மறுமுறை பார்க்காதே - இவ்வின்பம்
மனம் தாங்காதே...
துளி கூட சிரிக்காதே - இதனால் என்
தூக்கங்கள் கிடைக்காதே...
ஒற்றை பார்வையில்
ஒற்றை புன்னகையில்... அதகளமாய்
ஒன்றை சொல்கிறாய்...
பிரபஞ்ச வனத்தில்...
உயர்ந்த மரத்தில் ...
ஒற்றை பூவென ... இந்த நேரம்..
காலமெனும் காற்றுவந்து ...
காத்திருந்த பூவை திறந்தது.. அப்பூவில்
ஒருதண்டில் ஒற்றியிருக்கும் மகரந்தங்கள் ... நீயும் நானும்.
காதலெனும் வண்டிற்காக காத்திருக்கிறோம் .. என்கிறாய்..
எங்கேனும் சென்றுவிடு - இப்படியே
என்னை வாழவிடு.. இல்லை
எப்படியாவது என்னோடு
என்னவளாய் வாழ்ந்துவிடு...
பிரிந்து வாடி வாழ்வது இன்பம்..
இணைந்து கூடி வாழ்வதும் இன்பம்..
பிரியாமலும் இணையாமலும் உழல்வது கூட இன்பம்..
எதிர்நின்று இம்சிப்பதில் உனக்கென்னடி? ... இதிலின்பம்..
إرسال تعليق