எழுதபடாத கவிதைகள் - இன்பம்..

எட்டுதிக்கும் நான்கொள் இன்பம் நிறையட்டும்
திங்கள்மட்டம் எந்தன் உள்ளம் விரியட்டும்..
எங்கள் மூச்சில் இனிமை பரவட்டும்..

தேசமெங்கும் உயர்ந்த நன்மை விளையட்டும்
நேசமெனும் உணர்வு நம்மில் முளைக்கட்டும்
தேகமெங்கும் புத்துணர்வு புதிதாய் பிறக்கட்டும்...

நான் பேசும் மொழியெல்லாம் இனிதாகட்டும்
நான் காணும் முகமெல்லாம் புன்னகைக்கட்டும்
எங்கள் நிழலில் கூட வண்ணம் மிளிரட்டும்....

நேரமெல்லாம் நன்நேரமாக செய்வதெலாம் நல்லதாகட்டும்
காலமெல்லாம் களைகட்ட காடுகளில் கானமிசைகட்டும்
என் கண்பார்க்கும் யாவிலும் இன்பம் சுரக்கட்டும்..

சிந்தும்விழி நீரிலெல்லாம் ஆனந்தம் மலரட்டும்
சிலிர்க்கும்படி ஆன தருணங்கள் நித்தம் உதிக்கட்டும்
சிரிக்கும் சின்ன குழந்தையாய் இதயம் சிரிக்கட்டும்...

சிந்தனை பொழுதெல்லாம் சிலாகித்திருகட்டும்
சிற்சில வேளைகளில் துன்பம் சிரிக்கட்டும்
சில்லென்ற தூறலாய் இன்பம் பொழியட்டும்..
தூறலின் சாரலில் உள்ளம் குளிரட்டும்...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم