பாழுங்கிணறு

ஹலோ எவரிஒன் , நான் அர்ஜுன் கேம்பிரிட்ஐ் ல பிசிக்ஸ்ல பிஎச்டி முடிச்சிருக்கேன் .என்ன கான்ஷுல் னு கேக்கலயே? ப்ரிக்ஷன் அண்ட் நியூக்கிலியர் அனாடமி.. அதாவது உராய்வு மற்றும் அணுக்கருவியல் இயல்பு .. சரி இப்ப தான் தமிழ்நாட்டுக்கு வந்துருக்கேன்.. தாத்தா அவர் வயசுல இந்தியா விட்டு வந்தாரு அப்புறம் அங்கேயே செட்டிலாகி அதெல்லாம் எதுக்கு ... நான் ஏன் தமிழ்நாடு வந்தேன் ? அதுக்கு முன்னாடி நான் எங்க இருந்தேன்னு உங்களுக்கு தெரிஞ்சிக்கனும் இல்லையா? செர்ன் சென்டர் ஆப் ரிசர்ச் ஆன் எலக்ட்ரான் அண்ட்  நியுக்கிலியஸ் .... அட சமீபத்துல கூட நடராஜர் சிலை வச்சிருக்குறத பத்தி வாட்சப் ல வந்துதே அந்த செர்ன் தான் ... அங்க பிசிக்கல் கேடர்ல நியூக்கிலியர் பிரிக்ஷன் அனலைசர்ல 3வது சப் அனைலைசர்.நான்....
செர்ன் ல என்ன பண்ணாங்க தெரியுமா?  ஹம் இல்ல ... என்ன டிஸ்மிஸ் பண்ணாங்க அவுங்க ரிசர்ச்ல சப் கன்டென்டா என் ரிசர்ச் நடத்தினதுக்காக .. ஆனா அதுக்கு 2 நாளைக்கு முன்னயே நான் விஆர்எஸ் வாங்கிட்டேன் . காரணம் எங்க தாத்தா ... அவர் இறந்து 13 வருசமாச்சு இப்ப சமீபத்துல என் அப்பாவும் இறந்துட்டார் அவர் கடைசியா என்கிட்ட ... இருங்க கண்ண தொடச்சுகிறேன்.. என்கிட்ட தாத்தா அப்பாக்கு சொன்ன ரகசியத்த சொன்னார் . அது ஒரு பாழுங்கிணத்த பத்திய ரகசியம். ஆனா தமிழ்நாட்டில அது எங்க இருக்குனு தாத்தாக்கும் அப்பாக்கும் எனக்கும் இன்னும் தெரியல.... அத தேடி தான் வந்துருக்கேன்...
வணக்கம் , 7, சாரங்கபாணி தெரு , தி.நகர். தானே . ஆமாங்க உங்களுக்கு என்ன வேணும்? . ஐயா நான் அர்ஜூன் லண்டண்ல இருந்து வரேன் மிஸ்டர் துரைராம் அவரு இங்க எனக்குதங்க ஏற்பாடு செய்ஞிருக்கறதா சொன்னாரு .. ஓ தொரராமா அவனே ஒரு ப்ராடு அவன நம்பிபணத்த குடுத்து ஏமாந்துட்டியா? போப்பா போ ! எங்காயாவது பார்க் பென்சில போய் தங்கு இது எங்க வீடு...
ஐயோ! சரி இப்ப எனக்கு அவன தேட நேரமில்ல !ஐயா நீங்க மனசு வச்சு தங்க இடங்கொடுத்தா ? யோவ் வயசு புள்ளைங்க இருக்க வீீட்டுல வெளியாள தங்க வக்கிறதா ? மன்னிக்கனும் அப்ப நீங்க எனக்கு வேற இடம் ஏதாவது ஏற்பாடு பண்ணி தர முடியுமா?  யோவ் எனக்கு வேற வேல இல்ல , எதுனா ஓட்டல்ல போய் தங்கு போ . அட ஆமா நன்றிங்கயா எனக்கு இது தோணல ...
43, ரம்யா லாட்ஜ்ங் திநகர், சென்னை . ஏசியா நான்ஏசியா? நான் ஏசி! டெலபோன் இல்ல பரவால்லயா? பரவாயில்ல , என்னமாே லண்டண்ங்கிற தமிழ் நல்லதான பேசற ?  பூர்வீகம் தமிழ்நாடு தான் . வெளிநாடு போன எவனும் தமிழ் விடுறதில்ல எங்க தாத்தா தமிழ்ல கவிதையெல்லாம் எழுதுவார் தெரியுமோ? அந்த அறுவல்லாம் எனக்கெதுக்கு பாஸ்போட்ட குடு சாவிய புடி ! பாஸ்போர்ட் எதுக்கு ? நீ ரூம் வாடக குடுக்காம எஸ்சாயிட்ட நான் லண்டன் வந்தா வாங்குறது ! ஆனா இந்த ஊர்ல என்க்கு பாஸ்போர்ட் அவசியம் வேற எதாவது வழி ? இருக்கு அட்வான்ஸ் உனக்கு எத்தன நாள் ரூம் வேணும் ? 2 மாசம் . என்னாது? ஆமா 2 மாசம்  இந்தா 20,000 அட்வான்ஸ் நான்  கிளம்பும் போது மீதி 10,000 கைல குடுத்துரு . எந்த ரூம்?
ரூபாய பாத்ததும் சிலைத்துவிட்டார் லாட்ஜ்காரர்  இப்ப தான் தெரியுது இந்தியா எப்படி அடிமையாச்சுனு. சரி சாவி ரூம் 56னு சொன்னது . சற்று குறுகிய விசாலமான ரெண்டுகெட்டான் அறை . பெட் கவர்ல எம்ரால்ட் வைட் . கார்னர்ல என் டேப் சைஸ்ல ஒரு டிவி . போதும் அட்டாச்ட் பாத்ரூம் டாய்லட் . தேவைக்கு தகுந்தது உணவுகள் கிடையாது வெளிய தான் சாப்பிடனும். சரி ரூம் வந்துருச்சு ஆனா அந்த ராஸ்கல் துரைராம் அவன விடக்கூடாது . பக்கத்து ரூம்ல யாராவது இருந்தா பேசிட்டு வரலாம்.
ஹலோ ?,  நீங்க தப்பா எடுத்துகலனா உங்ககூட கொஞ்ச நேரம் பேசலாம்னு ! வாங்க பரவால்ல நானும் போரடிக்குதுனு தான் இருந்தேன் . தங்க்யூ நான் அர்ஜூன் லண்டன்ல இருந்து வரேன் . ஓஹோ நான் பவித்ரன் , லண்டன்ங்கிறீங்க தமிழ் நல்லா பேசுரீங்களே எவ்ளோ நாளா தமிழ்நாடு பழக்கம் . இன்னிக்கு தான் தமிழ்நாடு வந்தேன் . தாத்தா தமிழ் தான் அவர் அங்கலண்டன்ல செட்டிலாகி , அப்புறம் உங்களுக்கே புரிஞ்சிருக்குமே ? யா, புரியுது தமிழ் லண்டன்லயும் வாழுது. ஆமா . சரி லண்டன்ல நீங்க என்ன வேல  செய்றீங்க? இங்க எதாவது பர்சேஸ் வந்தீங்களா? இல்லங்க தாத்தாக்கு ஒரு கடைசி ஆச அப்பாவால முடியல அப்பா சாகும்போது அந்த ஆசைய என்கிட்ட விட்டுபோய்ட்டாரு. நல்லது அப்பா ஆசைக்காக இவ்ளோ தூரம் வந்துருக்கீங்க . சரி உங்கள பேர் சொல்லி கூப்படலாம்ல ? தாராளமா அர்ஜூன் . நீங்க முந்திகிட்டீங்க பவித்ரன் . பை உங்கள பத்தி தெரிஞ்சிகலாமா? சொல்ற அளவுக்கு ஒன்னுமில்ல , டிடெக்டிவ் ப்ரொபசன் , ஒரு கல்ப்ரிட் காக இங்க சென்னை , சொந்த ஊர் தருமபுரி, அப்பப்ப கதை கவிதை எல்லாம் எழுதுவேன் அது பே ஸ்ஸன், ஓஹோ குட் எங்க தாத்தா கூட கவிதையெல்லாம் எழுதுவார் எல்லாம் அங்க லண்டன்ல இருக்கு ! நான் எப்பாவது கவிதைகள் படிப்பேன் கேம்ப்ரிட்ஜ் ல வந்த பழக்கம்.
ஓ தாத்தா வோட கவிதைகள் எதாவது இப்ப இருக்கா கிடைக்குமா? அவர் ஞாபகமா ஒன்ன எடுத்துட்டு வந்தேன் ரூம்ல இருக்கு இன்னும் லக்கேஜ் பரிக்கல அப்புறமா தரட்டுமா? அண்ட் கல்ப்ரிட்காகனு சொல்றீங்க தனியாவா வந்தீங்க ?  இல்ல ப்ரண்ட் ஒருத்தன் வக்கீல் அவனும் கூட வந்துருக்கான் , இதோ டிபன் வாங்கிட்டு வர போயிருக்கான் , ஒ நீங்க தப்பா எடுத்துகலனா எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? சொல்லுங்க உங்க தாத்தா கவிதைகள் கிடைக்கும்னா தாராளமா செய்யலாம். இல்ல உங்களுக்கே தெரியும் எனக்கு தமிழ்நாடு அறிமுகமேஇப்ப தான் எங்க டிபன் கிடைக்கும்னு தெரியல நீங்க , டிபன் வாங்கிட்டு வர சொல்லிறேன் என்ன வேணும் சொல்லுங்க பூரி பொங்கல் இட்லி தோசை ? இங்க எந்த புட்மே எனக்கு தெரியாதே? சரி நானே ஆர்டர் பன்றேன் ஹலோ வெங்கி 2இட்லி 1 மசால் பார்சல் தனியா எனக்கு 1 பொங்கல் போதும் ,
அப்ப இட்லி மசால் யாருக்கு ? புது ப்ரண்ட் ஒருத்தர் டா வாங்கிட்டு வா அறிமுகபடுத்தூறேன் . டேய்  பவி எதுனா லவ் மேட்டரா என்கிட்ட சொல்லாம , நீ டிபன் சாப்ட வரலனு சொல்லும் போதே சந்தேகம் வந்துச்சி !?! டேய் ப்ரண்ட் லண்டன் டா. யாரு அந்த ஆர்குட் ப்ரியாவா ? உன்ன போயி நல்லபுள்ளனு நெனச்சனே? டேய் வந்துருக்குறது பையன்டா .. அப்ப  ..!... டேய் நீ என்ன நெனைக்குறனு தெரியுது அடி வாங்குவ , ஒழுங்கா டிபன் வாங்கிட்டு வந்து தொல சீக்கிரம்..
சப்பா , ப்ரண்ட் யாராவேணா இருக்கலாம் வக்கீலா மட்டும் இருக்க கூடாது , என்ன சொல்றீங்க அர்ஜீன் ? ஏன் அப்டி சொல்றீங்க பாவம்... பாவம் வருவான் அப்புறம்  நீங்களே சொல்லுவீங்க பாருங்க...
அதிருக்கட்டும் தமிழ்நாட்டுல யாரையுமே தெரியாம எந்த தைரியத்துல வந்தீங்க? இங்க துரைராம்னு ஒருத்தர நம்பி வந்தேன் பணத்த வாங்கிட்டு ஏமாத்திட்டார்... நீங்களுமா? இந்த போட்டோல இருக்க ஆளா பாருங்க ... ஆமாங்க இவனே தான் .. அட என்னங்க நீங்க கேம்ப்ரிட்ஜ்ல படிச்சேன்ங்கிறீங்க  இவன நம்பி ஏமாந்துட்டீங்களே? 
மே ஐ கம் இன் ? வாடா டேய் . இல்ல எந்த போஷிஸன்ல இருக்கீங்களோ அதான் சேப்டிக்கு , கருமம்புடிச்சவனே வந்து தொல முதல்ல இவனுக்கு கல்யாணம் பண்ணனும் போல நிறைய நெட் பாப்பான் போல இதுல வக்கீல் வேற ... ஓ இவர் தானா? என்ன ரெண்டு பேர் இருக்காங்க இதுல யாரு வெங்கி சொல்லுங்க . ரெண்டு பேரா? அட கார்த்தி நீ எங்கடா வந்த . இல்லண்ணா பாஸ தனி விட மனசில்ல அதான் .இப்ப நான் தான்டா சந்தேகபடனும்... அர்ஜூன் இதோ டிபன் பார்சலோட இருக்குறது வக்கீல் வெங்கடேஷ்  . அது கார்த்தி அவனோட அசிஸ்டெண்ட் , ஓ நீங்க தான் அந்த நிவேதா கேஸ் எடுத்ததில்ல சார் நான் உங்க பேன் ,
அட வக்கீல் சார் உங்க புகழ் லண்டன் வரைக்கும் போயிருக்கே ? சரி டிபன் சாப்பிடலாண்ணா பயங்கர பசி, ஏற்கனே கடக்காரன் க்யூல ரேஷனுக்கு நிக்க வெக்கிற மாதிரி நிக்கவெச்சிட்டான். ஆர்ஜூன் வாங்க சாப்படலாம்... ஆங் பவித்ரன் இதுக்கு எவ்ளோ பணம்னு சொல்லுங்க குடுத்துரேன் . வெங்கி எவ்ளோடா ? டேய் இது ப்ரீடா!... பார்ரா சென்னைல கூட ப்ரீயா தராங்களா? இல்லண்ணா நாங்க அங்க துரைராம் கேஸ் பத்தி பேசிட்டு இருந்தோமா! அப்ப ஓட்டல் மொதலாளி கேட்டு அந்தாள் அவருக்கு 1 லடசம் ஏமாத்திருக்கான் அவரு உங்கள மாதிரி நிறையா கவிதை படிப்பாரு போல ,
அவன புடிங்க - அதுக்கு
முன்ன இத புடிங்க
னு காச வாங்க மாட்டேன்டாரு. அட இந்த துரைராமால நமக்கு நிறைய லாபம் போல பேசாம கொஞ்ச நாள் தள்ளி போடலாமா பவி? ஏன் வக்கீல் சார் என்னயும் வள்ளிராஜன மாதிரி நெனச்சிட்டியா? அய்யோ, இவரு ரொம்ப நேர்மை பாரு..  அதெல்லாம் விடுங்க இப்ப டிபன்க்கு நான் எவ்ளோ தரனும் சொல்லுங்க பவித்ரன் ?
அட, ஏங்க அர்ஜூன் சரி நீங்க லண்டன் போனதுக்கு அப்புறம் உங்க தாத்தா கவிதைகள காப்பி எடுத்து அனுப்புனுமில்ல அதுல கழிச்சுக்கோங்க...
ஓ, உங்க தாத்தா கவிதை எழுதுவாரா அர்ஜூன் ? ஆமா வெங்கி சார் ஏன் உங்களுக்கு கவிதைகள்னா புடிக்குமா? அய்யோ ஒரு கவிதை எழுதுறவன வெச்சி படுறபாடு பத்தாதா ? இல்லைங்க அர்ஜூனண்ணா அவருக்கு கவிதையெல்லாம் புடிக்காது கவிதா தான் , டேய் கார்த்தி ...
யார்றா கவிதா, வக்கீல் சார் எப்ப இருந்து இதெல்லாம்? சொல்லவேயில்ல ... வெங்கி சார் அப்ப நிவேதாவ நீங்க கல்யாணம் பண்ணிக்கல? அர்ஜீன் அண்ணா நிவேதா ஏன் வைப் . அய்யோ அந்த நிவேதா இல்லங்க கார்த்தி முதல்ல ஒரு நிவேதா கேஸ் எடுத்தாரே அவங்களயே கல்யாணம் பண்ணிக்கிட்டதா கேள்விபட்டேனே? வக்கீல் சார் சினிமா பிரபலத்துக்கு அப்புறம் உங்களுக்கு தான் கிசுகிசு வருது போல அனா லண்டன்ல பரவிருக்கே ?
சரி சரி பேசிகிட்டே இருந்தா எப்புடி சாப்பிடலாம்ணா அர்ஜூன் அண்ணா முதல்ல சாப்பிடலாம் அப்புறம் உங்கள நெறைய விசாரிக்கனம் போல...
கார்த்தி எனக்கு பொங்கல் , தெரியும்ண்ணா  முன்னயே எடுத்து வச்சிட்டேன் .. அர்ஜூன் அண்ணா உங்களுக்கு இட்லி மசால் இருக்கு எடுத்துக்கோங்க. தமிழ்நாட்டு புட்ஸ் டேஸ்டே தனி அதும் நான் வெஜ் ல அடிச்சுக்கவே முடியாது. நீங்க நான் வெஜ்ஜா இல்ல ..? நான் வெஜ் தான்.
சாப்ட்டாச்சு , அர்ஜூன் அண்ணா எப்புடி இருக்கு தமிழ்நாட்டு புட் ? சூப்பர் இவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டேனே! அதான் வந்துட்டீங்களே நாங்க இருக்கோம் சாப்டே டைம் ஓட்டலாம். ஆமா இன்னும் எத்தன நாள் இருப்பீங்க? தெரியல என் வேல முடியறத பொருத்து. ஓஹோ ஆனா நாங்க 2 நாள் தான் . ஐயோ நீங்க போய்டா எனக்கு போரடிக்குமே  எனக்கு உங்க எல்லாரயுமே ரொம்ப புடிச்சிருக்கு இங்கயே இருங்களேன் செலவு எல்லாம் நானே பாத்துக்குறனே. அட அதெல்லாம் வேண்டாம் , வேணும்னா ஒன்னு பண்ணலாம்... ஆனா அத நாங்க போகும் போது தான் சொல்லுவேன் ..
கார்த்தி , வெங்கி போலாமா? சரிண்ணா , பவித்ரன் நானும் வரலாமா ? இல்ல அர்ஜூன் இது கல்ப்ரிட் விசயம் நீங்க , அண்ணா கூட்டுபோலாண்ணா , சரி வாங்க அர்ஜூன் , கார்த்தி ஏரியா விசாரிச்சியா? ஆண்ணா , சைதாபேட்டை தான் உள்ள ஒரு கிராஸ்ரோடு வருது அங்க தான் பார்ட்டி ஒளிஞ்சிருக்கான் .
சரி வா ,..
சைதாபேட்டை ப்ரிட்ஜ்  தாண்டும் போது ஒருவர் வந்து என்னை வழி மறித்தார் . பவித்ரன் , ஏங்க கார்த்தி , அண்ணா அங்க பாருங்க யாரோ அர்ஜூன் அண்ணாவ புடிச்சி அடிக்கிறாங்க , அய்யோ.
கார்த்தி நீ ரோட் கிராஸ் பண்ணி அந்தாண்ட இருந்துவா , வெங்கி நீ ஸ்ட்ரெய்ட் கிராஸ் புரியுதா ?... என்ன பண்ண போறனு தெரியும்டா பாத்துக்குறேன் . நான் போய் அவன் பின்னிருந்து அவன் கால் முட்டியில் உதைத்து, மண்டியிட செய்து, தோள் பட்டையில் ஓங்கி அடித்து தலையை சாய்த்து காதில் ஒரேகுத்து ஆள் இனி எந்திரிக்க சில நொடிகள் இருக்கு  அதற்குள் நான் அவனை தூக்கி ப்ரிட்ஜ் தடுப்பில் சாய்க்க வக்கீல் வந்த வேகத்தில் எகிறி ஒரு மிதி அவ்ளோ தான் . கார்த்தி அர்ஜூன கூட்டிட்டு வா அப்புறம் , ஸ்நாப் எடுத்தறேன்ணா  . சென்னைல இது ஒருவசதி இந்த அடி அடிக்கிறோம் யாருமே கேக்கல பத்தியா வெங்கி.
எல்லா ஊரும் இப்ப அப்புடி தாண்டா இருக்கு...  சரி கார்த்தி அர்ஜூன என்கிட்ட விட்டுட்டு நீ மறுபடியும் அந்த கிராஸ் ரோட்ட எதிர்ல வரணும் . புரிஞ்சிதுண்ணா ப்ளாக் ஸ்டைல் தான? , பாஸ் போலாம்., பவி நான் எப்படி? வெங்கி நீ கதவிடுக்குல. அர்ஜூன் நீங்கதான் கதவ தட்டனும். சரிங்க வெங்கி சார் . கார்த்தி  நாம போலாம் வெங்கி அர்ஜூன் பத்தரம்.
கிராஸ் ரோடில் நிரம்பி வழிந்த கடைத்தெரு கடந்து வலதுபுறம் திரும்பி வீடு . அர்ஜூன் கதவ தட்டுங்க . வெங்கி ரெடி தான. கார்த்தி நீ போ. கதவு திறக்கும் சப்தம் மட்டும் வந்தது அவ்ளோ தான் அர்ஜூன் , இந்தாளு தான , ஆமாங்க , கார்த்தி இன்ஜெக்ட் பண்ணு, சிம்பிள் .
வெங்கி வீட்டுல ஒரு கிளான்ஸ் எதுனா தேருமா பாரு. கார்த்தி இவன ஓரமா கட்டிவை. பவி இங்க வாடா!!!, வந்துட்டேன் சொல்லு , டேய் பணம் இருக்கு 2 பிஸ்டல் லோட் பண்ணியிருக்கு . அர்ஜூன் , கார்த்தி உள்ளவாங்க, சொல்லுங்க வெங்கி...
இந்த பணம் எவளோ இருக்கு எண்ணுங்க...
பவி என்ன பண்ணலாம்? ஹூம்..... ஏன்டா என்ன பண்ண சொல்ற? எனக்கு ஐடியா இல்ல பவி நீ என்ன சொன்னாலும் சரி.. ஹீம்...... சரி கார்த்தி எவ்ளோ இருக்கு, வெங்கி பிஸ்டல எடுத்துக்கோ அர்ஜூனுக்காக , அண்ணா 3 லட்சம் இருக்குண்ணா , கார்த்தி இன்ஜெக்ஷன் எவ்ளோ நேரம் தாங்கும்? 6 மணிநேரம்ணா ,அப்ப இதுல 1.5 லட்சம் எடுத்துக்கோ அதுல 1 அந்த ஓட்டல்காருக்கு அர்ஜூன் நீங்க எவ்ளோ குடுத்தீங்க? 30ஆயிரம்ங்க, அத எடுத்துக்கோங்க டிப்பார்ட்மெண்ட்க்கு போச்சுனா வராது. ரெடிண்ணா,
வெங்கி கிளம்பலாம், அவன உள்ள போட்டு பூட்டிட்டு டிப்பார்ட்மெண்ட்க்கு சொல்லிரு.. சரி டா கொஞ்சம் தனியா வாயேன், தள்ளி போய்,, சொல்லுடா என்ன விசயம்? இல்லடா அந்த ப்ரிட்ஜ் இன்சிடென்ட பாத்தா இவனுக்கும் அதுக்கும் எதும் சம்பந்தமில்ல போலது அதான் . தெரியும்டா ஒரு டிடெக்டிவ் இதுக்கூடவா தெரியாது பிஸ்டல் எதுக்கு எடுக்க சொன்னேன் எல்லாம் காரணமாத்தான்...
சரி போலாம், மறுபடியும் ப்ரிட்ஜ் வரும்போது அந்த ஆள் இல்லை, வெங்கி சொல்லிட்டல்ல? அப்பவே, சரி அந்த ஓட்டல்காரர வர சொல்லனுமே? முதல்ல நாம ரூம்க்கு போகலாம்..
ரூம்க்கு வந்ததும், கார்த்தி டையர்டா? இல்லண்ணா என்ன சொல்லுங்க ? வேறன்ன சாப்பாடு தான் , சரிண்ணா அங்கயேவா ? ஆமா, பாஸ் உங்களுக்கு? எனக்கு ஒரு சாப்பாடு ஒரு ஆம்லெட்... அர்ஜூன் உங்களக்கு? எனக்கு எதாவது , நீங்க எல்லாம் என்ன வாங்குறீங்களோ அதே அண்ட் இந்தாங்க பணம் ! எதுக்குண்ணா? லன்ச்க்கு , அதுக்கு 5000ரமா உங்க ஊருல ரொம்ப காஸ்ட்லி போல,
சரி போய்ட்டு வரேன்ணா , டேய் டேய் என்று வெளியே போனேன் , கார்த்தி இன்னும் ரெண்டு வேல , தெரியும்ணா ஓட்டல்காரர் அப்புறம் அர்ஜூன் டீட்டைல் அதான, நீ ஸ்மார்ட் டா பட் சீக்கிரம் அவனுக்கு சந்தேகம் வந்துற கூடாது.
உள்ள வந்து  அர்ஜூன் அடி பலமா? ஆமாங்க  ரொம்ப வலி, எங்க தொழில் இப்படி தான் ரொம்ப ரிஸ்க்., அய்யோ நம்மாள ஆகாதுப்பா , சரி மேல சொல்லுங்க உங்க லண்டன் விசயத்த பத்தி , சொல்றேன் அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் . வெங்கி சார் நீங்களும் வந்து கேளுங்க, சொல்லுங்க .
எனக்கு உங்க எல்லாரையும் ரொம்ப புடிச்சிருக்கு , எனக்கு ஒன்னுனதும் எல்லாரும் வந்தீங்களே அதுவே பெரிசு. அதனால உங்க மேல எனக்கு நம்பிக்க வந்துரிச்சி, இதோ வந்துட்டேன் , இவனுக்கு கல்யாணம் ஆகியும் இந்த சின்ன புள்ள தனம் போகல டேய் மார்டீன் மண்டையா! பாஸ் கோவபடாதீங்க, உள்ள வாங்க ஜி, அண்ணா இவருதான் அந்த ஓட்டல்கார் , அர்ஜூன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இவரு விசயத்த மொதல்ல பேசலாம்.
சார் உங்க பேரு ?கோபி கிருஷணா சார் , கிருஷ்ணா!, கூப்டீங்களா சார் , இல்லைங்க இது வேற கிருஷ்ணா, கார்த்தி சொன்னான் காலைல நீங்க டிபன் காசு வாங்கிக்கலனு, அது பரவாயில்ல சார் நீங்க அவன புடிச்சு ஜெயில்ல போடுங்க அது போதும், இப்ப லன்ச்க்கு கூட பணம் வாங்கலண்ணா! , பரவாயில்லங்க எனக்கு இது நஷ்டமில்ல, அவன மாதிரி ஆளுங்களால வேற யாரும் ஏமாறகூடாது அது போதும். கார்த்தி வரும் போது எதாவது சொன்னியா? நோ பாஸ் , சார் எங்களுக்கு நீங்க ஒரு விசயம் சொல்லணும் , அவனால எப்படி நீங்க ஏமாந்தீங்க?, அதான் காலைலயே சொன்னனே தம்பி, வெங்கி நீ இரு, சார் அது சம்பந்தமா எதாவது போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்திருக்கீங்களா? சைதாபேட்டை ஸ்டேஷன்ல குடுத்துருந்தேன் சார் அவங்க பணத்த வாங்கிக்கிட்டு எதுவும் பண்ணல, சரி இதோ இவரும் அவனால ஏமாந்தவர் தான் இன்னிக்கி அடியாள் வச்சி அடிச்சிருக்கான், சார் அவன்ட அடியாள் யாரும் இல்லசார், வெங்கி , கார்த்தி கதவ சாத்து, ஓக்கே பாஸ் .
அதெப்படி உங்களுக்கு தெரியும், இதுல மறைக்க என்ன இருக்கு எனக்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் டிடெக்டிவ் அவர் தான் சொன்னார், ஸ்மார்ட் ஆன்சர் வெங்கி எனி டவுட்?, இல்லடா ,
சார் உங்களுக்கு ஒரு விசயம் சொல்லனும் அதுக்குத்தான் வர சொன்னோம் கார்த்தி அந்த பேக் எடு, சரிண்ணா , சார் இன்னிக்கி பகல் 11 மணியளவுல நாங்க அவன புடிச்சிட்டோம் அப்ப அவன்ட கிடைச்ச பணத்த எண்ணி பாத்ததுல 1:5 லட்சம் இருந்தது அதுல இவரோட 50 ஆயிரம் போக மீதி 1 லட்சத்த உங்களுக்கு குடுத்தறோம் , ஆனா நீங்க கம்ப்ளெண்ட விடாம போலீஸ்க்கு இந்த கேஸ நடத்தனும் உங்களுக்கு பணம் திரும்ப வந்ததா அவங்களுக்கு தெரிய வேண்டாம் புரிஞ்சுதா?, புரியுது சார் உங்களுக்கு எப்புடி நன்றி சொல்றதுனே தெரியல ரொம்ப நன்றிசார் என் குடும்பமே நடுதெருவுல இருக்குது நீங்க காப்பாத்திடீங்க, அதெல்லாம் வேண்டாம் உங்க கடைல எங்களுக்கு டெய்லி ப்ரீயா சாப்பாடு குடுங்க போதும், டேய் கார்த்தி சும்மாரு , அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார் நீங்க கிளம்பலாம்.
பரவாயில்ல சார் எனக்கு எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கீங்க இனி சாப்பாடு இங்கயே அனுப்பிறேன், அய்யோ சார் அதெல்லாம் வேண்டாம், இல்லல்ல நீங்க வேண்டாம்லாம் சொல்லக்கூடாது நான் வரேன்...
டேய் கார்த்தி  உனக்கு வாய் சும்மாருக்காதா? விடுங்க பாஸ் இனி சாப்பாட்டு செலவு மிச்சம்...
அர்ஜூன் நீங்க என்னமோ சொல்ல வந்தீங்களே?, ஆமா பவித்ரன் அதான் உங்க மேல நம்பிக்க வந்ததால , அண்ணா உங்ககிட்ட கொஞ்சம் பேசனுமே, கார்த்தி இருடா , சரிங்க அர்ஜூன் எதாவது கிராஸ் ஆகிட்டே இருக்கு முதல்ல சாப்புடலாம் அப்புறம் சொல்லுங்க, கார்த்தி சாப்பாடு எடுத்துதாடா, சாப்டாச்சு
கார்த்தி எங்கடா என் ஆயுதம்?, அய்யோ மறந்துட்டேன்ணா இதோ போய் வாங்கிட்டு வந்துறேன், இல்ல அர்ஜூன் நீங்க சாப்புடுங்க இதோ வந்தறேன் வெங்கி அர்ஜூன் பத்தறம், கார்த்தி வாடா போலாம்,.
என்னாச்சுடா, அண்ணா வந்த ஆளு உள்ளூரு இல்ல அவனுக்கும் துரைராமுக்கும் சம்பந்தமில்ல , அது தெரியும்டா துப்பாகி வெச்சிருக்கவன் அடிக்க ஆளனுப்புவானா? அப்பிடியே ஆளப்புனாலும் நாம வரவரைக்கும் வீட்டுலயா இருப்பான்?, அண்ணா அர்ஜூன் கேம்ப்ரிட்ஜ்ல படிச்சிருக்காரு , அவனே சொல்லிட்டான், ஆனா டாக்டரேட்னு சொன்னாறா? என்னது,? ஆமாண்ணா அர்ஜூன் கேம்ப்ரிட்ஜ்ல டாக்டரேட் பிஎச்டி அதும் பிரிக்ஷனல் அண்ட் நியூக்கிலியர் அனாடமி ல அதுமில்லாம செர்ன்ல யும் வேல பாத்துருக்காரு் இப்படிபட்ட ஆளு தமிழ்நாட்டுக்கு பொழப்பத்து போய் வருவாரா? , யோசிக்க வேண்டிய விசயம் தான் கார்த்தி இரு அவனும் ஏதோ சொல்லவந்தான் பாப்போம், சரிண்ணா கோக்? வேண்டாம் இது மொதல்ல... அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அவரு நம்மள பாக்க வந்தது , பாஸ் பத்தி தெரிஞ்சு சொல்றதுலாம் பாத்தா கோயின்சிடன்ஸ் மாதிரி தெரியல... லெட் வீ ஸீ கார்த்தி.
வாங்க பவித்ரன் ஆயுதம் கெடச்சுதா? இல்லங்க பைதிபை நீங்க என்னமோ சொல்ல வந்தீங்க அதுக்குள்ள , யா சொல்லனும் உங்க எல்லார்கிட்டயும் சொல்லனும் நான் கேம்ப்ரிட்ஜ்ல பிஎச்டி ப்ரிக்ஷனல்  அண்ட் நியுக்கிலியர் அனாடமி, அதனால எனக்கு செர்ன்ல வேல கிடைச்சது , அது என்ன செர்ன்?, அதுவா வெங்கி சார் அது ஒரு ஆய்வுகூடம் பலநாடுகள் சேர்ந்து பிரபஞ்சத்தின் ரகசியங்கள ஆராயறதுக்கு பட் அதுல வேண்டாம் விடுங்க ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அவுங்க விதிமுறைகள மீறினதா என்ன டிஸ்மிஸ் பண்ண பாத்தாங்க ஆனா நான் அதுக்கு ரெண்டு நாள் முன்னமே விஆர்எஸ் வாங்கிட்டேன் . சரி பட் தமிழ்நாட்ல என்ன விசயம்? ஒன்னுமில்ல கார்த்தி இங்க ஒரு கிணத்த தேடி வந்துருக்கேன். கிணத்துக்கா? ஆச்சரியமா இருக்கே? ஆமா அதுல சில ஆச்சரியமானரகசியங்கள் இருக்குறதா எங்க தாத்தா சொல்லிருக்கார் ஆனா அது எங்கனு தான் அவருக்கே தெரியல , சரி நீங்க எப்படி கண்டுபிடிப்பீங்க?, கொஞ்சம் கஷ்டம் தான் பவித்ரன் ஆனா விடமுடியாதே !, சரி மதியம் உங்கள அடிக்க வந்த ஆள் யாருனு தெரியுமா? , நீங்கதான சொன்னீங்க துரைராம் ஆளுனு , என்னத்த டாக்டருக்கு படிச்சீங்களோ தெரியல  ஏன் சார் அவன்ட தான் துப்பாக்கி இருந்ததே தூரத்துல இருந்து சுடிருக்கனும், அண்ட் உங்கள அடிச்சும் ஆள் வீட்டிலேயே இருப்பானா?
க்ரக்ட் பட் அவன நான் பாத்ததில்லையே ., நல்ல யோசிங்க  .இல்லங்க எனக்கு ஞாபகம் இல்ல.  சரி நீங்க தமிழ்நாடு வர விசயம் யாருக்காவது தெரியுமா? இல்ல கார்த்தி என் வீட்டுக்கும் கனகசுந்தரம்ங்கிறவருக்கும் தான் தெரியும். சுத்தம் அந்த கனகசுந்தரம்ங்கிறவர் யாரு? எனக்கு தூரத்து சொந்தம் சித்தப்பா மொற ஆனா இதுக்குதான் வந்தேன்னு அவருக்கு தெரியாதே!!
சரிங்க அர்ஜூன் உங்க விசயம் கொஞ்சம் விவகாரமா தெரியுது ஜாக்கிரதையா இருந்துகோங்க நாங்க வரோம்.. அய்யோ பவித்ரன் என்னங்க இப்புடி விட்டுட்டு போறீங்க? இல்லங்க எங்க வேல முடிஞ்சது நாங்க எங்க ஊருக்கு போறோம். அட நீங்க போய்டா என் கதி! அதுமில்லாம நடந்தத பாத்தீங்கல்ல இப்படி சிக்கல்ல விட்டு போறீங்களே? அர்ஜூன் நாங்க இதுல எப்படி தலையிட முடியும்எங்க ஜாப் வேற தெரியுமில்ல? தெரியும் வெங்கி சார் நீங்க ஏன் இத ஒரு க்ரைம் கேஸா எடுத்து செய்ய கூடாது? பட் வாட்ஸ் த க்ரைம் ? வெங்கி இரு அர்ஜூன் நீங்க என்ன சொல்லவறீங்க? ஐ வில் பே த ப்ஈ இந்த வேலைய நீங்களும் எடுத்துக்கங்க, ஆமாண்ணா லஞ்ச்கே 5000 தராரு, டேய் கார்த்தி !, இத பாருங்க அர்ஜூன் இது எங்க இயல்புக்கே சம்மந்தமில்லாத வேல! புரியிது பவித்ரன் ஆனா சுஜாதா கதைகள்ல வர மாதிரி இத உங்க பாணில நடத்துங்களேன் ? ஓ சுஜாதாலாம் படிப்பதுண்டா? நிறையா, சுத்தம் அப்ப கேஸ் எடு்க்க போறான். கார்த்தி நீதான் டாஸ் காயின் என்ன சொல்ற ? நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன்ணா,
ஓகே அர்ஜூன் ஆனா எங்களுக்கு இந்த ஊறுகா அளவு  டீட்டைல் பத்தாது, நான் கொஞ்சம் அது பத்தின ஸ்கிப்ட்ச்சர்ஸ் கொண்டு வந்துருக்கேன் அத பாத்து உங்களுக்கு எனி ஐடியா வருதா பாருங்க!

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم