அறிவொளியில் சில கிறுக்கல்கள் - 5- மாலையும் காலையும்

பேயன்ன பெண்டீரும் பேரெழில் பூண்டதாய்!
சேயன்ன பொழிற்பூனை சேற்றள்ளி பூசியதாய்!
வெண்வண்ண சுண்ணமும் நீரோடு சிவந்ததாய்!
பொன்னன்ன மஞ்சள் அவளள்ளி வீசியதாய்!
பெய்யன்ன பொழிமழை போல்பெருக புகழ்ந்ததாய்!
மலரன்ன மங்கையன்ன மையல்மாலையும்  சிவந்ததே!!!!

ஆலங்கரைச லெனயாழின்  கரைத்தலென்ன
அமரந்தரைகூட்ட மெனபாடல் உரைத்தலென்ன
அவளிறங்கி அமர்ந்து கோலமிட்ட வாசலாய்!
நீர்கரைத்த நீர்தெளிக்க நொடி வெளுத்தவானம்!
வெளுத்திங்கு சொல்லும் சேதியென்ன?

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS