.இதோ இந்த பிருந்தாவனம் எங்கும் நிறைந்த மலர்களில் அதன் வாசங்கொண்டு தரும் இனிய காற்றுடன் எங்கள் உலா துவங்குகிறது... கண்ணா.. சொல் கீதை தன்னை சொல்..
சொல்கிறேன் நண்பா... கீதையின் முதற்தேவை என்பதே ஞானம் மட்டும் தான்.. அவரவர் ஞானம் பொருத்து என் கீதையின் விளக்கம் பலவிதமாக புரிந்துகொள்ள படுகிறது. இது இயற்கை நியதி அதற்கு நீயும் நானும் விதிவிலக்கல்ல.. என்றாலும் என்னை நம்பி என் விளக்கங்களை புரிய முயல்வாய்..
ஆகட்டும் கண்ணா அன்றளித்த சரணாகதி நிலையில் தான் இன்றும் நிற்கிறேன்.. என் தேவையெலாம் ஞானம் மட்டுமே.. அதிலும் உண்மையான ஞானம்.. சாசுவதமான ஞானம் மட்டும் தான் கண்ணா...
கேள் நண்பா... கீதை என்பது அண்டத்தின் இயல்பையும் கடவுளின் செயலையும் சொல்கிறது... உலகில் மிக உயர்ந்த பொருள் என்ன சொல்?... உலகில்உயர்ந்தது என்றால் நிலம் தான் கண்ணா அது பொருட்டே யாவும் அமைந்துள்ளது... இல்லை நண்பா உலகில் உயர்ந்த பொருள் உயிர்... உயிர் என்பது பல்வேறு இடங்களில் பல்வேறுவிதமாய் நிறைந்துள்ளது.. புல்லிலும். கிருமியிலும் உன்னிலும் உறைகிறது...
அந்த உயிர் பற்றிய ரகசியம் அறிவாய்... உயிர் சில படிம நிலை கொண்டது.. ஒவ்வொரு படிம நிலையிலும் அதன் ஞானம் பொருட்டு நிலை உயர்வோ தாழ்வோ பெற்று மீண்டும் பிறக்கும் அதனடிப்படையில் தான் இந்த படைப்பே நிகழ்கிறது...
மனிதாய் பிறக்க ஒரு உயிர் பல அரும்பாடுபடுகிறது தெரியுமா? அப்படி பிறந்த உயிர் தம்மை ஞானம் அடைய செய்யும் வழிதனை தேட வேண்டும் .. அதுவே உயிரின் கடன்...
அவ்வாறாகின் ஏன் மனிதனில் வேற்றுமை கண்ணா? அனைவரும் சமமென படைத்திட தோன்றவில்லையா?
அலைகள் அலைவதால் தான் கடல் பொங்காது இருக்கிறது நண்பா.. அதுபோல் உயிர்கள் சமநிலையில் இருந்தால் நிகழ்வுகள் பிழையாகாது.. பிழையின்றி எப்படி ஒன்றை சரியென்பாய்?..
மேலும் உயிர் தன்னை பற்றிய ரகசியம் அறிவாய்.. உடல் உருவாகும் முன் படைத்தலின் போது உயிர் உருவாகிறது.. முதலில் அதன் ஞானம் இல்லாத காரணத்தால் முதற்படிம நிலையில் படைக்க படுகிறது..பின் உடலானது உருவாகிறது.. இரண்டும் உருவாகிய நிலையில் உயிருடன் ஊடுபாெருளாய் நான் இணைகிறேன்..
நீயே இணைகிறாய் என்றால் கண்ணா .. தவறுகள் ஏன் நிகழவேண்டும் . அவற்றை நீயேன் தடுக்க முற்படுவதில்லை ...
ஒரு செயலை செய்யும் சக்தியாக நானுள்ளேன்.. ஆனால் செய்யும் செயலை தேர்ந்தெடுப்பது உயிரின் சுதந்திரம் அதில் என் அதிகாரமில்லை . அதனுள்ளும் நீ நன்மை செய்ய காரணமாய் நானிருக்கிறேன்.. தீமை செய்கையில் மனசாட்சியாய் நான் உணர்த்த முயல்கிறேன்.. . அதற்குமேல் நான் மாற்ற கூடாது..
அப்படியெனறால் கண்ணா... ஏன் பாவங்கள் நிகழ்கிறது?... உயிர் உருவானது எப்படி? ... உடல் எதற்கு சொல்வாய் கண்ணா...
கேள் நண்பா .... பரம்பொருளாகிய நான் விஸ்வரூபமாய் உருமாறிய வேளையில் என்னிலிருந்து பலபல ஜட பொருள்களும் உயிர்களும் பிரிந்து வெளிபட்டன.. அதன் ஆற்றல்களின் அடிப்படை எல்லாம் நானாகிறேன்... அதைவிட எப்பொருளும் தான் பிறந்த அல்லது பிரிந்த இடத்தை மீண்டும் அடைய ஒரு உயர்வு அல்லது தாழ்வு தேவைபடுகிறது .... அத்தாழ்வும் உயர்வுமே இவ்வாழ்வு...
அவ்வாறே ஆனாலும் அவற்றுள் பாகுபாடு ஏன் கண்ணா... ஆண்டியிடம் செல்வங்கள் இல்லை அரசனிடம் நிம்மதியில்லை.. ஏன் இப்படி..?
உண்மைதான் ஒவ்வொரு உயிரும் தம் நிலைக்கு ஏற்ற ஒரு சரீரத்தை அடைகின்றன.. இந்த பாகுபாட்டை புரிந்துகொள்ளும் முன் நண்பனே உடலில் சூட்சுமம் அறிவாய்... மனிதனாக படைக்கபட்ட ஒருவனே உலகின் ஆற்றல்களையும் அவற்றை பயன்படுத்துவதையும் உணரமுடியும்.. பிற உயிர்களுக்கு அவை உணரமுடியாது .... மனிதர்களாகிய நீங்கள் அனைவரும் உலகின் சம்பத்துகளை பாதுகாக்க பிறந்தவர்கள்.. அத்தகு மனித உடலானது மிகவும் நேர்த்தியான ஆக்கத்தால் உருவாக்கியது.. ஆனால் உடலானது 4 குணங்களை கொண்டு உருவாக்கபட்டது.. சித்தம் எனும் இறைகுணத்தாலும் அன்பினாலும் நிறைந்த குணம்.. பித்தம் எனும் தீய குணங்களாலும் அறியாமையில் உலவும் கடைநிலை குணம்.. பேதமம் எனும் சித்தமும் முழுதாகாத பித்தமும் முக்கால் பாகம் கலந்த குணம்.. தைவம் எனும் கருணையுள்ள ஆசைகொண்ட குணம்..
இந்நான்கையும் உடலில் ஒவ்வொரு அணுவிலும் செயல்படும்படி உருவானது.... உயிரானது அதில் எவ்வகை குணத்தை ஏற்கிறதோ அதுவே அதன் குணாதிசயமாய் கொள்கிறது ... அத்தகு குணம் அவரை ஆள்கிறது.. அதன்படி செயல்புரிகிறது ...
அப்படியானால் அவற்றை மாற்றமுடியாதா ? கண்ணா...
உயிர் இத்தகு நிலையை உணர்ந்து அதன் பின் உடலைகட்டுபடுத்த முடியும் நண்பா ...
(தொடரும்....)
إرسال تعليق