எழுதபடாத கவிதைகள் - இயற்கையே

மாயம் புரிகுவையோ சில
மயக்கம் தருகுவையோ..
கானம் பாடுதையோ சில
காலம் ஓய்வுதையோ...

தேகத்தின் அணுவெல்லாம் மயங்கிட விழையுதே

தேய்பிறை நிலவென மனதுகள் உருகுதே..

வானத்தின் மேகமெல்லாம் மண்ணில் படருமோ?...
வருடம் காற்றென இன்பம் உயருமோ?..

கேட்கும் ஒலியெல்லாம் இசையாய் மாறுமோ?.
காணும் விழியெல்லாம் ஆனந்தம் சிந்துமோ?...

உரைப்பாய் இயற்கையே.. உள்ளத்துயர் கையே..

மாயம் செய்வாயோ சில
மர்மம் அவிழ்பாயோ..
கானம் இசைப்பாயோ சில
காலம் இனிப்பாயோ....

அண்டத்தின் உயிரெல்லாம் இன்பத்தை கேட்குதே.
அகிலத்தின் பொருள்வழி இன்பமதை சுரப்பாயோ ? ..

அறிவின் விசைகெடுத்து நினைநீயே கெடுத்தாயே ...
அன்பின் பசைகொடுத்து நினைசரி
செய்வாயோ...

தொடங்கும் எதுவும் நல்முறை நிகழ விடுவாயோ...
தொடங்கும் முன்னே முட்டுகட்டையிட்டு முற்றுபுள்ளியாவாயோ....

உரைப்பாய் இயற்கையே.... உலகின் இயற் கையே...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم