வழக்கு
[click the image to download pdf file]
ஏம்பா,
ராஜரத்தினம் அது என்னப்பா கேஸு ஊரே பரபரப்பா பேசிக்குதே? . என்னது அது விவரமா சொல்லு என்றான் கணபதிராம்; தவறிகூட ஏதேனும் பாவஞ்செய்யேனு வம்படியா நிற்கும் அப்படியே பாவம் செய்ஞ்சிட்டோம்னு நெனச்சாகூட சிரமபரிகாரம்; ஜலஷ்ணானம் நு புண்ணியப்பட்ட ஆத்மா ; அக்மார்க் ஐயர்வாழ். குளத்துல ஊரின மட்டையாட்டம் கொஞ்சமா சதைபோட்ட உடம்பு பாவம் வயசாகிறதொல்லியோ! நெத்தி
நிறைய சந்தன கடாக்ஷ்மா டீக்கடை பக்கம் வந்தா அப்படியே பகவானே வந்தமாதிரி இருக்கும்; அவருக்குள்ள ஒரு தேஜஸ் மின்னுதே அடேயப்பா; அந்த மனுஷன் செஞ்ச மூணே நவீன விசயம் குடுமியில்லாதது; ராஜரத்தினம் போன்ற சக மனிதர்களோட சமமா பழகறது; பகவானே கதின்னு இல்லாம சமூகத்திலயும் அக்கறை காட்ற்றது..
சொல்லூப்பா
ராஜரத்தினம்,
எம்புட்டு நேரமா உன் வாயவே பாக்குரது; இல்லண்ணே முதல்ல டீய குடிங்க நீங்க கேட்டு சொல்லகூடாதுனு என்ன?நம்ம ஜனார்த்தன் தான் ஜஜ்; இதுல என்ன சிறப்புனா? சினிமாவுல வரமாதிரி க்ரைம் லாயர், வெங்கடேஷ்; சிவில் கேஸுல ஆஜர் ஆகுறார்..
க்ரைம்
லாயர் , சிவில் கேஸுலயா? அதும் வெங்கடேஷா?யாரு?அந்த நிவேதா கேசுல பிரபலமானானே அவனா?என்றபடி உள்ளே நுழைந்தார் பார்த்தசாரதி; இவரோ கணபதிராமை சரியா வேலை செய்யாத மெஷின்ல எடுத்த ஜெராக்ஸ். ஆனா நிறைய படிச்சிருக்கார்; படிசிண்டுஇருக்கார்…
ராஜரத்தினமோ, ஆம்
என்றார்போல்;
தன் சதுரத்தை செதுக்க தெரியாமல் செதுக்கியது போன்ற முகத்தை அசைத்தார். அட அவன் வில்லங்கம் புடிச்சவனாச்சே கேஸே இல்லைனாலும் குற்றவாளியாக்கி ஜெயில்ல உக்காரவெச்சிருவானே..என்றார் கணபதிராம்.
கணபதிராம்
தாங்குடித்த டீயை தொண்டைகுழியில் தன்முனைப்பால் இறக்கும்படி தொண்டையை கரகரத்து தொனியை உருவகித்து கொண்டார்.
அப்படி
என்ன தாம்யா கேஸூ? அதயாரும் சொல்லமாட்டேங்கிறீங்க !
யாருக்கும்
இன்னும் தெரியலண்ணே!
இன்னிக்குதான் முதல்
விசாரனையேவாம்!
என்றார் ராஜரத்தினம்.
5.30
மணி கதிரவன் தன் கிரணங்களை கட்டவிழ்க்கும் நேரம், அதிகாலைக்கென்ற தனி ரம்மியத்தோடு சற்று பனிபொழிவும் இருந்தது, அதீத பொறுமையாய் ஒரு நடைபயணம்; ஓட்டமும் நடையுமில்லாமல் நடுத்தரவர்க்க பயணம். இசையுடன் சோரிந்துவிழும் கவிதைபோல ஒரு பயணம்.கவிதைகள் சொல்லலாம் இந்த பவித்ரன் சொல்லி சொல்லி அறுத்த இடத்தில் நானும் அறுக்கவேண்டாமே. அட நான் யாரா இன்னுமா தெரியல ; வக்கீல் வெங்கடேஷ் அந்த நிவேத கேஸ்ல ஆஜராகி; அட என்னங்க நீங்க!.
கோர்ட்ல
இருந்து போனா ஒரு பெட்ரோல் பங்க் வரும் அதுல இருந்து அடுத்த பங்க் வரும் போது ஒரு 3 பில்டிங் முன்னாடியே தான் நம்ம ஆபீஸ் மாடில, இப்ப அங்கதான் போறேன்.
போகும்
வழியெல்லாம்
; 25மீட்டருக்கு ஒருமுரை 15அடி உயர சிறிய ரக சூரியன்கள் மிளிர; இந்த ஈபீ காரங்களுக்கு விடிஞ்சா லைட் ஆப் பன்ற பழக்கமே இல்ல..
