வரி வரிக் கவிதை

உனை போன்றொரு பூவினை கண்டால்
உயர்தனி செம்மொழியும் உளர்வது சாத்தியம்

உன் கண்மீன்கள் பிடிக்கும் தூண்டில் நான்
உன் கரங்கள் பற்றும் குழந்தை நான்
உன் தாள் பணியும் சேவகன் நான்
நீ தமிழ் என்றால் !!!

என் பேரண்டம் முழுதும் போர்களம் - என்றாலும்
என் போர்வைக்குள் எங்கும் முத்தசத்தம்!!!!

மழைவர போகுதே - என் கானகத்தில்
மலர்களும் பூக்குதே - என் பூவனத்தில்
மகரந்தம் பரவிடுதே - என் தேசத்தில்
மலர்வாசம் வீசுடுதே - என் வீட்டில்


என்
புத்தகமே!!
முடிவுரை கூட
முன்னுரை தான்
கீழிருந்து மேல் 
படித்திடும் போது ...


மோகனமே உன்னை இங்கு நானும்
மோதவரும் அலை என்று இருந்தேன்
மோகனமே என்னை நீயும் கொல்கையிலே
மோட்சம் என்று உன்னை நானும் கண்டுகொண்டேன்


ஊரடங்கும் போதும் உறக்கமில்லையே
ஊமை இரவுகள் பேசிடவில்லையே
ஊதா நிலவும் உருகிடவில்லையே
ஊசலாடும் பறவைக்கு ஒன்றும் புரியவில்லையே


மீண்டும் பார்க்காதே - என்
சாம்பல் கரையாதே!!!
மீட்க பார்க்காதே - என்
சாம்பல் உரையாதே!!!


பாவபட்டவன் நான்
புனிதம் அடைகிறேன் - உன்
பாரம் சுமப்பதால்!!!


கேட்பாரற்று கிடந்தேன் - ஒரு
கோர பசியில்!!!
கேசரியென்றே கிடைத்தாய் - என்
கோழை இருளில்!!!
கேட்காத ஒலிகள் கேட்டேன் - நான்
கேள்விபடாதவற்றை பார்த்தேன் - அந்த
ஞான இரவில்!!!


கடல் கசிந்ததடி - என்
காலம் கசந்ததடி - நம்
உடல் கலந்ததனால் - இனி
காலம் கலைந்ததடி


ஒரு நொடிக்காக காத்திருக்கிறது
ஒராயிர ஆண்டு புனிதம்
ஒரு முறை மரணம் தீண்டாதோ? என்று


இன்றிரவு கனவுகள் இல்லை
இதன்பெயர் கவிதைகள்
இவையென்றும் நினைவாகபோவதில்லை
இதன் பெயர் கற்பனைகள்
இதற்கு காரணங்கள் இல்லை
இதன் பெயர் எண்ணங்கள்

அட என்னதான் இது கனவாகவே இருக்கட்டும்


எங்கெங்கோ இருந்து வந்த சிலருக்கு
எங்கே தெரியும் இங்குள்ள சிரமங்கள்
இங்கே வாழும் மகான்கள் கண்ணில் உள்ள தெளிவு
இன்றே மறைத்தது அதனை எத்தனை மலிவு
மறக்க முடியா கனவு
பிரச்சனைகளின் நினைவு
தூக்கத்தை ஆக்கி விட்டு கனவு
விடியும் வரை துயரம்
விடிய விடாத இருள்கள்
விரும்பாத இரவுகள்
நினைக்க நினைக்க நரகம்
நினைவிலோ இதுவும் சொர்க்கம்

இன்னும் நீ கன்னியோ
இதுவரை என் கனவினில் - லாவகமாய்
பலமுறை உனை துகிலுரித்தபின்

சேற்றுமணல் பிரிந்து
ஊற்றுமடை மறந்து
கானலில் கரைவோம் வா!!!
காற்றுவெளி திறந்து
விண்வெளி கடந்து
வானவில் வரைவோம் வா!!!

