எழுதபடாத கவிதைகள் - என்னதானிது

இதயம் துடிப்பதும் இதற்குத்தானே!
இமயம் இருப்பதும் இதற்குத்தானே!
கடல் அலைவதும் மழை பொழிவதும் இதற்குத்தானே!

ஈசலுக்கும் ஈதலுக்கும் காரணம் இதற்குத்தானே!
சிந்தனை வளர்வதும் சிகரம் தொடுவதும் இதற்குத்தானே!

இன்பம் எய்தலும் துன்பம் துய்தலும் இதற்குத்தானே!
வானம் சிவப்பதும் பின்னே நீலுதலும் இதற்குத்தானே!
ஆனந்தமோ அழுகையோ கண்ணீர் சிந்துதலும் இதற்குதானே!

ஏற்றலும் போற்றலும் தாழ்த்துலும் தூற்றலும் இதற்குத்தானே!
ஏகமும் தூகமும் எல்லாமும் தொடர்வது இதற்குத்தானே!
கதிரவன் உதித்தலும் சந்திரன் ஜொலித்தலும் இதற்குத்தானே!

இகழ்தலும் புகழ்தலும் இசைதலும் வசைதலும் இதற்குத்தானே!
மலர்வதும் அலர்வதும் பிறப்பதும் இறப்பதும் இதற்குத்தானே!

ஈகையும் வாகையும் தானமும் தர்மமும் இதற்குத்தானே!
கடமையும் உடமையும் கடைதலும் உடைதலும் இதற்குத்தானே!

அண்டம் வாழதலும் இதனுள் சாதலும் இதற்குத்தானே!

அட என்னதான் இது என்னதானிது

எதற்கு இத்தனை இதற்குத்தானே !

எல்லாம் என்ன தேவை தானே!
 
தேவை!

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم