அமைப்பு:::
பொதுவாகவே ஒரு அணுவின் அமைப்பு ஒரே சீரானது. ஒரு அணுவை ஒரு துகள் என்று வைத்துக்கொண்டால் அத்துகளின் துகள் என்ன? அதுவும் துகள் தானே அதுபோல்.
இந்த அணுவின் அமைப்பை அன்றே அதாவது சென்ற நூற்றாண்டே கண்டறிந்துள்ளனர்.. பிரபஞ்சத்திற்கும் முன் தோன்றிய அணுவை அறிவியல் எட்டிபார்த்ததே 20ஆம் நூற்றாண்டில் தான் எனலாம். எனினும் ஒருவகையில் ஜென் தத்துவமும் , பகவத் கீதையும், இன்னும் சில தமிழ் செய்யுள்களும் அணுவை சொன்னதாக அறிகிறோம் . என்றா லும் விஸ்தாரமாக பூதாகரமாக ஆய்ந்தது 1904ல் ஜே.ஜே.தாம்சன் மற்றும் லார்ட் கெல்வின். இருவரும் இதனை முதலில் கண்டறிந்தனர் அவர்கள் அதனை பிளம்பட்டிங் மாதிரி என்றனர், அதாவது ஒரு செர்ரியை சுற்றி கேக் அமைக்கபட்டு அதனுள் ஆங்காங்கே சில சின்ன சின்ன செர்ரி துண்டுகள் இருப்பது போல...
அணுவின் அமைப்பானது மையத்தில் கருவும் அதனுடன் கருவிடத்துகளும் மிக அடர்த்தியான வலுவான பிடிப்பினால் பிணைக்கபட்டிருக்கும் . இதில் கருவிடத்துகள் நேர்விசையைக் கொண்டது. அதனை பாதுகாக்க அதனை சுற்றி எதிர்விசைத்துகள்கள் சுற்றிகொண்டே இருக்கும் . நடுவினில் இருக்கும் கருவில் சமநித்துகள் கருவிடத்துகளுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும்.
கருவினில் இருக்கும் சமநித்துகளும் கருவிடத்துகளும் சரிபாதி அளவில் இருக்கும். எடையிலும் சரி எண்ணிக்கையிலும் சரி சமமாய் தான் இருக்கும்.
இயல்பு::::
எவ்வித பொருளுக்கும் தனக்கான இயல்புண்டு; அதுபோல் அணுவின் இயல்பு என்னவென்றால்? அதன் அமைப்பில் தொடர் செயல்பாடுகளும் , புணர்தல், புதிதாய் பிறத்தல், அழிதல் ஆகியன..
கருவை சுற்றும் எதிர்விசைத்துகளும் அதன் சக்தியும் சுற்றுவிசையும் எதிலிருந்து வருகிறது தெரியுமா?
கருவிடத்துகளுக்கும் சமநிதுகளுக்கும் ஏற்படும் உராய்வினால் ; கருவிடத்துகளிலிருந்து நேர்விசைதுகளும் ; சமநிதுகளிலிருந்து வெற்று சமநிலைத்துகள் குளம் உருவாகிறது . நேர்விசைத்துகள் வெளிபிரதேசங்களில் வழிந்துவிடுகிறது. எதிர்விசைத்துகள்களை கருவிடத்துகள் ஈர்ப்பதால் அந்த ஈர்ப்பினை எதிர்விசைத்துகள் எதிர்ப்பதால் அவை சுழல்கின்றன.

ஒரு அணுவின் அழிவு என்பது எப்படி நிகழ்கிறது தெரியுமா?
சுற்றிவரும் எதிர்விசைத்துகள்கள் அதன் சக்தியை இழப்பதால் ; அதாவது நீண்டதூரம் நாம் ஓடியபின் பலமிழந்து சாய்வதில்லையா அதுபோல் அதன் பலமிழந்து ஈர்ப்பினால் மீண்டும் கருவுக்குள் விழுந்து. சமநித்துகளாகும் . இவ்வாறு மெல்ல மெல்ல தன் பாதுகாப்பு குறைவதால் படையிழந்த மன்னன் போல் கரு துவண்டுவிடும். அப்படியே சரிந்து சரிந்து அழிந்துவிடும் . அல்லது வேறோரு அணுவுடன் மோதி கரு உடைந்து அழிந்துவிடும்.

அப்படி உடைந்த அணுவிலுள்ள கருவிடத்துகளும் ஏற்கனவே தான் வெளியேற்றிய வெற்று சமநிலைத்துகள் குளத்தில் விழுந்து மீண்டும் எஞ்சியுள்ள கருவிடத்துகளும் , சமநித்துகளும் சேர்ந்து வேறோரு புதிய அணு உருவாகும். அப்படி உருவாகும் போது நேர்விசைத்துகளை நோக்கி நகரும் அவ்வேளையில் எதிர்விசைத்துகள்கள் உருவாகும்.
[ இத்துடன் இக்கட்டுரை முடிந்தது. அணுவின் உலகம் பற்றி அறிந்தால் போதும் என்போர் மட்டும் இத்துடன் கழன்றுகொள்க . இனிதான் இந்த தலைப்பின் பகுதியை நெருங்க போகிறோம் இத்தலைப்பில் நான் சொல்ல நினைப்பவை எல்லாம் இனிதான் இனிதாய் துவங்கப்படும் . எனவே மற்றவர்கள் அணுவினால் உருவான அண்டத்தை பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்க வேண்டுகிறேன்]
إرسال تعليق