கவிதை செய்வோம் வா... 3

போன கட்டுரையில் புதுக்கவிதை பற்றி சொன்னேன். இப்போ குமுதம் புத்தகத்தில் நடுபக்கத்திலோ அல்லது ஏதோ பக்கத்தில் வாசகர் கவிதைனு வரும் எடுத்து பாருங்க.. இந்த ரூல்ஸ் இருக்கும் . அப்ப உங்களுக்கு தெளிவா புரியும்..

இப்ப ஒரு தலைப்புல ஒரு பக்கத்துக்கு கவிதை எழுதி பாருங்க.. பக்கத்துல இருக்கவங்கள படிச்சு பாக்க சொல்லுங்க நிச்சயம் பாராட்டலாம் . பாராட்டல் உங்களுக்கு அதுபோல திட்டினாலும் நீங்கள் பயன்படுத்திய வார்த்தையில் தவறு என கொள்க...

அடுத்து பாக்கியிருப்பது மரபு கவிதைகள் ... இதுக்கு இன்னும் சில விசயங்கள் உள்ளது.. அவை..

1) ஒலி - சப்தம்
2) வகையொலி - மயங்கு சப்தம்..
3) சீரடி , பாவகை..
4) எழுத்து..
5) ஈற்று..

1) ஒலி  ... ஓசை என சொல்லபடும்.. முதல் கட்டுரையில் பார்த்த சப்தமும் இதுவும் ஒன்றுதான்.. இங்கும் லாலாலா .. தனானனா தான். ஆனால் வகையுண்டு..

செல்லும் ஓசை - செப்பலோசை
தூரத்தில் கூப்பிட்டு சொல்லும் ஓசை - அகவலோசை
டான்ஸ் ஆடும் படியான ஓசை - துள்ளலோசை..

உதாரணமாக ...

திருக்குறள் செப்பலோசை

பரணி அகவலோசை

பள்ளு துள்ளலோசை..

உங்களுக்கு எந்த ஓசை வேண்டுமோ அதை முடிவு செய்து கொள்ளுங்கள்..

2) வகையொலி...
       இது உள்ளுக்குள்ள ஒலிஞ்சிருக்கும் ரைமிங்.. பாட்டுக்குள்ள வர செமிடோன் மாதிரி..  இது அத்தனை மரபுகவிதையிலும் பொருந்தும்..
தெளிவா சொல்லனும்னா .. எதாவது ஒரு பழைய கவிதைல. பாதி வார்த்தை முன்னாடி சேர்த்துட்டு மீதி வார்த்தை பின்னாடி சேர்த்திருக்கும் அது வகையொலி காரணமா தான்..

உதாரணமா..

சென்றதினி மீளாது,மூடரே!நீர்எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

இதில் அர்த்தபட முதல் வரியில் இருக்கும் நீர் எப்போதும் என்பது வகையொலி எனப்படும்.. பின் தின்றுவிளை  யாடியின்புற் றிருந்து என்பது வகையொலிக்கு நல்ல உதாரணம்..

தின்று விளையாடி இன்புற்றிருந்து என்பதை பாடலில் தாளவகைக்காக பிரித்தும் சேர்த்தும் எழுதியிருப்பான் பாரதி.. வகையொலி இது..

3) சீரடி , பாவகை...

    சீரடி என்பது வழக்கம் போல் இத்தனை வார்த்தை இத்தனை வரி என்பது தான். 

   பாவகை சற்றே புதிது இத்தனை வார்த்தை இத்தனை அடி என்பதையும். இந்த ஓசை இந்த ரகம் என்பதையும் முன்னமே முடிவு செய்து அதை ஒரு பாவகையாக செய்துள்ளனர். சொல்லபோனால் நமது ஆடியோ ப்ளேயர் ஈக்குவலைசர் போல. சில முன்னமே உருவாக்கபட்டு நிரந்தரமாக்கபட்ட . ப்ரிசெட்கள் இந்த பாவகைகள்..

சில பாவகைகள் உங்களுக்காக. வெண்பா . கலிப்பா. ஆசிரியப்பா . விருத்தப்பா என்பன சில தொகுப்புகள் . அதனுள் உட்பிரிவாக நான்கும் வரும்..

வெண்பாவில்.. கலிவெண்பா . ஆசிரியவெண்பா . வெண்பா விருத்தம் என்பது போல்.

உதாரணமாக ...

திருக்குறள் ஈரடி வெண்பா

நாலடியார் நாற்சீர் நாலடி கலிவெண்பா

திருவாசகம் ஆசியப்பா மற்றும் விருத்தம் போன்றன அனைத்து பாவகையும் இருக்கும்.
நமக்கு இதுவரை போதும்..

4) எழுத்து...
        இது எளிமையான வழி எந்த எழுத்து என்பதை அறிந்து கொள்ளுங்கள் அதன் ஓசை அளவு தெரிந்து கொள்ளுங்கள். அதன் படி எழுத இலகுவாகும்..

தனனானா - குறில் குறில் நெடில் நெடில்.. இதுதானா .. இனி தானா . அதுநானா என எழுத முடிகிறதல்லவா..

உதாரணமாக ...

   பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

இந்த பாட்ட நாம மாத்தி எழுதலாம்.. காதலிக்கானு வச்சிக்கோங்ளேன்..

முத்துப் பல்லிரண்டு - முகம்தனில்
முத்திரை வேணும் - சின்ன
முத்தச் சப்தங்கள் - அறைதனில்
முழங் கும்படிவேணும்  இன்று
கதிர் முளைக்காது - சற்றே நீண்ட
காலம் தரவேணும் - எந்தன்
நெஞ்சம் நெகிழ்ந்திடவே - இந்தநிலை
இன்றில் வரவேணும்..

இப்போ படிங்க அதே மாதிரி இருக்கா? அவ்ளோதான்...

5) ஈற்றெழுத்து..

      அதாவது கடைசி எழுத்து. ஒரு ஒரு பாராவின் கடைசி எழுத்தும் பாக்கனும் அது மாறிட்டா பாவகை  மாறிடும்..

பெரும்பாலும் கடைசி எழுத்து. மெய் எழுத்தாகவோ. அல்லது ஏ எனும் ஒலிகொண்ட உயிர்மெய் எழுத்தாகவே.. அல்லது ஒஓ ஒலிகொண்ட உயிர்மெய் எழுத்தாக தான் இருக்கும்..

அவ்வளவு தான் கவிதை எழுதுவது.  மொழி ஆளுமை .. வார்த்தை பயனபடுத்தும் விதம். உள்ளிருக்கும் உவமை உருவகம். அர்த்தம் ஆகியன கவிதையின் தரத்தை மேம்படுத்தும்..

மொத்தமாக ஒரு சிறுகுறிப்பு..

உங்களுக்கு பிடிச்ச பாடலோ செய்யுளோ எடுத்து அதில் வார்த்தை சப்தத்திறுகு ஏற்ற மாதிரி மாற்றி எழுதி பாருங்க.. நீங்களும் கவிஞர்தான்..

உதாரணமா...

பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பி அடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா

இதமாத்தி...

பேயும் மழை நீ எனக்கு பொய்கை அடி நான் உனக்கு
காயும் நிலா நீ எனக்கு  காணுங் கடல் நான் உனக்கு
நாவிசைக்க நாதமில்லை வாழி
உன்தன் கவிதை எல்லாம்
தூவி அருள் பொழி மழையே கூறை கடலே கண்ணம்மா..

நன்றி வணக்கம்......

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم