அணுபிளந்து அக்கினி கொழுத்த
அண்டவெளியில் அன்பினால் பிறந்த
அகிலங்கள் தன்னில் ஒன்றாம் பூமி..
வெடித்தெறிந்தாலும் விடாத
வெறுக்காத பாச பிணைப்பில்
வெந்தழல் சூரியனும் பூமியும்
வெறுமையாய் இல்லையே
வெவ்வேறு கிரகமும் சகோதர குடும்பமே
செந்தழல் பூமி கனிந்து ஆர
செம்மை தனிந்து காற்று வர
செங்காற்றும் கனிந்து நீராக
செழுமை கொண்டதே...
கடல் கொண்ட பசியும்
மலைதனது வன்மையும்
மேகத்து வெண்மையும்
இயற்கையின் அமைப்பே..
அணுவெடித்து அண்டம் பிறக்க
அதிலொரு கிரகம் பிறக்க
அவ்வானத்தில் பறவை பறக்க
அவ்வபோது வெடிக்கும் தீபாவளி...
Post a Comment