எழுதபடாத கவிதைகள் - பரந்த பிரபஞ்சம்

தூசெயென இருந்ததொன்று - தன்னைதின்று
துளியென பிறழ்ந்து - தன்னுள் உதிர்ந்து
தூணென பெரிந்து - தன்னால் உடைந்து
தூசென இருந்ததென்னே!!?

ஒன்றிலாது ஒன்றென்றாகி - யுகயுகமாய்
ஒன்றிணைந்து ஒன்றிலாதாகி - புதுபுதிதாய்
ஒன்றிழந்து ஒவ்வொன்றாய் - விதவிதமாய்
ஒருமித்த ஒன்றானதென்னே!!?

தானின்றி தன்னிலியங்கி - வானிலாது போல்
தானில்லா தனையில்லா - கோனென
தனையறிந்து தனைபிரிந்து - வேறென
தனைபெற்று தனையறுத்ததென்னே!!?

காலமில்லா காலத்தே - பிறந்து
காலமில்லா காலத்தே - இறந்து
காலமென்றே காலத்தை - பெற்று
காலமெல்லாம் காலமானதென்னே!!?

தானேபிறந்து தனைபடைத்து - நாமறியும்
வானேஅளந்தும் அளவிலாதுடைத்து - நாமென
நாமேயென நமதென பிரிந்து - விளையாடும்
நாமறிந்தும் அறியாதபடி
பரந்த பிரபஞ்சம்!!!....

1 تعليقات

  1. எழுதபடாத கவிதைகள் - பரந்த பிரபஞ்சம் >>>>> Download Now

    >>>>> Download Full

    எழுதபடாத கவிதைகள் - பரந்த பிரபஞ்சம் >>>>> Download LINK

    >>>>> Download Now

    எழுதபடாத கவிதைகள் - பரந்த பிரபஞ்சம் >>>>> Download Full

    >>>>> Download LINK

    ردحذف

إرسال تعليق

Post a Comment

أحدث أقدم