எனக்கும்_ஒரு_கீதோபதேசம்

ஆழ்மனதின் மேல்மட்டம் நிரம்ப அழுது . தேம்பி தேம்பி தவழ்ந்து தவழ்ந்து. மெலிந்து கரைந்து உளறிகுழறி. உமிழ்நீர்சிதற . கால்கை உதற தரையில் விழுந்து . உள்ளம் உருகி உண்மை திருகி. தவமின்றி தவறிவிழுந்தபடி அவன் பாதம் பற்றி வேண்டினேன். உலகின் உண்மையியல்பை சொல்வாயோ கடவுளே! என்று. குழந்தைக்கும் குறைவான ஞானம் கொண்டவனாகியும். குறைபட்டவனாகியும் உனை குருவாய் ஏற்றுவந்தேன். குற்றம் காணாது உற்ற சீடனாய் ஏற்பாய் கண்ணா! . திருவே குருவாய் கொண்டெனை குருகுலமாணவனாய் நல்முறையில் வளர்த்து ஞானம் விளம்பி விளங்க செய் . என் சர்வமும் இழந்து சூன்யவெளியில் நிற்பதுபோல் முற்றுமிழந்து உனை சரணடைந்தேன் இனி உன் வழி என் விழியென விதிசெய். என்று உருகியழுத எனை. தோள்தேற்றி தூக்கி நிறுத்தி எனை சரண்புகவே வேண்டாம். நான் குருவாக வேண்டாம். நீ சீடனாக வேண்டாம். ஒரு நல்ல நண்பனாய் சொல்கிறேன் கேள். யுகந்தோறும் குருவாய் ஞானமளித்து சளித்துபோனது எனக்கு. இம்முறை சகமார்க்கம் . நான் உன் நண்பனல்லவா . நீயும் என் தோழனல்லவா தோள்மீது கரம் போட்டபடி தொலைதூரம் நடந்தபடி சொல்கிறேனே... என்றான் கண்ணன்...

துவங்கியது .. #எனக்கும்_ஒரு_கீதோபதேசம்..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم