கடவுள் என்பதென்ன -6- தேவை

இதுவரை:
   கடந்த கட்டுரையில் கணிதத்தை ஒப்பிட்டு பார்த்தோம்.

சரி இதுவரை தேவை என்பதை கடவுளாக பார்க்கவில்லை தானே!!. இப்போ பாத்துறுவோம்.

சரி தேவை னா என்ன ? அதுக்கு எப்படி கடவுள் தன்மை வந்துரும்.? வந்துரும்னு தான் சொல்லனும். அறிவியல் இன்றுவரை கடவுளை ஏற்றுகொள்ள காரணம் கடவுள் என்று ஒன்று தேவை என்பதால் தானே.

இப்படி சொல்லுங்க 100 வருசத்துக்கு முன்னாடி இப்ப இருக்க என்னன்னலாம் இல்ல. அதலாம் எப்படி நமக்கு வந்தது? அறிவியலின் கண்டுபிடிப்பு தான். என்றாலும்?

சரி நல்லா கேளுங்க அது ஒரு புது விளக்கம். பரிச்சியமல்லாத விளக்கம் , ஒருத்தர் 5வது மாடியில் குடியிருக்கிறார் . அவருக்கு ஒரு விபத்தில் இரண்டு கால்களும் பறிபோயின . அவர் அங்கிருந்து கீழே வர யாராவது உதவவேண்டும் ஒருநாள் அவரது உறவினர்கள் யாருமில்லாஒரு வேளையில் பால்காரன் வந்து பாலை தரைதளத்தில் ஒரு பையில் வைத்துவிட்டு போய்விட்டான் அவரோ வந்து எடுக்க முடியாது அப்போது அவருக்கு ஒரு யோசனை வந்தது. ஒரு நீண்ட கயிற்றில் ஒரு பையை கட்டி கீழே போகிறவரை அந்த பையில் பாலை வைக்க சொல்லி கயிற்றால் இழுத்து எடுத்து கொண்டார். ஆண்டாண்டாக கிணற்றில் நீரிறைக்கும் முறை தானே அன்றுவரை அவர் உறவினர்கள் யாருக்கும் யோசனை வரவில்லையே ஏன் அவருக்கே அதுவரை தோன்றவில்லை , காரணம் அப்போது தேவைபடவில்லை....

60 வருசத்துக்கு முன்னாடி ப்ராய்லர் சிக்கன் கிடையாது தானே . இப்ப இவ்ளோ இருக்கே காரணம் என்ன தேவை தானே?

கற்காலத்தில் பச்சையாக தானே உண்டோம் பின் வேகவைத்து உண்ணதுவங்கி 500 -1000 வருடம் கழித்துதானே குக்கர் வந்தது காரணம் நவீன வீடுகளில் விறகடுப்பு பயனபடுத்த முடியாது என்பதால் தானே?

ஏன் பூமி பிறந்து 35லட்சம் வருடம் மனிதனே இல்லை அன்று ஏதற்கோ தேவைபட்டதால் தானே மனிதன் உருவானான்?

உருவானான்னு சொல்லிட்டேனா டார்வினிச கும்பல் குறை சொல்ல வந்துருமே ? சரி டார்வின் கொள்கையையே எடுத்துகொள்ளுங்கள். கடலில் இருந்த முதலை நிலத்திற்குவந்தது ஏன் நுரையீரலுக்காக தானே? தேவைக்கு தானே?

தேவைக்கு மட்டுமே அதிக ஆற்றலுண்டு தெரியுமா? உங்களை மரத்தில் ஏற சொன்னால் அசட்டு சிரிப்பு சிரிப்பீர்கள் அல்லவா ? அதே ஒரு சிங்கமோ புலியோ துறத்தும் போது மரத்தில் ஏற வேண்டிய தேவை தானே ஏறவைத்தது?

பெரியம்மை என்பதற்கான மருந்து எப்படி வந்தது தெரியுமா? அம்மை வந்தவரின் ரத்ததிலுள்ள அண்டிபையாட்டிக் பொருளை எடுத்து இன்னொருத்தருக்கு தந்து சோதிக்க வேண்டும் அதற்கு சோதனைக்கு வந்தவர்கள் எத்தனை பேர்  தெரியுமா 200க்கும் மேல் தன் உயிர் போனாலும் பரவாயில்லைனு வந்ததுக்கு காரணம் மருந்து தேவை என்பதற்கு தானே?

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் தன் மனைவிக்கு பேச , தாயிடமே தந்தையிடமோ பேச வேண்டிய தேவை தானே இன்று உலகமெங்கும் கைபேசி பரவ காரணம்.?

கடவுள் என்பதும் கூட தேவை தானே? புரியவில்லையா ? ஒரு செயற்கரிய செயல் ஒன்றை செய்ய போகிறீர்கள் உங்கள் மீதான நம்பிக்கை தடுமாறும் போது எல்லாம் அவன் செயல் என்று நம்பி செய்வதில்லையா? அதற்கு தேவைபடுகிறாரல்லவா கடவுள்?

இந்த பூமி சுழல்வதே நம் தேவைக்கு தான் தெரியுமா? சுழல்வதை நிறுத்திவிட்டால் சூரியனின் ஈர்ப்பினால் அதில் விழுந்துவிடும், அல்லது புவிஈர்ப்பு விசை போய் நம்மை விண்வெளியில் வீசிவிடும்..

அவர்தம்மை அறிகிலார் தம்மை
அறியாவண்ணம் அறிவித்து எம்மை
அறியும்வண்ணம் ஆக்கிவிட்டு உம்மை
அறியும்எண்ணம் தந்து அறியவிட்டாயே !! சர்வமே !!

இந்த பாடலும் மறைமுகமாய் தேவையின் சக்கரத்தை தான் சொல்கின்றதோ?

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم