Noel instrumental livestrom Assembly... (Nila) symphony..சுமார் 150 வருடங்களாக உலக இசைஞர்களால் கொண்டாட பட்ட சிம்பனி... 2500 கலைஞர்கள் பணிபுரியும் சிம்பனி.. தினம் தினம் திருவிழா போல ஜெகஜோதியாய் இருக்கும்.. ஆனால் இன்று ...
அனைவரும் குழுமியிருந்தனர் ... அனைவருக்கும் ஒன்றாய் சந்தோசமும் பரவசமும் இருந்தும் ஒரு பெரும் துக்கமும் உள்ளூடே இருந்தது...
பரவசமெல்லாம் ஒரு மிகபெரும் இசையமைப்பாளர் இன்று இங்கு ரெக்கார்டிங் செய்வதால்... அவருடன் பணிபுரிய பல ஆண்டுகளாய் இந்த குழு காத்துகிடந்தது... இன்று அது சாத்தியமாகிறது...
கவலை என்னவென்றால் இதுவே இந்த சிம்பனியின் கடைசி பாடல்பதிவு... பாரம்பரியமாய் தலைமுறை தலைமுறையாய் இருந்த இந்த சிம்பனி நம் கண் முன் அழியபோகிறதே என்கிற துக்கம் பீரிட... 96 கண்ணாடி அறைகளாக பிரிக்கபட்ட .. அந்த சொலினாய்டட் ரிக்கார்டிங் ஹாலில்.. அவரவர் இருக்கைகளை ஸ்பரித்து கண்ணீர் மல்க.. கரையும் தருணத்தை கடந்து கொண்டிருந்தனர்...
ராஜேஷ் சொன்னது ஞாபகம் இருக்குல்ல... சீக்கிரம் முடிச்சிட்டு வா.. ரிக்கார்டிங் முடியறதுக்குள்ள வந்துரு...
10.50க்கு ரிக்கார்டிங் துவங்கியது... சிம்பனிக்கான அமைப்புகளை செய்த பின்... ஒரு ரிகர்சல் பாத்துரலாம் என்றார் கண்டக்டர்...
லிரிக் யாரு எழுதுறது?... என்றார் ரிச்சர்ட் (கண்டக்டர்) .. நானே தான்...ஓகே சார்... லெட்ஸ் மூவ் எ ரிகர்ஸ்.. தாரளமா பாத்துருங்க...
என் இசை என்பதைவிட இக்கணம் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்... 10 வருடங்களுக்கு முன் இங்கு ஒரு கலைஞனாக சேர வந்த என்னை வாசலில் எட்டி உதைத்து சாலையில் தள்ளினர்.. இன்று அவர்கள் எனக்காக காத்திருந்தனர்...
எனக்கும் எத்தனை வருட கனவு இது... அன்று உதைத்து தள்ளியபோது... என் மனம் சொன்னது ஒருநாள் இங்கு நானே இசையமைப்பாளராக வருவேன் என்று ...
ராஜேஷ் வந்துவிட்டார்... விசயம் முடிஞ்சது என்ன ரேட் தான் ஜாஸ்தி இருந்தாலும் பரவாயில்லைனு வாங்கிட்டேன்... ரொம்ப தாங்க்ஸ் ராஜேஷ் ... சரி விசியத்த ரெக்கார்டிங் முடிஞ்சதும் சொல்லிரு...
ரிச்சர்ட் :சர்.. எல்லாம் ஓகே... ரெக்கார்டிங் போகலாமா?...
தாராளமா .. ராஜேஷ் நீ ரிச்சர்ட் கூட ரெக்கார்டிங் பாத்துக்கோ.. நான் பாடணும்... ஓகே சர்...
வெல்கம் ஆல் டூ நிலா .. லெட் த லைவ் ரெக்கார்ட் ஸ்டார்ட்ஸ்... 54321....
வயலின் அறையில் துவங்கியது சி மைனர் ரிட்சுவல் ஸ்லாம்... மெல்ல மெல்ல மற்ற கருவிகளும் சேர... என் டைம் தொடங்கியது...
ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள்வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்..
வானே என் மேலே சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன்..
நீ என்னை கொஞ்சம் சொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்....
நடுவில் இசைகோர்வை பின் மீண்டும்.. சிம்பனிக் க்கோரஸ்ஸில் அதே வரிகள்...
பாடல் முடிந்ததும் ... சொன்னேன்.. நிலா வாங்கிவிட்டேன் நாளையும் என்றும் நிலா திருவிழாவாகவே கொண்டாடபடும்...
எந்த முடிவும் முடிவல்ல.. இன்னொரு வாய்ப்பில் தொடங்கலாம்...
#நன்றி
(குரு படத்தில் இடம் பெரும் ஒரே கனா பாடலை கொண்டு எழுதியது...)
Post a Comment