நெல்விளைந்த ் பூமியெலாம்
புதர்மண்டி போனதொரு நாள்.
புதர்கூட போனதடா
புத்தி இன்னும் மாறலடா...
ஆற்றுமணல் தான் திருடவிட்டுட்டோம்
ஊற்றுநதி நீர்கூட ஊரானுக்கே வித்துட்டோம்...
சேற்றுமணல் திருடியிங்கே வீடுதனை கட்டிட்டோம்
சோற்றுமணம் தேடியிங்கே சொந்தஊரை விட்டுட்டோம்..
அலுவல் பணியோடி அதிகாலை பனி மறந்தோம்..
அழுகும் மற்றானுக்கு ஆறுதல் சொல்ல மறந்தோம்..
அப்பன் பாட்டன் அவன்பாட்டுக்கு போயிட்டா...
இப்ப ் நீயும் நானும் நம்பாட்டுக்கு போயிட்டா
அப்புறம் புள்ள பேரன் பொழைக்க எங்க போகும்..
பூமியில தான்டா பொறந்தோம் விட்டுட்டா
புகுந்திட வேற கிரகம் ஏது?
செவ்வாய நம்பி
தம்வாய இழப்பதா?
நிலாவ நம்பி
நிலத்த விடுவதா?
யோசிச்சு பாரு
எதிர்கால ஊரு
எப்படி வேணும்?....
Post a Comment