இதற்காகவது வாழ்கிறேனே

இதற்காகவது வாழ்கிறேனே !
முற்காலம் தொட்டு - எனக்காக
இக்காலம் வந்து - நலிவுற்று
நளினமடைந்த
எனதரும் தமிழை - எதிர்காலத்திற்கு
எனதன்பின் பரிசாய் - எடுத்தளிக்க
எந்தியே நிற்கிறேனே
ஒன்றறிந்து கொள்ளுங்கள்
நாம் மனிதர்கள் மட்டுமல்ல - கடத்திகள்
நாம் மானுடர் மட்டுமல்ல - கருவிகள்
நாம் வாழவேண்டியது அவசியம்
நாம் அழியவேண்டியதும் அவசியம்
விட்டுசெல்வதல்ல வாழ்க்கை வழங்கிசெல்வது
விலகுவதல்ல வாழ்க்கை விளக்குவது
நம் கண்பார்க்கும் தெலைவமைந்த கடலும்
நம் கரம்சுமக்கும் கறைபடராத நீரும் - ஒன்றல்ல
நமதுமல்ல
கடலைவிட கையிலிருக்கும் நீர் பெரியது
கண்பார்க்கும் கடலை ரசிப்பது தான் வாழ்க்கை
கரம்சுமக்கும் நீரில் வாழ்வது தான் வாழ்க்கை
காலம்முடியும் வேளையில் இரண்டையும் பகிர்வது தான் வாழ்க்கை
எதிர்காலத்திற்கு கடத்தும் கருவிகள் நாம்
எதிர்காலம்வரை சுகிக்கும் குருவிகள் நாம்
நம் சொத்தல்ல அவை ஆயினும் கட்டிகாக்க வேண்டும் - காவலராய்
நம் சொந்தமல்ல அவர்கள் ஆயினும் கடத்தியாக வேண்டும் - சேவகனாய்
பழுதான கருவிகள் பயன்படுவதில்லை
பழையதாயினும் கருவிகளின்
பயன் குறைவதில்லை
தானாய் பிறந்தவை தமிழும் இயற்கையும்
தானாய் பிறக்கும் கவியும் இறக்கையும்
அதுவரை கையிலேந்தி கடத்திசெல்வோம் - கருவிகளாய்
அடுத்தவர் கைசேரும்வரை பயன்படுத்தி காத்துவைப்போம் - கண்ணியமாய்
வாழ்க்கை முடியும் முகூர்த்தத்தில் - முன்னவர்
வாழ்ந்த முறை சொல்லிவைப்போம் - பின்னவர்
வாழட்டும் முறைபடி இன்னவர் வரட்டும்
இதற்காய் வாழ்கிறேனே என்ன பிழை சொல்லுங்கள்?

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post