உலகில் உயர்ந்த இரண்டு எது தெரியுமா? நல்ல புத்தகமும் நல்ல குருவும்... 2008 வரை எனக்கு பள்ளி புத்தகங்களைவிட வேறு புத்தகங்கள் தெரியாது.. 2009 நான் +1 சேர்ந்த நேரம்... அரசாங்க பள்ளியின் ஆகசிறந்த நல்ல செயல் +1 ஐ இலகுவாய் விட்டுவிடுவது...
அப்படிபட்ட காலத்தில் தான் எனக்கு புத்தகங்களின் அறிமுகம் துவக்கம்... கிடைப்பதை படிக்க தொடங்கினேன்.. ஆரம்பம் முதல் ஆங்கிலவழி கல்வி என்பதால்.. ஆங்கிலம் தமிழ் படிப்பது சுலபம்.. ஆரம்பத்தில் சில எளிய இதழ்ரக புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் பொறுக்கி வந்து படிக்க துவங்கினேன்... நூலகம் பற்றிய அறிமுகமே கிடையாது...
2009 ல் எனது பள்ளியில் நூலகவாரம் என்றபடி நூலக உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது விரும்புவோர் சேரலாம்.. பிரபு என்ற நண்பனின் உந்துதலால் சேர சென்று 20 ரூபாய் கட்டணத்தில் சேர்ந்துவிட்டேன்..
விளையாட்டாய் சேர்ந்த எங்களிடம் ஒரு போட்டி அறிவிக்கபட்டது.. ஒன்றுமல்ல நூலகம் பற்றி பத்து வரிகள் எழுதவேண்டும் சிறந்த வரிகளுக்கு பரிசு என வழக்கமான சுற்றுலா ரக அறிவிப்பு... அதற்காக தான் முதன்முதலில் நூலகம் செல்கிறேன்... பழைய பேப்பர் கடையில் குப்பை குப்பையாக பழகிய எனக்கு ரகரகமாய் அடுக்கி வைத்த புத்தகங்கள் புதியது... எங்களூர் நூலகம் ஒன்று கன்னிமாரா போல பெரிய அளவில் இல்லை சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் கடைந்தெடுத்தாலும் கிடைக்காது...
கிடைச்ச பசு புல்மேயதல் போல மேய்ந்து வந்துட்டேன்... போட்டிக்கான தேதிகள் நெருங்கிட உள்ளுக்கு ஒரு அற்ப ஆசை எழுதி குடுத்து பாக்கலாமே என... குடுத்துட்டேன்... சிறந்த வரிகளாய் தேர்ந்தெடுக்கபட்டு... ஒரு திருக்குறள் புத்தகம் பரிசாய் தந்தனர்... அப்படி ஆரம்பித்த என்னை புத்தகத்திடம் சேர்த்தது யார் தெரியுமா?...
வாலிசார் தான்... ஆரம்பகாலத்தில் புத்தகங்கள் பழகாத காலத்தில் சினிமா பாடல்கள் தான் எனக்கு லயிக்க கிடைப்பது.. வாலிசார் சொல்லவே தேவையில்ல விளையாடுவார்.. அப்படி அவரால் ஈர்க்கபட்டு... ஒருமுறை பெரியார் மன்றத்தில் அவர் பேசிய வீடியோ டீவியில் போட .. ஒரு புதுக்கவிதைனு ஆரம்பிச்சி ... படி படி படினு முடியிறபடி ஒரு கவிதை சொன்னார்... அப்ப நான் இருந்த மனநிலையில் வாலிசார் என்ன அறிவுரை சொன்னாலும் ஏற்கனும்கிற ரசிகத்தனம் கொண்டிருந்தேன்...
படி னு சொல்லிட்டார் வெறி்தனமா படிக்கனும்னு பழைய பேப்பர் காரன் என்ன பாத்தாலே தம்பி எடுத்துவை வந்துறேன்னு நம்பும்படி படிச்சி படிச்சி... அட இதெல்லாம் ஏன்டா ஸ்கூல் புக்ல வரலனு குறைசொல்லும் அளவுக்கு வந்துட்டேன் ..
ஏற்கனவே சொன்னமாதிரி எங்கஊர் நூலகம் சிம்பிளானது.. மெல்ல மெல்ல படிக்கும் ஆர்வம் வளர்ந்து வாசகனாகும் நிலை வரும் போது... நான் இன்டர்நெட் வந்துட்டேன்... அப்ப பேஸ்புக் எல்லாம் தெரியாது கூகுள் மட்டும் தான்... என்ன செய்வது படிப்பதுனு முடிவுசெய்து... எதைஎதையோ தேடி சிலஅந்தமாதிரி புக் எல்லாம் தாண்டி....
இந்த பேராண்மை படத்துல சும்மா பசுமைபடைனு காட்டுக்கு போனவங்க சர்வதேச கூலிப்படைய ஜெயிப்பது போல.. சும்மா படிக்கலாம்னு போனவன் இலவசமா பிடிஎப் கிடைக்குதேனு இஷ்டத்துக்கு டவுன்லோடி... அதுல எனக்கே தெரியாம வந்தது தான் சுஜாதா... முதல்முதல்ல கிடைச்ச சுஜாதா பிடிஎப் .. ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து... மூணு பக்கத்துக்கு மேல முடியல மனுசன் படிப்பானா .. ஸ்கூல் புக்கே தேவலாம் போல..என்று சலித்துகொண்டதெல்லாம் 6வது பக்கம் வரையில் தான்... மனுசன் இப்படியெல்லாம் சொல்லமுடியுமானு வியந்து.. உட்கார்ந்தஇடம் அசையாமல் படித்து முடித்தபின்...
எடு அடுத்த சுஜாதானு எடுத்தது... கடவுள் இருக்கிறாரா?... விடாம படிச்சிமுடிச்ச பின்னாடி அடுத்ததுனு ஆறு மணிநேரமா நகராம படிச்சிட்டு இருந்தாலும்... எடுத்தது தப்பினால் தப்பில்லை... படிச்சதும் பிடிச்சது சுஜாதாவை ... மீண்டும் ஒருநாள் பழைய பேப்பர் கடையில தேடும் போது சுஜாதாங்கிற பேய மட்டும் பாத்து தலைப்ப கூட பாக்காம எடுத்துட்டு வந்தது "ஆ"... பின்னாளில் கொலையுதிர்காலம் என்றபடி நீண்டது எனக்கு சுஜாதாவுககும் ஆன சினேகம்...
மற்றுமொரு நாள் " ஒரு துளி ங்கிற" பாட்ட எழுதுனது வைரமுத்துனு தெரிஞ்சபி்ன் ஓடிபோய் நூலகத்துல மறைச்சி வச்சிருந்த தண்ணீர் தேசத்த தூக்கிட்டு வந்து... அதுல வந்த
மனிதன் நினைத்தால் வழிபிறக்கும்
மனதிலிருந்தே ஔிபிறக்கும்
புதைக்கின்ற விதையும் முயற்சி கொண்டால் தான்
பூமியும் கூட தாழ் திறக்கும்... ங்கிற வரிகள கடல் படத்துல வரும் சித்திரை நிலா பாட்டுல கேட்கும் போது வந்த சந்தோசம்இருக்கே அது அனுபவிக்கனும்ங்க...
அதே போல 2010ல பக்கபக்கமா படிச்ச "ஆ" சைத்தான்ல பார்க்கும் போது வந்த உணர்வு னு நிறைய இருக்கு..
இன்னிக்கி கண் முன்னாடி ஒரு கேட்டலாக் புக் இருந்தா கூட படிச்சிடுவேன்.. காரணம் ... புத்தகங்கள்.. என் புதுயுகங்கள்...
إرسال تعليق