எரிதழல் சுமை திரியாய்...
புதைதளிர் விளை கதிராய்...
நரம்புகள் புடைத்தெழுவாய்
வரம்புகள் அறுத்தெரிவாய்...
கனவுகள் எதற்கென அறிவாய்..
உறக்கங்கள் தொலைத் தலைவாய்..
கனன்றெரியும் கதிரென லட்சியம்
புதைகுழி கடலென சமூகம்..
மாத்தியோசி மத்ததை நேசி
காத்திருந்தால் காலம் போகும்
கடந்துவந்தால் ஞாலம் பாடும்
கடைவீதி என சுறுசுறுப்பாய்
நடைபாதை விளக்கொளியாய்..
எடைபோடும் மனிதத்தில்
இயல்போடு மனதிறப்பாய்
வான் மேகம் வீழ்ந்தாலும்
ஆழ் வெள்ளம் சூழ்ந்தாலும்...
அடுத்த நொடி நோக்கி நகரு...
Post a Comment