பெரும் போர்களை தாங்கிய
கப்பல் ஒன்று..
புயலில் சிக்கி நிலைகுழைதல் போல் இன்று ..
பெருமழை போன்றதுன் கடைகண் பார்வையில்
புலமழிந்து திக்கி திணறுகிறேன் நானடி...
உன் இதயசுவர்களில்
ஓர் பல்லியாய் .. பள்ளிகொள்ள ஏங்குகிறேன்..
என் தேவைகள்
வெறும் காமமல்ல... காதலில் மூழ்கிட வேண்டுகிறேன்...
என் உடற்கூறின் அணுகூறில்
கருவறை செய்துனை கடவுளென வணங்குகிறேன்...
அவ்வணுகருவின் ப்ரோட்டான் நானடி
புதியதாய் சேர்ந்த நியூ.ட்ரான் நீயடி...
புதுவுயிர் தரும் அமிர்த சோமரசம் நீ
புலனழிந்த பெருங்காதல் நோயாளன் நான்..
பதமிசை மொழியும் ..
கொழுசொலியின் மொழி தெரியாதெனக்கு...
கொழுத்த தமிழிருக்க கொழுசொலி மொழி எதற்கு?..
உன் நாவசையும் குரல்வளையும்
காற்றும் தமிழாகும் அதிசயம் காண விழைகிறேன்...
மென்நாதமிசைக்கும் மேதகு கழுத்தை
நாதஸ்வரம் என்பேனே..நாதஸ் வரம் என்பேனே..
நின்சுவாச குழாய் அனைத்தும்
புல்லாங் குழலாய் சொல்வேனே...
நல்வாச மலரே உன்னை
நாள்தோறும் நாராய் சுமப்பேனே...
புல்நுனியின் நற்பனி துளியே..
என்காலை விடியல் விடிவதெல்லாம் உந்தன் குளிரிலே..
கள்ளூறும் உயர் பனையே..
என்கர்வம் உடை துணையே...
إرسال تعليق