ஆபீஸ்
வந்தபோது வாசற்படியில் 58 மதிக்கதக்க ஒரு நபர் அவரது வாடிய முகமும்; சிவந்து கலங்கிய கண்களும் நிச்சயம் ஏதேனும் பிரச்சனை என்றது.இதுவே பவித்ரனா இருந்தா நைட்ல தூங்காம கம்ப்யூட்டர் நோண்டிட்டு இருப்பார் அதான் என்பான்.
அவரை
நெருங்கும் போது கவனித்தேன் இந்த பனியிலும் வியர்த்த உடல் வியர்க்கும் உஷ்ணத்திலும் நடுக்கம் நிச்சயம் குளிரோ அல்லது முதுமையோ அல்ல. இங்க ஏன் காத்திருக்கனும் என் உதவி தேவைபடுமோ? கேட்டுபார்த்திறலாம்..
ஐயா;
நீங்க யாரு
என்ன வேணும்? யாருக்காக இங்க காத்துட்டு இருகீங்க?அவரது நரை தோற்றமும் முக அமைப்பும் அப்பட்டமாய் தமிழ் என்றே சொல்லின.
தம்பி;
வக்கீல் தம்பிய பாக்கணும்; அவருக்கிட்ட ஒரு விசயம்ம்ம்ம்ம்ம்ம் பேசனும்ம்ம்.அவரின் குரலின் தாழ்ச்சியும் நடுக்கமும் உடைந்த நிலையும் ஏதாவது பெரிய பிரச்சனையோ?
நான்
தாங்கையா வக்கீல் என்ன விசயம் சொல்லுங்க… என் குரல் எழுப்பிய ஓசை அடங்கும் முன் அவரது விசும்பல்கலும் கண்ணீரும் என்னை கலைத்தன ; இந்த வயதிலொரு ஆண் அழுவது யாரையும் கரைத்துவிடும் அப்படியென்ன பிரச்சனை அழும் அளவிற்கு?
தம்பி,
என் பொண்ணு; என் பொண்ணு நேத்து சாயங்காலத்துல இருந்து காணோம் அவல யாரோ கடத்திட்டு போயிட்டாங்க சரிங்கையா; போலீஸ்ல சொல்லிருக்கலாமே என்ன தேடி வரணுமா என்ன?
இல்ல
தம்பி என் பொண்ணு ஒருத்தன காதலிச்சா; நான் ஏத்துக்கல ஒருவேளை ஓடிபோயிருந்தா , போலீஸ் கண்டுபிடிச்சு டீவி பேப்பர்னு
எங்க கவுரவமே கெட்டுடும்..
சரிங்கையா,
நான் என்ன செய்ய்ய முடியும்னு நினைக்குரீங்க?
எப்படியாவது
கண்டுபிடிங்க சாமி ந்னு என் காலில் விழுந்து கிடந்தார் ஆடிப்போய் அவரை தூக்கி ஐயா என்னங்க என் காலுல விழுந்துகிட்டு?வேற வழி தெரியல சாமி, எப்படியாவது?
சரிங்கையா,
உங்க பொண்ணு பேரு போட்டோ மத்த விவரங்கள சொல்லுங்க.
அதற்குள்
கார்த்தியை வர சொல்லி, கார்த்தி முதல்ல காபி வாங்கிட்டுவா , அப்படியே எனக்கும் ஐயாவுக்கும் ஏதாவது டிபன் வாங்கிவா..
அதெல்லாம்
வேண்டாம், தம்பி, வகுத்துல நெருப்பகட்டிகிட்டு சோறு இறங்குமா என்ன?எப்படியாவது?
காபியின்
ஆவி நாசியில் தொடும் வேளையில் துவங்கியது எங்கள் உரையாடல்..
போட்டோ
இருக்கு ஐயா மத்த விவரங்கள சொன்னீங்கன்னா?
என்ன
விவரம் வேணுமோ கேளுங்க சொல்றேன்.
அதாவது…………
ச்சே சங்கடமா இருக்கு ; கார்த்தி நீ கேளுடா;
ஐயா;
உங்க பொண்ணு எப்பலருந்து காணோம்?
நேத்து
சாயந்திரம்
5 மணில இருந்து..
வீட்டுல
இருந்து காணோம? இல்ல வெளில
இருந்து காணோமா?
4.30
க்கு வீட்டுல இருந்து கிளம்பினா;
போகும்
போது ஏதாவது எடுத்துட்டு போனத நியாபகம் இருக்கா?
ஒரே
ஒரு ஹேண்ட் பேக் பர்ஸ் மாதிரி சின்னதா…
அப்ப
ஷாப்பிங்க் போயிருப்பாங்க
போனா
ராத்திரிகுள்ள
வந்திருக்கணுமே
, என்ன சார் , இந்த காலத்து பொண்ணுங்க அவ்வளவு சீக்கிரம் எங்க ஷப்பிங்க் பன்றங்க ஏதொ டூர் போன மாதிரிதான் நாள்கணாக்கா வாங்குறாங்க..
கார்த்தி
இந்த மாதிரி சில்லி கமெண்டெல்லாம் சொல்லாதேன்னு எத்தன முரை சொல்லிருக்கேன் … என்ன பன்றது பாஸ் பழகிருச்சி ஸாரி…
ஐயா
முதல்ல டிபன் சாப்பிடுங்க… அண்ணா எதுக்கும் பவித்ரன் அண்ணாவ கேட்கலாமா? என்றான் கார்த்தி..
இல்லடா;
இது வக்கீல் கேஸாவே இருக்கட்டும்.
ஐயா
நீங்க சப்பிடுங்க இதோ நாங்க தனியா கொஞ்சம் பேசணும் ; பக்கத்து ரூம்ல தான் இருப்போம் என்று
கார்த்தி என்னை அழைத்து சென்றான்..
அண்ணா
பவித்ரன் அண்ணா வரட்டும் ஏதாவது க்ராஸ் கேள்வி கேட்கவாவது?
இல்லடா;
வேணும்னா போன்ல என்ன பன்றதுன்னு கேளு..
ஹலோ;
அண்ணா கார்த்தி பேசுறெண்ணா
சொல்லு
கார்த்தி என்ன விசயம்..
இல்லைனா
ஒரு மிச்சிங்க் பத்தின கேஸு ; சில க்ராஸ் கொஷன் கேட்கனும்..
யாரு
மிச்சிங்க் ஆணா?பெண்ணா?
பொண்ணுனா,
அப்பா வந்திருக்கார்ணா அதான் கேட்க தயக்கமா இருக்கு!
நோட்
பண்ணிக்கோ கார்த்தி;
1)
பொண்ணு
காதலிச்சதா?
அல்லது அது மாதிரியான த்கவல்கள்?
2)
காணாம
போன நேரம் இடம் போட்டிருந்த ட்ரெஸ்?
3)
ரீசண்டா
வீட்டுல பிரச்சன ஏதவது சண்டை வாக்குவாதம் மாதிரி?
4)
பொண்ணோட
செர்ந்து மிஸ்ஸான பொருட்கள்?
5)
கடைசி
கம்யூனிகேஷன் போன்; லெட்டர்; மெச்செஜ்; சிம்பலிக் ஏதாவது?
சரிங்கண்ணா
நீங்க எங்க இருக்கீங்க? சேலம் டா வந்ததும் மீட் பன்றென் பாலோ பண்ணிக்கோ..
கார்த்தி
கேள்விகளை கொட்டிவிட அவர் பதிலளித்தார்..
காதலிச்சதா
கேள்விபட்டு அவளயே கேட்டேன் ; அந்த பையனொட அடிக்கடி பாத்துருக்கேன். போகும் போது பச்சையும் வெள்ளையும் கலந்த ஒரு சுடிதார் போட்டுருந்தா; அவ காதல ஏத்துக்கலனு தான் பிரச்சன அதுவும் வெரும் வாக்குவாதம் தான் தவிர பெரிசா ஏதுமில்ல; காணாமல் போன பொருட்கள் எதும் இன்னும் கண்டுபிடிக்கல அத யோசிக்கற மனநிலையில இல்ல; அப்படி எந்த கம்யூனிகேசனும் இல்ல..
நீங்க
ஏன் காதலுக்கு மறுக்குறீங்க ?; எதாவது காரணம் சொல்ல முடியுமா?
அந்த
பையன எனக்கு பிடிக்கல; இவளும் அவனும் சேரக்கூடாதுனு நினைக்கிறேன்.
அது
ஏன்னு தெரிஞ்சிகலாமா?என்றேன் நான்.
அந்த
பையன வேறொரு; பொண்ணோட தப்பான முறையில நடக்கும் போது நானே பாத்தேன், அந்த நிலமை என் பொண்ணுக்கும் நு எனக்கு…… என்னால தாங்கமுடியல….
இந்த
விசயத்த உங்க பொண்ணுகிட்ட சொன்னீங்களா?
இல்ல
சொல்ல தைரியம் இல்ல… சொன்னாலும் நம்புவாளா? சந்தெகம் தான்..
சரி;
இந்த காலத்து புள்ளைங்க எங்க அப்பன் பேச்ச கேக்குறாங்க என்றான் கார்த்தி; புத்திக்குள் ஒரு குரல் நாம மட்டும் என்றது; என் சிந்தனை சக்கரம் சுழன்றுகொண்டே இருந்தது. அந்த வேளையில் அவரது கைப்பேசி சன்னமாய் சத்தமிட்டது. அவர் அதை எடுத்து பேச ; முகம் வெளிரியதை காண்கிறேன்.
அவரிடம்
கைப்பேசியின் செய்தியை கேட்க; காணாமல்போன அதாவது ஓடிபோன அவரது மகளுக்கும்; அந்த பையனுக்கும் திங்களன்று திருமணமாம் என்று அவரது மனைவிக்கு தகவல் வந்ததாம்.
கையறு
நிலையென்றால் என்ன என்பதை கண் எதிரே பார்க்கிறேன். டேய் கார்த்தி எதாவது செய்யனும் டா எங்கிறேன் நான் வெறித்த் நினைவுகளுடன்; வெகுண்ட குரலில்..
கார்த்தியோ “ விடுங்கையா ; நீங்க
வேணாம்னு போன பொண்ண என்ன செய்யமுடியும்?; விட்டுருங்க பட்டுத் திருந்தட்டும்”
டேய்;
பட்டுத்திருந்த
இது என்ன பரீட்சையா? முட்டாள்..
பின்ன
என்னனா செய்யமுடியும் பொண்ணு மேஜர் அவங்கபக்கம் ஸ்ட்ராங்கா இருக்கு சட்டப்படி எதுவும் நிக்காது; வேணும்னா தனியா எதாவது செய்யலாம் ஆனா சட்டம் நம்மமேலயே பாயும்.
ஏதாவது
ஒரு காரணம் கூடவா இல்லாம போகும்? என்றார் அவர்..
ஆங்க்!
, ஐயா நீங்க ஏன் ஒத்துவர மாட்டிங்கிறீங்க? அப்படியென்ன பிரச்சனை?; நீங்க ஒத்துகல உங்க பொண்ணு நீங்க வேணாம்னு பொயிருச்சி விட்டுட்டு போவீங்களா?
இல்ல
தம்பி நீயும் ஒரு அப்பனான பின்னாடி தான் தெரியும் இது; எனக்கு வைராக்கியம் எல்லம் ஒன்றுமில்லை; அவ வாழ்க்கை தான முக்கியம் நாளைக்கு ஒன்னுனா யார தேடிபோவா?
டேய்
கார்த்தி; சும்மாருடா; ஐயா ; ஒரு வழியிருக்கு ஆனா நீங்க எதிர்த்து நிக்கனும்..
எனக்கு
என் பொண்ணு திரும்பி வந்தா சரி தம்பி;
பையன்
வசதியானவனா?
ஐயா; இல்ல தம்பி;
சரி
அப்ப இந்த வழி சரியா இருக்கும்; கார்த்தி?
சொல்லுங்கண்ணா;
இன்னிக்கு
வெள்ளிக்கிழமை;
கல்யாணம் திங்கள்ல நடுவில 2 நாள் கார்த்தி ஐயாவோட தகவல்கள் எல்லாம் ரெடி பண்ணி ஒரு ஸ்டே வாங்கிரு கூடவே ஆட்கொணர்வு மனு ஒன்னு குடுத்திரு..நடக்க வேண்டியத நான் பாத்துக்கிறேன்.ஐயா நீங்க மட்டும் தைரியமா எதிர்த்து நின்னாபோதும்.
கார்த்தி
; லீகலா ஒரு வழி இருக்கு இப்ப குடும்ப நல நீதிமன்றத்துல ஐயாகிட்டயும் அம்மகிட்டயும் கையெழுத்து வாங்கி கலயானத்துக்கு ஒரு ஸ்டெ வாங்கிரு கூடவே சிவில் நீதிமன்றத்துல ஆள் கொண்ர்வு மனுவும் அவங்க ரெண்டு பேர் மேலும் குடுத்துரு..
அண்ணா;
ஆள் கொணர்வு சரி குடுத்தரலாம் ; ஆனா கலயாணத்துக்கு ஸ்டெ வாங்கமுடியுமா? ரூல் இருக்காதே!
அது
உன் சாமர்தியம் கார்த்தி; சாயந்திரத்துக்குள்ள; மனு போலிஸ்க்கு உத்தரவு போடணும்; சீக்கிரம்டா;
சரிண்ணா..
ஐயா உங்க பேரு ; விலாசம்; அடையாள அட்டை ?
பேரு
செல்வராஜன்;
மனைவி தனபாக்கியம்; விலாசம் 6/48, தனபாக்கியம் இல்லம், கோடிபுத்தூர்; பொண்ணு பேரு , எழுதிகோங்க
ஐயா
, பொண்ணு பேரு என்ன சொன்னீங்க? நிவேதா தம்பி;
சரிதான்;
இந்த நிவேதாங்கிற பேரு நம்மள விடாது போல;
ஐயா;
கையெழுத்து போடுங்க;
தம்பி
உங்கள நம்பிதான் இருக்கேன், என்ன ஏதுனே தெரியாம கையெழுத்து போடுறேன்.
எல்லம்
சரியா நடக்கும் ஐயா; கார்த்தி ஐயாக்கூட அவங்க வீட்டுக்கு போயி அம்மாகிட்ட கையெழுத்து வாங்கிட்டு ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போயி ஸ்டெ வாங்கிட்டு மனு குடுத்துட்டு வா..
சரியாய்
2.30க்கு வந்தான் கார்த்தி; அலைந்த அலுப்பு முகத்தில்; என்னடா கார்த்தி டையர்டா?சாப்பிடியா?
எங்கண்ணா;
அந்தா ஜட்ஜ சமாளிச்சி கையெழுத்து வாங்கறதுக்குள்ள ஐயோ;
சரி
அவங்க எங்க டா?
கீழ
கடையில சாப்பிட்டு வரன்னு சொன்னாங்கண்ணா, அதிருக்கட்டும் என்ன ப்ளான் எனக்கு ஒன்றுமே புரியல ஏதோ செய்யபோறீங்கனு தெரியுது;;
டேய்
இதுக்கூட தெரியாம: கேளு; இப்ப கல்யாணத்துக்கு ஸ்டெ வாங்கிட்டியா!, அத போலீஸ்க்கு குடுத்தியா! அப்புறம் ஆள் கொணர்வு மனு குடுத்தியா?
போலீஸ்
ரெண்டு நாளைக்குள்ள கண்டுபிடிச்சி திங்கட்கிழமை கோர்ட்ல ஒப்படைக்கனும்; கல்யாணம் திங்கட்கிழமை ; நடக்காது; திங்கட்கிழமை நம்ம கேஸ் சிவில் கோர்ட்ல அட்ஜர்மெண்ட்ல வரும்
அப்ப பாரு..
ஏன்ணா;
குடும்ப பிரச்சனைக்கு சிவில் கோர்ட்ல எப்படினா வரும்?
வரவெக்கிறேன்
பாரு; இப்ப நாம முழு ரெஸ்ட்; அவங்கள போலீஸ் தேடி கண்டுபிடிக்கும் ; பிடிக்கும் போது கல்யாணம் ஆகாது ஆகவும் முடியாது, திங்கட்கிழமை தான் நமக்கு வேல, சரிடா , அவன் பையா இருந்தா டீ வாங்கிட்டு வர சொல்லுடா; நிறைய யோசிக்கணும் அப்புறம் நீயும் சிவில் லாஸ் எல்லம் ஒரு கிளான்ஸ் பாத்துரு..
இன்னிக்கு
முதல் அட்ஜர்மெண்ட்னா கேஸ் எப்படி எல்லாருக்கும் பிரபலம் ஆகும் என்றார் கணபதி ராம்…
வெள்ளிகிழமையே எல்லாம்
நடந்திருக்கு,
இன்னிக்கு விசாரணைக்கு வரும்படியா உத்தரவு வந்துருக்கு, அத விட வெங்கடெஷ் என்ன சாதாரண ஆளா அதான் இவ்ளோ பிரபலம்.. என்றார் ராஜரத்தினம்
நீதிமன்ற
அவசரங்களுடன் கடிகாரமுள் 9ல் 50ஐ தொட்டிருந்தது.நீதிபதி ஜனனாதன் தன் ப்ரத்யேக தோரனையில் வந்தமர்ந்தார் மணி 10.10; கலீலியோ மரணித்த நேரம்; நேற்றே நான் செல்வராஜனிடம் நடக்கவிருப்பதை சொல்லியிருந்தேன். எதிர்முனையில் அந்த பெண் நிவேதாவும் அவள் காதலனும் இருக்கின்றனர்..
தவாளி
வழக்கு எண் குறீயீட்டு எண் போன்றவற்றை உரக்க படித்தார், இன்னும் அனைவரின் முகத்திலும் ஒரு விசேஷ எதிர்பார்ப்பு தெரிகிறது, கார்த்தி சில பக்கங்களை சீராக அடுக்கிக் கொண்டிருந்தான் செல்வராஜனின் முகத்தில் வெறிச்சோடிய பார்வை; அவரது மனைவியிடம் விசும்பல் கலந்த சுவாசம்; இப்பொழுது தான் நிவேதாவை பார்க்கிறேன் நவீந்த்துவம் எங்கிற பெயரில் பூசபட்ட கர்வசாயம் முகத்தில் தோற்றத்தில்..
அந்த
பையனிடம் போலித்தனமான செழிப்பு அட இந்த பிரபஞ்சம் எத்தனை தான் விசித்திரமானதோ?
நீதிபதி
ஜனனாதன்; வழக்கின் விசாரணாய்யை துவங்கும்படி ஆனையிட்டார்; என் எதிர்தரப்பு அதாவது நிவேதா தரப்பினரால் ஏற்றுகொள்ளபட்ட வக்கீல் தன் வாதத்திற்னை கொட்ட எத்தனித்தார்.
கணம்
நீதியரசரே;
எதிர்தரப்பு வக்கீலான வெங்கடெஷ் குடும்ப நல நீதிமன்றத்தில் முதலில் ஒரு தடை வாங்கியுள்ளார் அதாவது பெண்ணின் பெற்றோர் திருமண்த்தை விரும்பாததால் என்பதாக ; ஆனால் எனது கட்சிகாரர் நிவேதா இன்றைய தினப்படி அவரது வயது 21 அவர் மேஜராகி 3 வருடங்கள் ஆகியுள்ளது, எனவே முதற்கோணலே முற்றும் கோணல் என்பதுபோல் எவ்வித விளக்கமும் இன்றி இப்படியொரு மனுவை பெற்று தேவையின்றி வழக்கு தொடர்கின்றார். எனவே இவ்வழக்கை தள்ளுபடி செய்யுமாறு வேண்டுகிறேன் என்று முடித்தார்..
[
விளக்க வாய்ப்பு என்பக்கம் வந்தது]
திரு
நீதிபதி அவர்களே; எதிர்தரப்பு வக்கீல் சொன்னதும் ஒருவிதத்தில் நியாயம்தான் ஆயினும் எங்கள் மனு பெண் மேஜர் என்பதற்க்கல்ல, இந்த திருமணத்தில் எனது கட்சிகாரரும் நிவேதாவின் தந்தையுமான செல்வராஜனுக்கு விருப்பமின்மையின் காரணமாக தான்ம்,. எனவே இந்த மனு செல்லும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அது
சரி ; இன்னும் இந்த சிவில் கோர்ட்டின் வழக்கு என்னனு நீங்க சொல்லவில்லையே? என்றார் நீதிபதி ஜனனாதன்..
சொல்கிறேன்
ஐயா; வழக்கின்படி எனது கட்சிகாரர் திரு செல்வராஜனின் மகள் நிவேதா அதொ அந்த வாலிபரை காத்லித்தார் திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினார். ஆயினும் எனது கட்சிகாரர் திரு செல்வராஜன் அந்த திருமணத்தையும் காதலையும் ஏற்கவில்லை, ஆகவே அப்பெண் வீட்டைவிட்டு சென்று தன் காதலனுடன் திருமணம் செய்து கொள்ளவிருந்தார், அதில் எனது கட்சிகாரருக்கு விருப்பமில்லை எனவே
ஐ
அப்ஜெக்ட் திஸ் யுவர் ஆனர்; எனது கட்சிகாரர் தற்போது மேஜர் அவருக்கு தன் வாழ்க்கையை முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது..
இருங்க
வக்கீல் சார் நான் இன்னும் முடிக்கவே இல்ல; இப்படி அறைகுறையா கேட்டுட்டு தான மனு தப்புனீங்க.
கணம்
நீதிபதி அவர்களே; எனது கட்சிகாரர் விருப்பமில்லாத காரணத்தாலும் , அப்பெண்ணின் எதிகாலத்தை கருத்தில் கொண்டும் இந்த திருமணத்தை தடை செய்ய சொல்லி
இருங்க
இது குடும்ப நல கோர்ட்ல இல்ல வரனும் சிவில் கோர்ட்ல குடுத்திருகீங்க என்ன வெங்கடெஷ் நீங்க என்று
நீதிபதி சொல்ல அனைவரும் சிரித்தனர்..
இருங்க
யுவர் ஆனர்; இப்படி ஒரு தடைய நான் குடும்ப நல கோர்ட்ல வாங்கிட்டேன் ஆனால் இன்று இப்பெண் மேஜர் அல்லவா தடை செல்லாதே அவரது வாழ்க்கையை முடிவு செய்ய்யும் அதிகாரம் வந்திவிட்டதே! ஆகையால் ; அவர் வாழ்க்கையை அவர் விருப்பபடி விட்டுவிடுகிறோம்.. கார்த்தி தண்ணி குடுறா…
அப்பாடா;
கேஸ் முடிஞ்சது என்றார் நீதிபதி..
இல்லை
யுவர் ஆனர்; ஏன் சார், மேஜராகிட்டா ஒரு பொண்ணு என்னவேணும்னாலும் செய்யலாம்
அப்பாம்மாக்கு
தடுக்கும் அதிகாரம் இல்ல தானே; இத்தனை வருசமா வளார்த்து பாசமா பாத்துகிட்டா நீ யாரு என்ன கேட்கனு சொல்லுவாங்க இல்ல..
வெங்கடெஷ்;
இது நீதிமன்றம் இங்க சென்டிமெண்டுக்கெல்லாம் இடமில்ல என்றார் எதிர்தரப்பு வக்கீல்..
சரி;
மன்னிச்சிருங்க;
யுவர் ஆனர்; சட்டபடி இவங்க கல்யாணத்த தடுக்க முடியாது இந்த வயசானவருக்கு தன் மகள் மீது எந்த உரிமையும் இல்ல; ஆகையால் அவர் அவர் மகளின் கல்லூரி படிப்பிற்கு வாங்கிய கடன் 5 லட்சத்தை அவரால கட்ட முடியாது. மேலும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலை நம்மால் சொல்லமுடியாது அதர்க்கு நஷ்ட ஈடா குறைந்தபட்சம் ஒரு 2 லட்சமும் வாங்கிதருமாறு கேட்டுகொள்கிறேன்..
ஐ
அப்ஜெக்ட் திஸ் யுவர் ஆனர்; இது ஒரு தந்தையின் கடமைகல் அல்லவா? அதற்கு நஷ்டஈடு என்பது வேடிக்கையாக உள்ளது..
ஆனால்
கல்விகடன் எப்படி அப்பாவை சேரும், அது கட்டவேண்டியது பெண்தானே
என்றார் நீதிபதி…
இல்லை
யுவர் ஆனர்; கார்த்தி அந்த டாக்குமெண்ட் குடு; யுவர் ஆனர் வங்கி கடன் திருத்தியமைக்கபட்ட சட்டங்களின்படி கடன் பெற்ற நபர் கடனை கட்டாவிட்டால் அந்த கடன் அவரது காடியன் , அல்லது நாமினியையே சேரும்..
சரி
ஆனா நஷ்டஈடு என்பது சட்டத்தில் இல்லையே? என்றார் நீதிபதி..
இல்லைதான்
நீதிபதி அவங்களே ஆனால், ஒருவேளை என் கட்சிகாரர் ஒரு நாய் வைத்திருந்து அதற்கு ஏதேனும் பாதிப்பு என்றால் நஷ்டஈடு வழங்க சட்டமிருக்கிறதே!..
அப்படியென்றால் என்
கட்சிகாரர் நாய் எங்கிறீர்களா பாருங்கள்
யுவர் ஆனர்..
யுவர்
ஆனர்; நான் சட்டத்தை பற்றி தான் சொல்கிறேன் .அவர் அப்படி எடுத்து கொள்வது அவரது விருப்பம், மேலும் ஐ.பி.சி. – செக்ஷன்ஸ் படி a loss maybe a material;
object or a living thinga else human are sure to be considered; என்று
உள்ளது..
க்ளியர்
மிஸ்டர் வெங்கடெஷ்; ஏம்பா
எதிர்தர்ப்பு வக்கீல் ; ஏதாவது விசாரணை இருக்கா?
இருக்கு
யுவர் ஆனர்; நான் திரு செல்வராஜனை விசாரிக்க விரும்புகிறேன்…
பர்மிஷன்
கிராண்டட்;
செல்வராஜன் செல்வராஜன்;
செல்வராஜன்
விசாரணை கூண்டில் வந்தேறினார்..
திரு
செல்வராஜன் அவர்களே; நிவேதா உங்க மகள் தானே?
ஆம்
, என் ஒரே மகள்..
இப்ப
அவர் ஒரு மேஜர்; அவருக்கு தன் காதலையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கிறது தெரியுமா?
இருக்கலாம்; ஆனா
நான் அவளது எதிர்காலத்தை நல்லபடியாக அமைக்கணும்னு நினைக்கிறது தப்பில்லைனு நினைக்கிறேன்
எந்தவிதத்துல
அந்த பையன் உங்க பொண்ணுக்கு ஏற்றவரா இல்லைனு சொல்லமுடியுமா?
மன்னிக்கனும்
அதை வெளியே சொல்லமுடியாது; ஆனா அந்த பையனின் நட்வடிக்கைகள் சரியில்ல; அவன் என் பொண்ண நல்லபடியா பாத்துபான்னு எனக்கு நம்பிக்கையில்ல..
ஆனா
இப்ப உங்க பொண்ணு உங்கள விட்டு ஒடி வந்துட்டாங்க; அதாவது நீங்க வேணாம்னு வந்துட்டாங்க அந்த பையன நம்பி போயிருக்காங்க இப்ப உங்களால அவங்க திருமணத்த தடுக்க முடியாது தெரியுமா?
தெரியும்;
இப்ப எனக்கு என் பென் வேண்டாம், எனக்கு இழப்பீடு தான் வேண்டும்..
என்றபோது
நிவேதாவின் கண்கள் கண்ணீரை சிந்தின…
என்ன
மனுசன் நீங்க?பெத்த பெண்ண விட பணம் பெரிசா?
பெத்தவங்கள
விட காதல் பெருசாகும் போது பணம் பெரிசாக கூடாதா? மேலும் அடுத்த மாதம் முதல் எனக்கு ரிட்டியர்மெண்ட் அதுக்குபின் வரும் பென்சனை வச்சிக்கிட்டு என்னால் கடனகட்டிவிட்டு வாழ்க்கை நடத்தமுடியும்னு தோணல..
அப்ப
அவங்க திருமணம் செய்துகொள்ளலாம்னு சொல்றீங்களா?
ஆமாம்;
இனி என் பெண் மீது எனக்கு எந்த அதிகாரமுமில்லையே..
அவ்வளவு
தான் யுவர் ஆனர் , சரி நீங்க போகலாம்..
வெங்கடெஷ்
நீங்க யாரையாவது விசாரிக்க நினைக்குறீங்களா?
ஆமாம்
யுவர் ஆனர்; நான் அந்த பையன விசாரிக்கணும்..
அந்த
பையன் விசாரனை கூண்டிற்கு வந்தான் அவன் தலை கொஞ்சம் கணம் தான் போல
சரி
நீங்க நிவேதாவை காதலிக்கிறீங்க இல்லையா?
இல்லை..
என்ன?
நான்
அவளை காதலிக்கவில்லை..
அப்புறம்
அந்த கல்யாண ஏற்பாடு எல்லாம் யாருக்கு?
அதற்கும்
எனக்கும் சம்பந்தமில்லை..
பின்ன
அந்த இடத்தில உங்களுக்கு என்ன வேலை ?உங்கள அங்கிருந்துதான் போலீஸ் பிடித்து வந்தது நியாபகம் இருக்கா?
அப்போது
அவன் முகம் வெளிரியது; நீதிபதியின் முகமும் தான்..
நிவேதாவின்
காதல் உடைந்து கண்களில் கண்ணீராய் வெளியேறியது.. அவன் பதில் சொல்ல தடுமாறினான், அனைவரும் ஆச்சரியப்பட்டனர்..
அப்ப
நீங்க நிவேதாவ காதலிக்கவே இல்லை?
நான்
நிவேதாவை காதலிக்கவும் இல்லை அவளை நான் பார்த்ததும் இல்லை..
அவ்வளவே
யுவர் ஆனர்; நீங்க போகலாம்..
கீழே
இறங்கி சென்றவனை நிவேதா ஓங்கி அறைந்தாள்..
நீதிபதி
வழக்கை தள்ளுபடி செய்தார், நிவேதா அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க பட்டார்..
தீர்ப்பை
படிக்கும் போது எனக்குமட்டும் பின்னணியில் கிடார் ஒலிகள் கேட்டது வெற்றியின் களிப்பினாலும் இருக்கலாம்..
ஐயா;
உங்க பொண்ண உங்ககிட்டயே சேர்த்துட்டேன்; என்ன டிவி, பேப்பர்ன்னு பேரடிபட்டுடுச்சி அதுக்காக என்ன மன்னிக்கனும்..
என்ன
தம்பி இப்படி சொல்லிடீங்க; பணம் வாங்கிதரதா சொல்லிட்டு பொண்ணயே திருப்பி குடுத்திருக்கீங்க, உங்களுக்கு எப்படி நன்றி சொல்ட்ரது?
அத
எங்க செட்டில்மெண்ட்ல சொல்லுங்க என்றான் கார்த்தி..
உனக்கு
என்ன வேணும் ஃபீஸ் இருக்கட்டும்; அதற்க்கும் தனியா என் பரிசா?
கேட்டா
தருவீங்களா?
தர
மாட்டேனா?
உங்க
பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணிதருவீங்களா?
நிச்சயமா!
அதுல என்ன? உன்ன மாதிரி பசங்கள நம்பலாம்..
எனக்கு
ஆச்சரியம் எதை நம்பி இவனுக்கு பொண்ண தர ஒத்துகிட்டார். யோசித்துக்கொண்டே அலுவலகத்துள் நுழைந்தேன்..
என்
மேசைமேல் ஒரு பூங்கொத்து , அதில் வாழ்த்துக்களுடன் பவித்ரனின் கையெழுத்துடன் இருந்தது.. இன்னும் இந்த கையெழுத்த அவன் மாத்தவேயில்ல கேவலமாதான் இருக்கு என்றேன் புன்னகைத்த படி..
இருக்கும்
டா என்றான் பின்னலிருந்தபடி, சில நிமிடத்தில் காபியுடன் கார்த்தி வந்தான்..
கைல
என்னடா பார்சல்? பிரித்து கொடுத்தான் அவனது கல்யாண பத்திரிக்கை அதே நிவேதாவுடன்..
என்னடா
இது ஏதொ விளையாட்டுக்கு கேட்டனு பாத்தா?பத்திரிக்கையோட வர எப்படா முடிவு பண்ணீங்க?
5
நாளைக்கு முன்னாடி என்றான்;
என்ன
5 நாளா?
ஆமாம்
அண்ணா எனக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் முடிவு பண்ணாதால தான் அந்த பொண்ணு ஓடிபோயிருச்சி அவ காதலனோட; அவர நான் தான் ஆபீஸ் வரசொன்னேன் நான் பேசலாம்னு , அதுக்குள்ள நீங்க வர நீங்க அத கேஸுனு நெனச்சு அப்புறம் எல்லம் நடந்திருச்சி..
எப்படியோ
நல்லது நடந்தா சரி;
அதிருக்கட்டும் அண்ணா`;
அவன எப்படி இல்லைனு சொல்ல வெச்சீங்க? எனக்கு அது தான் குழப்பமே..
அவர்கிட்ட
அதான் உன் மாமனார்கிட்ட கேட்டனே ஒரு கேள்வி, அந்த பையன் வசதியானவனா நு?5 லட்சம் 7 லட்சம்னதும் பையன் ஜகா வாங்கிட்டான்.அட அவன் பேருகூட தெரியல என்னடா பேரு?
கார்த்திகேயன் அண்ணா….
அப்ப
நீயும் அந்த கூண்டில நின்னிருக்கனும் .. என்றான் பவித்ரன்…
إرسال تعليق