என் மரபு..


ஆழ மகண்ட பாற்கடலில் ஆதியரு தியறிய தேடி
வேள முகந்த கணபதியின் மோதக மாயலைய ஓடி
காணற் கறிய பெருவெளியின் ஞானமுய்ய  நாளயற நாடி
தூல துன்னுடல் தானுற்றொளி உயிரென்ப பிரிவற கூடி
ஊன றியதென காண் கிறேன்....
#என்_மரபு 1

நாடெங்கும் நாயென் றலைந்து
நாவினிக்கும் நாதமி னிக்கும்  - குறைவிலா
நற்றமிழ் நாடியிங் குவந்து
நல்லதோர் கவிதை கேட்டும் - அளவில்லா
நாட்டமெனு மோகங் கொண்டலைந்து
நானிறயு மறிவுகொண்டு மொழிந்தேனே....

#என்_மரபு...2

சிறகிலிரு ந்தவண்ண மதுவான் பறந்திட
சிறுமுகிலு ந்தன்னை ஏதுவாய் பரவிட
சிற்றாறு தந்தநீர் அதுவாய் உறைந்திட
சிறுகாற்று வந்தவண்ண மாயான் உரசிட
சிலிர்த்து அந்தன்ன மாயவள் சிலாகித்தாள்... என் காதலை..

#என்_மரபு 3

காற்றாணைக் கடங்கி கரையும் மேகமென
கரைந்தெனை உருக்கி உறையும் மழையென
உறைந்தெனை உறித்து விதைத்து விதையென
விதைத்தெனை விளைத்து விழையும் விதியென
விதித்தெனை விளையாண்ட விழியறியா இறையே....

#என்_மரபு 4

ஔிரும் ஔி ஒக்கத்தன் விழியாள்
மிளிரும் மின் னல்லென் றுடலாள்
களிரும் துளி இன்பத்தே னுடையாள்
காளினும் துளி பெருங்கோபத்தாள்.... என் காதலி...

#என்_மரபு 5

ஆயுள்கைதியாய் அவதிகுள்ளாகி  சுகிக்கிறேன் அவன் கிள்ளை...
ஆயுங் கை தீயாய் தொடுமிடம்சுட அவன் செயுந்தொல்லை...
ஆசைத் தொட்டிலுக்கு நான் கட்டில் பிள்ளை...

நாதவடி வமாய் நீயிங்கு பிறந்திருக்க
நான்புணர் வதற்காசை விழைந்திருக்க
நாபிகமழ் அமாய் நீளுமாசை வளர்த்திருக்க
நாதஸ் வரமாய் நினைப்புணர் ந்திருக்க... ஆசை

என் மரபு _6
ஐம்பொறி யனைந்தும் ஊறிய குருதியாய்
ஐம்பொருளுடை அண்டமெனுங் தேரிய தேகமாய்
நைம்படு சொல்லிசை மெல்லிய குரலாய்
அன்பெனுந் தனலிற் ஆணவன் இறையாய்
நன்பெணுக் கழகாய் பெருங்காதல் தருவாய்..

#வரமாய்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post