என் கானகமெங்கும் பூக்களடி;
என் கானமெல்லாம் பூத்ததடி;
என் கனவெல்லாம் நிகழந்ததடி;
என் கற்பனைகள் சிறந்ததடி;
அழிச்சாலும் அழியாது என் விதை #கவிதை

என் கடல் வழிவிட்டதடி - நீ
உன் புகழிடம் சேர்ந்தடவே!
என் உதிரமெல்லாம் கடலானதடி
என் இதயம் உன்னிடம் ஆனதால்
சட்டென 20 லிட்டர் ரத்தம் பாயுதடி
சர்ச்சைகுள்ளான மூளையும் சாகாவரம்
பெற்றதடி

என் அட்ரினலின் பிரதேசம்
எல்லாம் டோபோமின் ஆனதடி - அப்படி
எந்த போதை பொருளால் ஆனவள் நீ

நீ பார்க்காத வரை
நான் காற்றுதான்
நீ கேட்குபோதே
நான் கவிதையாகிறேன்
நின் பார்வை பட்டே
நான் புவியில் பிறக்கிறேன்

என்னிலுண்டு இந்த உலகமெல்லாம்!
ஏன் நானும் விஸ்வரூபம் தான்!
எதிரி யார்எனக்கு எல்லாம் !
ஏளனத்திற்கான புழு தான்!
எதற்கு இவன் என்றிருந்ததெல்லாம்!
ஏனறியாமல் போனது என்னுள்!
என்னிலுண்டு எண்ணிலா கனவுகள்!
நிகழ்ந்தால் நினைவுகள் இல்லையேல் கவிதைகள்!

கருவளையம் அல்ல நான் காரிருள்!
முதுமை அல்ல நான் முதிர்ச்சி!
காகிதமல்ல நான் கரம்! - உன்
கவிதைகளில் நான் சிகரம்!...

ஒருதுளி போதும் நான் சாம்பலாக!
அடி நீயேன் பிரளயதீயாய் நின்றாய்!
சிறு குடம் போதும் என் சாம்பல் கரைய!
அடி நீயேன் பெரும்கடலாய் படர்ந்தாய்!
கரைந்து விட்டேனடி நீயழியாமல் என்னை அழிக்கலாகாது!

அனைத்தும் பிரிந்தன
என் சூரிய துகள்களென!
அனைத்தையும் ஈர்க்கின்றேன்
நான் கருந்துளையென!
அனைத்தும் சேர்கின்றன
என் கைவிரலென!
அனைத்தும் எதற்கு?
நான் மீண்டும் ஒரு பிரபஞ்சமாக!!

இன்றிவள் இன்றி இனியில்லை
இனியின்றி இனிதில்லை
இங்கிவள் இருப்பதனால் இழப்பில்லை
இன்பம் இவளெல்லை

இதுவரை செய்ததெல்லாம் - எனது
இதயத்திற்காக இனிமேல் இளமைக்காக

உண்டானதால் உடல் - உள்ளிருக்கும்
உயிரென்பது சிவம்- உயிர்போனால்
உடலென்பது சவம்
சீவன் என்பது உயிராகவும் / சக்தியானது உடலாகவும் இருக்கிறது

விடிவதற்குள் விடிந்துவிட்டது உனக்கு இன்னும்
விடியவில்லை எனக்கு - பகலும்
விடியா இரவுகள் கூடலூரில்
#கூடலூரில் நான் சொன்னது ஊர்மட்டுமல்ல

இதழ் என்பது வாயிலோ - இன்னும்செல
இவள் கோபுர கோயிலோ!

என் கைகளும் பறவை சிறகுதான் - உன்னை
உன்னை அணைத்துகொள்ளும் போது

காமம் தின்று செரித்து வளர்வது தானடி
காதல்!
முழுக்கோழி தின்று வளரும் மலைபாம்பாய்!

மேக குவியல்கள் எல்லாம்
மேலே இருப்பதால் என்னை
மேற்படி தூதனுப்பியது உன்னை
ஸ்பரிசிக்க!

இன்னொரு பிறவியில் நீ பிறக்கவேண்டும்!
அந்த பிறவியிலும் என்னால் நீ
இறக்கவேண்டும்!
அதற்காகவே நான் மீண்டும்
பிறக்கவேண்டும்!

பெரும் புகழ் பெற்றும்
சிறு குயில் தான் -
பல குரல் தோற்றும்
அது குழல் தான்

இதழ்கள் குவிகின்றன - எனக்காக
இதழ்கள் இன்னும் குவிகின்றன - என்
வீட்டின் அலமாரியில் இன்னும் சில 
#இதழ்கள்
#தமிழ்

நானென்பது உன்னால் ஆனது - நீயென்பது
நானெனும் ரசிகனால் ஆக்கபடுவது

மிருகம் பாதி நீபாதி - நானெ்றால்
நீயில்லாத போது மிருகம் - நானெ்றால்
மிருகத்துள்ளிருப்பதும் நீயன்றோ
நீயில்லாத நான் மிருகமா?
இல்லையே !

என்
இரவில் நீ போர்வையாக
வேண்டாம்
எனக்கும்
போர்வைக்கும் இருக்கும் 
இடைவெளியை நிரப்பிடு போதும்

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم