தமிழே...

பேசுமொழியே பொய்கை குளமே
பாயுநதியே பொழியும் மழையே
பொங்குகடலே மேயும் அலையே
மேகக்குடமே புல்வெளி தடமே
முத்திரைஎழுத்தே முத்தமிழ் கவியே

நித்திரை கனவே நில்லா நிலவே
நெய்தல் பகலே குறிஞ்சி நிலமே..
உவமைசிறகே உலகின் இறகே..
தலமைசிறையே தனியொருசிறப்பே..
உவகையுரவே உருவகத்தமிழே..

தகவல் களமே தாய்மை ரகமே
அகவல் வடிவே அறிவுரை அகமே
நகவல் பொருளே நல்லதொர் சுகமே
ககவெல் அறிவே கள்ளமில்லா அன்பே
சுகவல் மொழியே சுந்தரத்தமிழே...

முன்னுரை தொகுப்பே முகவுரை வரைவே
தன்னொளி இருளே பேரொளி வெயிலே
மின்னொளி முகமே மினுத்திடும் தேகமே
கல்லுரை தேரையே தேர்ந்தநற்றமிழே..

விண்ணிற் உயர்வே மண்ணிற் சிறப்பே
விண்மீன் அழகே வெண்ணிலவு நிகரே
விண்கற் ஆற்றலே புவியளவு பெரிதே.
விண்ணண்ட கடினமே அணுநிகர் எளிதே
வீசுமண மொழியே வீங்கிலதமிழே....

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post