நானும் ஒரு ரீமேக் செய்றேன்....
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
லவ் க்கு மாத்தலாம்...
மின்னுதோர் மேனி கொண்டும் - அதை
மண்தின்க அழிந்திட விடுவதுண்டோ..
சொல்லடி என்காதலி ..
எனை சுழலெனும் காதலில் சிக்க வைத்தாய்.
நல்விடை கூறாயோ.. இந்த நாயகன் நன்முறை வாழ்ந்திடவே?
சொல்லடி என் காதலி ...
எனை விதியென்று நோந்திட செய்வாயோ...
...வான்தெரி செங்கதிர்போல. - நெஞசம் வேண்டிடும் பதில்சொல்ல கேட்டேன்..
நாணறு அம்பினைபோல - நித்தம் உளனுருகு சுகம்தரும் முத்தம் கேட்டேன்..
உயிர்பிரி தருணமதிலும் - உன் முகத்தை காணுநல் வரங்கேட்டேன்..
இதமுறு காதல் கேட்டேன்.. இவை தருவதில் உனக்கென்னடி கெடு வந்ததோ...
إرسال تعليق