால் நான் செய்த தியாகங்கள் ...
அய்யகோ! எதற்குத்தான் திறனுடன் பிறந்தோமோ? என்றிருக்க யாரோ என்றோ சொல்லி அது என் முளையின் ஏதோ ஒரு செல்லில் பதிந்து அப்போது வந்த வாசகம் வாக்கியம் "திறமையெல்லாம் கடவுள் கொடுத்த வரம்பா தானா வரது நீ வெறும் கருவி தான்"
அதானே கடவுள் குடுத்ததால் தானே இன்று இ்வ்வளவு திறமை.. ஆனால் கடவுள் என்னிடத்துல ஏன் தரணும் அப்படி குடுத்திருந்தா நான் ஏன் தோற்கணும் ? இப்படியாக சிந்தனை கடலினை கடைந்து கடைந்து வந்த கேள்விகளை பெற்று மீண்டும் கடைந்து கடைந்து இப்போது ஆழ படிமத்திலிருந்து மிதந்து வந்த கேள்வி "கடவுளின் வரங்கள் எப்படி தரபடுகிறது ? எவ்வாறு தரப்படுகிறது?"
என்றே யோசித்து யோசித்து உறங்கிவிட கணவனிடம் சண்டையிட்டு தாய்வீடு புகுவதுபோல் நடுநிசி நிறைந்தது.. அறைமயக்க நிலையில் எழுந்து நிற்கிறேன் . திரும்பி பார்க்கிறேன் என் உடல் தரையில் கிடக்கிறது . சுவாசமில்லை அதிர்ச்சியும் இல்லை இப்போது இது பழகிவிட்டதல்லவா
மீண்டும் அறைகதவின் துவாரங்களில் ஒளி கசிந்து அறையிருள் தின்க, கதவை திறந்து வெளியே வந்தேன் , இது விண்வெளியில்லை என்பது எப்படி நிச்சயமோ அதுபோல பூமியுமில்லை என்பதும் நிச்சயம்.. படர்ந்த வனாந்திரம் முழுக்க பூத்திருக்கும் பூக்கள் , வண்டுகளின் வேலைநிறுத்தம் போல , வாசனை மணக்கிறது..
வெயில் ஒளியை மிஞ்சம் பேரொளி ஒளியின் சுவடுபற்றி பயணிக்க சிறிதுதூரத்தில் பெரும்மலை போல ஈசனின் நடராஜ தரிசனம் உள்ளம் பொங்கி விழியில் வழிய இறைவா என்றபடி கரம்கூப்பி கண்கள் மூடி தாழ்சடை சரிந்தது போல் தரையில் விழுந்தேன் ...
இறைவனோ ! அடேய் பக்தா எங்கு பார்த்தாலும் யாருக்கு காட்சிதரினும் கண்ணைமூடி வேண்டுகிறீர்களே பின் எதற்கு நான் இத்தனை சக்தியை விஸ்தரித்து தரிசனம் தருகிறேன் மடையனே ... என்றார்
எதிரிருப்பது ஈசனாயிற்றே எப்படி திட்டுவது இன்னேரம் கிருஷ்ணனா மட்டும் இருக்கனும் சரி அவன் நண்பன் இவன் நடுவன்..
வேறென்ன செய்ய சொல்கிறாய் ஈசனே? உன் எண்ணம் புரியும் அறிவிருந்தால் பின் ஏன் இப்படியிருக்க போகிறோம் சொல்..
சரி நீ கேட்கவேண்டியதை கேள் நிறைய வேலை கிடக்கிறது...
என்ன கேட்கனும் அதுக்குள்ள மறந்துபோச்சே ஆங் இறைவா நீ தரும் வரங்கள் என்பதென்ன ? அதை எப்படி எங்களுக்கு தருகிறாய்? அதைசொல்லேன்..=
முதலில் என்னை நன்றாக பார் என் மேல் உன் கற்பனைகளை பொழிந்துவிடு அவை என்னுடன் உரசி அழிந்தவை போக மீதத்தை எடுத்து செல் அதனை உனக்குள் புகுத்து பின் பகுத்து அதனால் ஞானத்தை பெறுவாய் ...
ஓ அதனால தான் அபிஷேகம் பன்றாங்களோ? சரி அப்படி செய்வதால் எனக்கு கிடைப்பதென்ன
இதோ என்னை பார் முழுதாக பார் எனை சுற்றிலும் பார் என்மீது உன் கற்பனைகளை நீ இதுவரை கற்றதை செலுத்து அதில் தேவையற்றதை நீக்கு தவறுகள் என்னால் தீர்க்க படும் பின் கிடைக்கும் விகுதியை பிற செயல்பாடுகளில் பயன்படுத்து இதோ இக்காட்சி தருகிறேன் உன் சந்தேகங்களை என் மேல் செலுத்தி உன் கற்பனையால் என்னை ஒருமுறை சலவை செய் உன் சந்தேகங்களுக்கான விடைகிடைக்கும் பார்..
இதோ செய்து பார்கிறேன் . ஆனால் நடராஜ கோலத்தில் நிற்கும் உன்னில் நான் எந்த சந்தேகத்தை செலுத்தி தெளிந்து கொள்வேன் ?
உனக்கு இப்போது சட்டேன தோன்றும் சந்தேகமென்ன?
சரி எனக்கு பூமியின் ஆக்கத்தை பற்றியும் யுகங்களில் அழிந்து மீண்டும் தோன்றுவதாய் சொல்கிறார்களே அது தான் சந்தேகம் ..
சரி பார் என்னை நன்றாக பார் கற்பனைகளை தூவிபார் நானே பதிலும் சூட்சமமுமாய் நிற்கிறேன் பார்!!!
ஆம் இறைவா புரிகிறது உன் சூட்சுமம் புரிகிறது. இதோ உனை சுற்றியுள்ள திருவாட்சியை அதாவது அந்த வட்டத்தை பூமியின் காலத்தின் வட்டமாக கொண்டால் அதன் மேல் பூமி பயணிப்பதாக கொண்டால் ; இதோ உன் இடையிலிருந்து சரியும் இந்த ஆடையே துவக்கம் என்றால்; அது துவங்கி பூமி பயணித்தது என்றால் ; அதை சற்றி பொருந்தியிருக்கும் தீபங்களை எண்ணி லட்சம் ஆண்டுகளாக கொண்டால் 5 லட்ச ஆண்டுகளாய் பூமி ஒளி பிரதேசமாக சூரிய துண்டாக ஜனித்தபடியே கடந்தது என்றறிகிறேன்...
பின் கையில் ஏந்திய தீயால் தீயின் அளவு குறைந்து அடங்கியது என்று தெரிந்தேன், பின் லட்சம் ஆண்டுகளுக்கு பின் உன் பிடரிகள் பறக்கின்றன அப்படியானால் காற்று உண்டாகியிருக்க வேண்டும் பின் மேலும் 5 லட்சம் வருடம் கடந்து தலையில் கங்கை ஏந்தியுள்ளாய் தண்ணீர் பிறந்திருக்க வேண்டும்;
பின்னா் காற்றும்தீயும் தண்ணீரும் கொண்டு பூமி பயணிக்க இரு இரு இப்புறம் பிடரி அலைய காற்றும் அலைய வேண்டுமே ? ஆம் அப்போது தாவரங்களும் பிறந்து காடாய் வளர 5 லட்ச வருடம் பின் இடக்கையில் ஏந்திய உடுக்கை என்றால் சப்தங்கள் தோன்றிட வேண்டும் ...
பின் 2 லட்ச ஆண்டுகளுக்கு பின் இடையில் இருக்கும் நாகம் தலையுயர்த்துவதால் ஊர்வன பிறந்திருக்க வேண்டும் ; பின் 3 லட்ச வருடங்கள் உயிரினங்க் வளரந்து வளரந்து நின் பாத நிழலில் அறிவுபெற்று ஓரரிவு முதல் ஐந்தறிவு வரை வளர்கிறது ; பின் மேலும் வளர்ந்து 4 லட்ச வருடங்களாய் மனிதம் நின் திருவடி நிழலில் வாழ்கிறது எங்கள் மேல் நின்று ஆடியபடி எங்களையும் ஆட்டுகிறாய்.
ஆனால் இறைவா எப்படியோ மனிதனை முன்னிருத்தி கால கணக்கிட்ட தீபத்தை மறைத்து வைத்துள்ளாய் அதை அறிய இன்னும் ஞானம் வேண்டும் போல
இறைவா ! எத்தகைய அறிவிது இச்சிறு காட்சியில் கொணர்ந்தாயே ஈசனே இப்போது அறிகிறேன் நாங்கள் ஏன் இத்தனை அறிவிழந்து அலைகிறோம் என்று
உன் நிழலில் நிற்கிறோம் என்பதை அப்பர் திருநாவுக்கரசர் சொல்லியிருந்தும் அறியவில்லையே அல்லது அறிய முற்படவில்லையே ஆம் இச்செய்யுளை பாருங்கள்
மாசில் வீணையும் மாலை மதியனும்
வீசும் தென்றலும் வீங்கிள வேனிலும்
பூசும் வண்டலை பொய்கை போன்றதே
ஈசா உந்தன இணையடி நிழலே!!!
வீசும் தென்றலும் வீங்கிள வேனிலும்
பூசும் வண்டலை பொய்கை போன்றதே
ஈசா உந்தன இணையடி நிழலே!!!
இப்போது உணர்ந்தாயா பக்தா? நான் தரும் வரங்கள் அனைத்தும் ஞானமே அதன் விருத்தியும் செயலுமே திறமை
அதுபோல் எவரும் தன் முனைப்பால் தேடாதவரையில் அவர் கற்பனை என்மேல் படராத வரையில் என்னால் எவ்வித வரமும் வழங்கவியலாது என்றார் ஈசன்
அதுபோல் எவரும் தன் முனைப்பால் தேடாதவரையில் அவர் கற்பனை என்மேல் படராத வரையில் என்னால் எவ்வித வரமும் வழங்கவியலாது என்றார் ஈசன்
அத்தாழ் சடையும் பவளமேனியில் வெள்ளிபோல் படர்ந்த நீரயும் ; திருநடன காட்சியையும் கண்டறிந்த ஞானத்துடன் என்னறை புகுந்தபோது விடிந்தது
எனக்கான ஞானவிடியலிது
பின்னொருநாள் லிங்கவடிவில் பெற்ற அறிவை ஞானத்தை வேறொரு கட்டுயரையாய் சொல்கிறேன்
( கனவுகள் தொடரும்....=)
إرسال تعليق