என்னை அழவைக்க ஆயிரம் பேருண்டு!!
என்னை அழவைக்கும் ஆனந்தங்கள் ஏதுண்டு!!
என்னை அழவிடும் மாந்தரின் ஆனந்த கண்ணீரில் உண்டு!!!
என் தியாகமும் அவர் துரோகமும்!!!
தோற்றே பழகினவன் இதிலாவது தோற்காமல் வெல்ல தோல்வியே இன்றி இருக்கும் என் நண்பன் கிருஷ்ணனை துணைக்கழைத்து துவங்குகிறேன்..
சத்வ விதுர்வ ரேனியம்
ஸவயம் தேவஸ்ய தீமகி
ஹராநமா துரம்யர்ச்ச
தர்மோ த்ரானத் ப்ரித்தர்மகி
பரித்துனாய சாதுர்னாம் வினாசாயர்ஜ துஷ்கிருதாம்.
தர்ம சமஸ்தாப னாயர்ச்ச சம்பவாமி யுகே யுகே
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை , கிருஷணனின் குணம் சொல்லும் வரிகள் . இதுவரை இந்த வரிகளை பயன்படுத்திய பாடல்கள் மிக பிரபலம்.
1) ஜெயா டிவி மகாபாரத சீரியல் பாட்டு ( இந்த சீரியல் துக்ளக் சோ வசனகர்தா )
2) புதியகீதை விஜய்யின் படம் நான் ஓடும் நதி போல் பாடலின் ஆரம்ப வரிகள் (யுவன் விஜய்க்காக இசையமைத்த ஒரே படம் )
3) உன்னை போல் ஒருவன் பட டைட்டில் பாட்டு ( நீண்டகாலத்திற்கு பின் தமிழ் சினிமாவிற்கு ஒரு பெண் இசையமைப்பாளராக அறிமுகமான ஸ்ருதிஹாசன் இசையமைத்த ஒரே படம் )
சரி , நம்ம விசயம் பாப்போம் சூழ்நிலை பொருத்து எழுதவேண்டிய நிர்பந்தம் எனக்கு இருந்தும் இது புது முயற்சியா இருக்கட்டுமேன்னு .
இந்நிகழ்வு , 2005_2006 ல் நடந்தது . அப்போ நான் 8வது படிச்சிட்டு இருந்தேன் , தருமபுரி இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் உயர்நிலைபள்ளியில் , பள்ளிக்கும் அருகிலுள்ள நீச்சல் குளத்திற்கும் இடையில் 4.5 அடியில் ஒரு சுவர் அப்ப அத சுவரன்னு கூட சொல்ல முடியாத நிலையில் இருந்தது.
என் வகுப்பில் 2 நண்பர்கள் ஜாபர் ( நீச்சலில் நான்கு மாவட்ட அளவில் நடந்த போட்டியில் முதலிடம் வாங்கியவன் அப்போதே ) நவாஸ் என இருவரும் சாயந்திரம் 6 மணிக்கு அங்கு நீச்சல் பயிற்சிக்கு செல்வர் . நான் விடுமுறை நாட்களில் சில நாட்கள் சும்மா குளிக்க செல்வதோடு சரி . அப்போது தகவல் தெரிந்து அந்த பயிற்ச்சியின் கோச் திரு. ராஜமுருகன் அவர்களிடம் கேட்டு முடியாதென்க ..
அழுது புரண்டு அடம்பிடித்து அப்பாவிடம் சொல்லி கேட்டும் பலனில்லை சரி நம் நிலைக்கு கிடைக்காது என்றிருந்த வேளையில் அங்கிருந்த ஒருவர் எங்களுக்கு நன்கு பழக்கமானவர் ( பெயர் சொல்லமாட்டேன் ) எனக்காக சிபாரிசு செய்ய அடுத்த நாள் மாலை என்னை நீச்சலடிக்க சொல்லி திறமையிருந்தா பார்க்கலாம் என்றபடி சொன்னார் . நானும் நீச்சலடிக்க கோச் பார்த்து பையன் பரவால்ல லெப்ட்ல தான் மிஸ்ஸாகுது பாத்து சரி பண்ணிக்கலாம் என்ற வார்த்தையுடன் காத்திருப்பில் கிடந்தேன் .
உள்ளே வந்த ஒருவர் என்னை பார்த்து விசாரித்து பின் அட பரவால்ல சேர்த்துகங்க என்ன போயி ? என்றார் . பின் ஆழ்ந்த யோசனைக்கு பின் என்னை நாளை முதல் வா என்றார். சந்தோஷம் கூடவே ஒரு ப்ரஷர் எப்படியாவது ஜெயிக்கனும் நல்ல பேர் வாங்கனும் சிபாரிசு பண்ணவங்களுக்கு பேர்கெட கூடாது அவங்களுக்கும் நன்றியோடு இருக்கனும்னு முடிவு பண்ணி கிளம்பினேன்.
அடுத்த நாள் நான் வந்தும் அவர்கள் அதாவது ஜாபர், நவாஸ் அப்புறம் அப்போ பள்ளியின் சீனியர் தினேஷ். யாருமே இன்னும் வரல . நடந்த எதுவும் அவர்களுக்கு தெரியாது.
கோச் என்னை நீந்த சொன்னார் கால் வேகம் சரி டெவலப் பண்ணிக்கலாம் கை அசைவ மாத்தனும்னு செஞ்சி காட்டினார் . ரொம்ப நல்ல மனிதர் கண்டிப்பையும் சிரித்தபடியே சொல்லி போவார். கை அசைவை மாத்தி நீந்த அவர் இன்னும் வேகமா செய் என்றார் மெல்ல மெல்ல வேகமாகிறேன் என்றுதான் நினைத்தேன் நினைத்த எண்ணம் முடிவதற்குள் குளத்தின் சுவற்றில் கை பட்டு நின்றேன் .
என்னை மேலே வர சொன்னவர் தண்டனை என்று 20 தோப்புகரணம் போடசொன்னார் போட்டேன் இப்ப மறுபடியும் போ இன்னும் வேகமா என்றார்.
அவர் போட சொன்ன தோப்புகரண காரணம் இப்போதுதான் புரிந்தது அடி நீந்துவதற்குள் அடேயப்பா என்றாகியது என்றாலும் வெறியுடன் வேகமாய் நீந்த முன்பைவிட 3 நொடிகள் முன்பே சேர்ந்துவிட்டேன் சரி பாராட்டுவாரேன்னு திரும்பி பார்த்தால் ஆளங்கில்லை . ஆனால் அந்த நபர்கள் வந்தனர் கூடவே சில புதிய முகங்கள் . அம்ப்ரீஸ் என்ற 6வது பையன் , ஸ்ரீநிதி என்னும் 5வது பாப்பா , சல்மான் என்ற முன்னால் மாநில அளவிலான முதலிட , 11வது பையன் (அவன் அப்பா தான் அன்னிக்கி கடைசியா சேர்த்துகோங்க என்ன போயி என்று சிபாரிசு பண்ணவர் திரு ஜாகீர் சுலைமான்) மேலும் வெங்கடேஷ் என்று தித்திக்குதே பட ஜீவா ஜெராக்ஸில் ஒருவன் அப்போதே ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் என்னும் தவளை ரக நீச்சலில் மாநில முதலிடம்.
இவர்கள் மத்தியில் ஒரு புழுகணக்கா இருந்தேன். முதல் நாள் ட்ரையில் ஆன் யுவர் மார்ச் என்னும் விசிலிலேயே நான் டைவ் அடிக்க எல்லாரும் என் பின்னாலே டைவ்வ எல்லாரையும் நிக்கவச்சி வசைபாடுதல் தான் .. பின் சொல்லவா வேணும் என் மீது எத்தனை காண்டிலிருந்திருப்பார்கள் . தினமும் 8-830 க்குள் முடிந்துவிடும் பயிற்சி லைட்கிடையாது கவனிக்கவும்.
இரண்டாம் நாள் ட்ரையல் ஆன் யுவர் மார்ச் விசில் பின் டைவ் ஆன் விசில் . டைவ்வியபின் வேகம் வேகம் என்றுதான் இதயம் துடித்தது அவர்கள் கரைதாண்டிய பின்னும் நீந்தி கொண்டிருந்தேன் . எல்லாரும் சிரித்தனர் . பின் மார்ச் ஸ்ட்ரையல் னு போர்ட்ல ப்ரீஸ்டைல் 400* 6 என்று பட்டியலிட்டு சென்றுவிடுவார் கோச் தினமும் தான் . 25 மீட்டர் நீளமுள்ள குளத்தில் 400 மீட்டர கணக்கிற்கு நீந்தவேண்டும் தொடர்ந்து நிற்காமல் 16 முறை கரைகளை தொடவேண்டும் ஆரம்பத்தில் கஷ்டம் தான் பின் பழகிற்று.
3ம் நாள் ட்ரையல் ஆன் யுவர் மார்சில் ஆழமாக மூச்சிவிட்டுக்கொண்டேன் . டைவ் ஆன் என்றதுமே டைவ்விவேகம் வேகம் என்றே நீந்தி கரைதொட்டேன் 4வதாக என்னை மேலே வர சொல்லி டைமரில் காண்பித்தார் 25 மீட்டர் 20 நொடிகளில் இனி இந்த வேகம் குறையவே கூடாது அதிகம் தான் ஆகனும்னு பாராட்டினார் . அதற்காக மீண்டும் ஒரு ட்ரையல் மீண்டும் டைவ்வி வேகமாய் தொட்டேன் அதே 4வதாக இன்னும் 3 நொடிகள் முன்னபாக . குட் பார்ம்க்கு வந்துட்ட . என்று அறைக்கு சென்று சீடைவர்ஸ் பயன்படுத்தும் ஷீ கொடுத்து அப்போ கால்ல மட்டும் நீந்துன்னாரு நீந்த கூடவே நடந்தபடி வேகமா வேகமா என்றபடி டைமர் பார்த்துகொண்டிருந்தார் . நைட் டைம் எக்ஸ்ட்ரா க்ளோரின் கண் தெரியாது . வேகம் வேகம் தொட்டேன் சுவற்றை 20 நொடிகளில்.
அன்று முடித்து வந்தபின் கண் எரிச்சல் அதிகம் சைக்கிளில் வீடு செல்ல முடியவில்லை காரணம் எதிருப்பவர்கள் யாருமே சரியாக தெரியவில்லை
இன்னும் இரண்டு நாட்கள் அவர்கள் ப்லோ ட்ரையல் செய்ய நானோ வேகம் வேகம் பின் அன்று சென்று காகிள்ஸ் வாங்கிட்டேன் அடுத்த நாள் வேகம் வேகம் பாதியில் டைவ்வ பயிற்சி ஆறடி தூரத்தில் ஒரு கயிறு , அதுவரை மூன்றடி ஆழம் நான் நிற்பதோ ஒன்றறை அடி உயர டைிவிங்க் பேட். என் உயரமே ஆறடி அங்கிருந்து டைவ்வினால் தரைபக்கமே போக கூடாது நேராக தான் டைவ்வனும் இல்லனா முகத்த மறந்திரனும் டைவ்விட்டேன் இன்னும் இன்னும் தூரமா என ஒரு ஐம்பது முறை டைவ்விருப்பேன். ஒன்னும் தேரல
அடுத்த நாள் 6வது நாள் ட்ரையல் ஆன் யுவர் மார்ச் வேகம் வேகம் டைவ் ஆன் தொட்டுடேன் சுவத்த 3வதாக 17 நொடிகள், அம்ப்ரீஸ்க்கு முன்னாடி , எனக்கு முன்னாடி சல்மான் , ஜாபர் இருவர் . அன்று முடியும் போது ட்ரஸ்ஸிங் ரூம்ல நான் கைவைத்திருந்தபோதே கதவை வேகமாக சாத்தி இரண்டு நகங்களை உடைத்துவிட்டான் அம்ப்ரீஸ் . நான் சத்தம் போட்டதும் அனைவரும் வந்துவிட அவனும் கதவை திறக்க ரத்தம் கதவிலும் கையிலும் தரையிலும் ரத்தம். உடனே சலசலப்பினால் கலேபரம் அதற்குள் கோச்க்கும் அம்ப்ரீஸ் அம்மாவிற்கும் தெரிய பின் அவன் அம்மா வந்து மன்னிப்புகேட்க பெரிய தலைசுற்றல் உண்மையில் எனக்கு அவன் வேண்டுமென்றே செய்ததாக படவில்லை ஒன்றுமில்லைனு சொல்லிட்டு வந்துட்டேன் .
பாவம் அந்த அம்மா என்கிட்டல்லாம் மன்னிப்பு கேட்கனுமா ? தெரியாம நடந்தது தான. என்று நினைத்து வருந்தினேன் அன்று.
அடுத்த நாள் கோச் கூப்பி்ட்டு இன்னிக்கு லீவ் நாளைக்கு மதியம் 1 மணிக்கு வாங்கனு சொல்லிட்டு கூடவே ஒரு பார்ம்மும் கொடுத்தார் . அந்த கதவு நிக்வுக்குபின் தினேஷ்க்கு என் மீது கொஞ்சம் கருணை . அவரை கேட்ட போது அடுத்த 3ம் நாள் ஞாயிறன்று மாவட்ட அளவிலான போட்டியாம். சரி நமக்கென்ன இப்பதான வந்தோம் எப்படியும் நம்மள சேர்த்துருக்க மாட்டாங்கனுதைரியமா வீட்டுக்கு போய்ட்டு அடுத்த நாள் மதியம் வர அதிர்ச்சி,
எங்க யாரயும் உள்ள விடல என்னடான்னு பாத்தா கலக்டர் அங்கு குடும்பத்துடன் வந்திருந்தார். சரி இன்னிக்கும் லீவுதான் என்றபட கிளம்ப கோச் வந்தார் எங்களை உள்ளே வர சொன்னார் . உள்ளே போய் நின்றோம் கலக்டர் சுதிப் ஜெயின் அப்போது தருமபுரி கலக்டர் . என்னிடம் என்னவென்று விசாரித்து பின் அதற்கென்ன வந்து பயிற்சி செய்ய வேண்டியது தானே கலக்டர்னா என்ன தனியா வாங்கனு எங்க பேரு கேட்டாரு ஜாபர் சார் , ஜோனல் லெவல்ல முதலிடம் சார் ப்ரீஸ்டைல்ல சார். தினேஷ் சார் ஜோனல் லெவல் முதலிடம் பேக்ஸ்ட்ரோக் சார் . நவாஸ் சார் இப்ப தான் ஜாயின் பண்ணேன் . அப்பாடா நமக்கொரு கம்பனியிருக்கு பவித்ரன் சார் நானும் இப்பதான் சேர்ந்தேன் சார் . ஆனா நீ ஜோவியலாபேசறன்னார்ஒருநாள் பார்த்ததால் இந்த பொய் தகும்.
அப்புறம் அவர் குடும்பத்த அறிமுகபடுத்தினார். பின் பயிற்சி துவங்கி பெண்டெடுக்க கலக்டரும் அங்கேயே உக்கார்ந்து பார்த்தார் பரவால்ல சார் பசங்க பகுத் அச்சா என்று மென்று துப்பியது போல் சொன்னார் என்றாலும் மனதார சொன்னார் கோச்சிடம் பாராட்டிவிட்டு , டிஸ்டிக் மேட்ச் அப்ப வரேன்னு போயிட்டாரு போனதும் எங்க பயிற்சியும் முடிந்தது. கோச் என்ன கூப்ட்டு உன் பர்த் சர்டிபிகேட் ஜெராக்ஸ், ஸ்கூல்ல போனபைட் எல்லாம் வாங்கிட்டு தினேஷ்கிட்ட அப்ளிக்கேஷன் இருக்கு பில்பண்ணி கொண்டுவா நாளை மறுநாள் காம்பிடெஸன்ல கலந்துக்கனும் னு குண்ட தூக்கி போட்டார் என்றாலும் உள்ளார ஒரு திருப்தி நாமளும் காம்பிடிஷன்க்கு கலந்துக்குறோம் அதும் வந்து பத்தாவது நாள்.
எல்லாம் வாங்கி குடுத்துட்டேன் நாளை காலை 9 மணிக்கு காம்பிடிஷன் ஆரம்பம் 8 மணிக்கே போயிட்டேன் . என் வாழ்வின் முக்கியமான நாளாச்சே . கோச் தவிர யாருமில்ல , புதுசா லேன் கயிறு கட்டி , க்ளோரின் போட்டு எல்லாம் பிரஸ்ஸா இருந்தது .
எல்லாரும் வந்திட ப்ரஸ்காக ஒரு ட்ரையல் அப்ப நான் நான்காவது இடம் . தினேஷ் வந்து டேய் இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணு ப்ரைஸ் அடிச்சரலாம்னு சொல்லிட்டு போனான். என் போட்டிக்கான டைம் வந்தது வெவ்வேறு போட்டியாளர்கள் வந்திருந்தனர் . நானும் அம்ப்ரீஸும் தான் தெரிந்தவர்கள், வந்தவர்களுக்கு குளம் பற்றி தெரியாது.
ஆன் யுவர் மார்ச் வேகம் வேகம் ஆழ்ந்த மூச்சு வேகம் . டைவ் ஆன் விசில் முதல் முறை நான்கடியில் சரியாக டைவ்வினேன் இதுவரை நான் தொடாத டைவ் தூரம். தினேஷ் கத்தினான் வேகமா வேகமா என்று கரைதொட்டு மீண்டும் வர வேண்டும் வந்துவிட்டேன் 2வதாக , டைமர் வச்சிருந்த கோச் அவன் பேர எழுதிக்கங்க னு ஒரு எவாலுவேட்டர அனுப்பினார் . அவரும் வந்து என் பெயர் கேட்டு எழுதுகையில் அந்த அம்மா வந்து ஏங்க அவன தான் 2வந்தான் நான் தான் பாத்தனே இவன் நாளாவதாதான் வந்தான் என்று என்னை காட்டி 2வது என்று அம்ப்ரீஸை காட்டியது யார் தெரியுமா அம்ப்ரீஸிஅம்மா ஆனால் அவன் அப்பதான் தண்ணில இருந்த நிமிருகிறான் . பெயர் மாற்றி எழுதபட்டது கோச் வந்து சொன்னார் என்னால எதும் பண்ணமுடியலனு சரி பரவால்ல சார் இந்த ரவுண்ட்ல தான் அம்ப்ரீஸ் இ்ல்லயே எனக்கொரு சான்ஸ் குடுங்க என்றேன் டேய் அது 19 வயசு காரங்களுக்குடா . பரவால்ல சார் நான் ட்ரை பன்றேன் . என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கலக்டர் உள்ளே வந்தார் . அவர் சார் பையன் எப்படி என்க அவர் நடந்ததை சொல்ல போக நான் வேண்டாம் என்றேன் .
சார் இந்த ரவுண்ட்ல தோத்துட்டேன் சார் அதான் அடுத்த ரவுண்ட்ல இன்னொரு சான்ஸ் கேக்குறேன் ஆனா ஏஜ் பத்தாதுனு சொல்றார் சார் அதான் என்றேன். அதனால என்ன உன்ன பாத்தாலும் 19 வயசு மாதிரிதான் இருக்கு இந்த ரவுண்ட்ல ஜெயிச்சுறுவல்ல ? நிச்சயமா சார். பின்ன என்ன அனுப்புங்க சார் என்றார் கோச்சிடம்.
அவரும் சரியென்க , அடுத்த ரவுண்ட் 19 வயதினருடன் அம்ப்ரீஸ் இல்ல நிம்மதி என்று ஆன் யுவர் மார்ச் வேகம் வேகம் வெறியுடன் வேகம் டைவ் ஆன் என்றதுதான் நான்கரை அடியில் டைவ் தினேஷ் பயந்தேவிட்டான் தண்ணிலயே பறக்குறான்டா என்று , இம்முறை 4 முறை கரை தொட வேண்டும் தொட்டேன் டைமர்படி 1.23 நிமிடத்தில் ஏன் டைமர் சொன்னேன்னா கூட இறங்கினவர்கள் இன்னும் மூணாவது நீளத்தில் தான் இருந்தனர் .
ஜெயிச்சுட்டன்டா என்றிருக்கையில் , வந்தது வினை அதே அம்ப்ரீஸ் அம்மா அதான் அவனுக்கு பரிசு வந்துருச்சே இன்னுமென்ன ? அதெப்படி நீ ஜெயிக்கலாம் என்றது போல் எவாலுவேட்டரிடம் எதையோ சொல்ல அவர் வந்து என் பெயர் கேட்டார் சொன்னேன் . டிஸ்குவாலிபைட் என்றார் சுத்தம் போச்சிடா என்று வந்துவி்ட்டேன் கோச்சும் ஒன்றும் சொல்லவில்லை , யாரும் ஒன்றும் செய்யமுடியவில்லை.
என் வீட்டிலிருந்து அம்மா வந்த போது நான் தோற்றுபோயிருந்தேன் என்று மட்டும் அறிந்து அவங்க பங்குக்கு திட்டிட்டு விட்டாங்க . கலக்டரும் பரிசு குடுத்துட்டு போயிட்டார்.
அடுத்த நாள் , பயிற்சியில் கோச் என்னிடம் எதுவும் பேசவில்லை கோபமா குற்றஉணர்வா தெரியல, ஆனா அன்று ஒரு நாளிலேயே மீதமுள்ள 3வகை நீச்சலும் கற்றுக் கொண்டேன் தினேஷ் தான் சொல்லிகுடுத்தான் . இரவு கிளம்பும்போது கோச் அனைரையும் நிற்க சொல்லி என்னிடம் நாளையில இருந்து நீ பீஸ் கட்டிதான் வரணும் அதும் டிஎஸ் ஓ ஆபிஸ்ல பீஸ்கட்டி பாஸ்வாங்கிட்டு தான் உள்ளவரனும் இது ஸ்போஸ்ட் டிபார்ட்மெண்ட் ஆபிசரோட ஆடர் நாங்க ஒன்னும் பண்ணமுடியாது என்றார். நான் சரி என்றேன் . வெளியே வரும்போது அம்ப்ரீஸ் சொன்னான் ப்ரைஸ் வாங்க துப்பில்ல அதான் பீஸ்கட்ட சொல்லிட்டாங்க என்று கேலி செய்தான் . தினேஷ் சண்டைக்கு போனான் நான் அவனை தடுத்து தனியாய் அழைத்து வந்து சொன்னேன் . இனி நான் வரமாட்டேன்னு ஏன்டா அந்த பொடி பையன் சொன்னான்னு கோச்சிகிரியா? அவன ரெண்டு தட்டு தட்டுனா கம்முனு ஆயிற்றான் . அதுல்ல இது வேற காரணம் ஏன் பீஸ் ஆ அப்பாக்கிட்ட சொல்லு நான் வேணும்னா சொல்றேன் நடந்தத சொன்னல்ல . இல்ல . ஏன்டா உனக்கென்ன தியாகினு நெனப்பா ? . இல்ல வந்து சரி வேணாம் விடு . எனக்கு என்ன காரணம் சொல்லு ? எனக்கு நீச்சல் வரல அவ்ளோதான் . டேய் உண்மைய சொல்லு என்னமோ மறைக்கிற ? இல்லடா இதான் காரணம் .
வீட்டுக்கு போய் அப்பாட்ட சொன்னேன் எனக்கு பிடிக்கலப்பாநான் போகலன்னு . அப்பா என்னமோ அடமபுடிச்சி போன? எனக்கு அப்பவே தெரியும் நீ எதுக்கும் லாக்கியில்லனு .. என்று வீடே சேர்ந்து வசைகளை வாரிவழங்கிய பின் இரவு தூங்கி
அடுத்தநாள் ஸ்கூல்க்கு போனேன் . தினேஷ்க்கும் ஜாபர்க்கும் ப்ரேயர்ல சர்ட்டிபிகேட் கொடுக்க அருகிலிருந்த பிடி மாஸ்டர் ப்ரைஸ் வாங்க முடியாட்டி ஏன்டா போறன்னார் கண்ல தண்ணி வந்து நிக்கும் போது சொன்னேன் இனிமே எந்த ஸ்போர்ட்ஸ்கும் போக மாட்டேன் சார் .
அதன்பின் விடு்முறையில்குளிப்பதற்காக போனபோது உடன் வந்த அப்பாவிடம் கோச் கேட்டார் சார் 300 ரூபா பீஸ்காக பாக்காதீங்க பையன அனுப்புங்கசார் அவனுக்கு நல்ல எதிர்காலம இருக்கு ..= பீஸ் பத்திகூட கவலபடாதீங்க கலக்டரே ஸ்பான்சர் பண்றேன்னு சொல்றாரு .
நான் கட்டமாட்டேன்னு எங்கங்க சொன்னேன் 300ருபாதான . அவன் தான் வரமாட்டேன்ங்கிறான் நீங்க சொன்னா இப்பகூட நான கட்றேன் அவன் வரனுமே? கோச் என்னை கூப்பிட்டு கேட்டார் ஏன்டா வரமாட்டேங்கிற ? எனக்கு நீச்சல் வரல சார் . கோச் எதுவும் பேசல கொஞ்ச நேரம் கழிச்சு அப்பாட்ட என்ன மன்னிச்சிருங்க சார் என்றார் . அதோடு பேச்சு முடிந்து நானும் அப்பாவும் வெளிய வந்துட்டோம் அப்பா கோட்டார் அவரு தான் உன்ன வரசொன்னாரே ஏன்டா போகல ? அவங்க அப்புடி தான் சொல்லுவாங்கப்பா நாம போலாம் .. இல்லா காசுக்காகன்னா நீபோ நான் கட்றேன் ஏன் கலக்டரே ஸ்பான்சர்பன்றனாரே . அதிக்கில்லப்பா எனக்கு புடிக்கல..
பின் ஒருநாள் தினேஷ ஸ்கூல் லாஸ்ட் டேல பாத்தேன் அப்போ சொன்னான் நீ ஏதோ முட்டாள் தனமா நின்னுட்டேன்னு நினச்சேன் அன்னிக்கி நீ மறச்ச காரணம் என்னனு நான் சொல்லட்டா ? சொல்லு பாக்கலாம் . நீ பீஸ்கட்ட வேண்டிய டிஎஸ்ஓ அம்ப்ரீஸ் ஓட அப்பா தான !. ஆமாம் அதான்...
அதன் பின் ஒரு வருசம்னு நினைக்கிறேன் கலக்டர் மாறும்போது எல்லாம் மாறிடிச்சி இங்க நீச்சல் பயிற்சி நிறுத்திட்டாங்க கோச் , அந்த பசங்க எல்லாம் என்ன ஆனாங்கன்னே தெரியல . இன்னும் இதுக்கு சாட்சியா நானும் அந்த நீச்சல் குளமும் தான் இருக்கு.
என்ன எதுக்கும் லாயக்கில்லனு நினைக்கிற வீட்டவர்களுக்கு இதுவரைக்கும் இந்த துரோகமும் தியாகமும் தெரியாது . இனிமேலும் தெரிய கூடாது . அவர்கள் பார்வைக்கு நான் இப்படியே இருந்தவிடுவது போதுமானது.
(தோல்விகள் தொடர்ந்தன)
Post a Comment