நனையாத மனிதர்கள் உணர்வதில்லை

ஞாயிரிலும் திங்கள் இருக்கிறது -
திங்களிலும் சூரியன் உதிக்கிறது - அதுபோல்
இரண்டற கலந்திடவா வா


பூமியில் இல்லை சமதர்மம்
பூக்களில் இல்லை சமதர்மம்
அணுவிலும் இல்லை சமதர்மம்
மேக மழைக்கது சிறப்பன்றோ



விழும் துளிகள் எல்லாம் வரங்களே
தேவைக்கேற்ப எடுத்துகொள்ளுங்கள் 
போதவில்லையென்றால் நனைந்து குளிருங்கள்

நனையாத மனிதர்கள் உணர்வதில்லை
நரம்பினில் பெருகும் உணர்வினை
உடலில் சுரக்கும் அட்ரினலைனை
உள்ளத்தில் பெருகும் இன்பத்தினை
உயிர் பெறும் சுகத்தினை
ஆம் நனையாத மனிதர்கள் உணர்வதில்லை

பூமி திறந்து இருக்க
மனதும் திறந்திருக்க - இங்கு
இன்ப காற்று நுழைய
இதயம் கூட நிறைய
அன்பும் குளமாய் நிறைய
அங்கும் மனிதம் நனைய
வேறேன்ன வேண்டும்?
இன்னும் ஒரு பிறவி

தாகம் தீர்ந்துபோச்சு . தடாகம் நீர்த்துபோச்சு
வானம் தூறிபோச்சு. நம்ம பூமி ஊறிபோச்சு
காலம் மாறிபோச்சு. துயர் ஓடுபோச்சு
இனியெல்லாம் இன்பமே
இவள் அருள் வளமே
பசியில்லை குறைவில்லை
பாசிக்கும் பஞ்சமில்லை

காமம் ஒழிந்த காதலனாய்
காதலுடன் கேட்கிறேன் - அன்பே
கருணை புரிந்து - மறுமுறை
காதலாய் பொழிந்துவிடு - இக்காமுகன்
தாகம் அழிந்துவிடு

அன்று பெய்த துளிகள் தான்
இன்று அது தேன் துளிதான்
நல் மலரின் மேலே பொழிந்ததனால்

உனக்காக மண்ணில் பிறந்தேன்
எனக்காக நீயும் பிறந்தாய் 
இனியும் என்ன? இன்பம் எய்த

மறுகண்ணம் காட்ட
நான் ஏசுநாதன் தான் - மறுமுறை
நனைய செய் மழையே

உன் தீண்டலில் என் உடலெங்கும் குளிர்கிறதே -
 அதுபால் நீ துய்க்கும் சுகமென்ன 
சொல் துளியே மழைத்தத்துகளே

என்மேல் நான் கொண்ட காதல் - தோற்றது
என்மேல் பட்டு சிதறும் தூறலின் தூறலால்

எங்கோ இருக்கும் சூரியன்
இங்குள்ள நீரெடுத்து 
நமக்களித்த பரிசு 
நாம்பெரும் மழை

மழைதனில் மரமாகிறேன்
மழலையின் குணமாகிறேன்
நனைகையில் நலமாகிறேன்
நனைந்தபின் சுகமாகிறேன்

எந்தன் சுவாச காற்றில் கரைந்தாயோ?
அதன் உஷ்ணம் உனை கரைத்ததோ?
எனை குளிர்விக்க இத்தனை தூறலோ?
இதயத்தின் ஆசைக்கு பொழிந்தாயோ?
இல்லை பயிருக்கு சத்தியம் மொழிந்தாயோ?

மண்ணில் விழுந்திருந்தால் மேகமாவாய்
மரத்தில் விழுந்திருந்தால் உயிராவாய்
கடலில் விழுந்திருந்தால் உப்பாவாய்
சிப்பியின் முத்தாவாய்
என்னில் விழுந்ததனால் தமிழானாய்
பிறவிபயன் பெற்றாய்

காற்றுக்கு பிறந்தாயோ?
வானவில் வரைந்தாயோ? - அல்லது
காட்டிற்கு பிறந்தாயோ?
மலர்களில் கனிந்தாயோ?

உடலோடு ஒட்டிக்கொண்டாய்
ஈரமாய் உன்னை காட்டிக்கொண்டாய்
என்னோடு ஒன்றிவிட்டாய்
என்றாலும் நனையவிட்டாய்
உன் காதல் நானோ ?
என் காதல் நீயோ?
யாரறிவார் நாம் கலந்தது புணர்வென்று!!=...
                                             *
ஒரு தீண்டலி்ல் என்னுடன் கலந்துவிடகிறதே!
அப்படி எவ்வளவு காதலோ என்மேல் 
அந்த மழைதுளிக்கு!...
                                            *
பெரும் இருள் கொல்ல சிறு ஒளி போதுமே
பெரும் துயர் கொல்ல சிறு புன்னகை போதுமே
                                          *
தன்னை போலன்று என்பார்கெல்லாம்
தானாய் தயயைபுரிந்த தயாபரமே




إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم