நதியதில் விழும் இலையென
விதியதில் செலும் நிலையென
நகர்கிறது சக்கரமில்லா வாழ்க்கை ரதம்..
அதில் சக்கரை ரதி நீவந்தாய்
எனில் அக்கறை செடி வைத்தாய்
உனில் உப்பிலா கடல் காட்டினாய்
தனில் ஒப்பிலா காதல் பூட்டினாய்
இனி காதலெனும் ஆயிரம்
புரவி பூட்டிய ரதம்
ஏறி வரும் நான் #சூரியன். ..
______________!!!!!_______
கண்ணனின் பிறப்பிடம் தேடியலைகிறாய்... மனிதா .. நீ கீதையின் சாரமாவது எப்போது?..
நெற்றிக்கண் சிவனை கொண்டு அச்சமூட்டுகிறாய்.. மனிதா .. நீ ஞானக்கண் திறப்பது எப்போது..?
நதி நிலம் மொழியெல்லாம் தாய்தானே ... மனிதா .. நீ ஏன் தாயை அழிக்க துடிக்கிறாய்?...
மதயானையாய் பேராசை கொண்டிருக்கிறாய்... மனிதா.. நீ தான் பேரன்பினை உணர்வது எப்போது?.
..................
உதடிசைக்கும் குழலோடு
உருகிடும் கார்மேக நிறத்தோன்..
மதகுடைத்த வெள்ளமாய்
மட்டற்ற ஞானந்தரு குரு..
உடனமர்ந்த ராதை.. அவன்
உறைத்த கீதை.. புகழ்
உடைய காதை..
#கண்ணன்...
======================
ஈற்றுடன் ஒன்றென முக்கண் உடையோன்..
மூத்தெம் மக்களிடை முழுமுதலோன்..
கற்றை கொத்துடை சடையோன்..
அற்றை திங்களதை அணிந்தோன்..
அருணை அரணென திகழோரு சோதியோன்..
கருணை கசிந்தொழுகு புவன பிரியோன்...
பார்த்தனை ஆண்ட பரம்பொருள் புகழோன்...
பாடுமெந் தமிழதன் புலமை பழையோன்..
நாடுமவர் நெஞ்சிற் ஆனந்தந் தருவோன்..
காடுமலை கரடுகளில் ஞானத்து இறையோன்...
#எம்ஈசன்...
=====||========||||||=======
நித்திரை என்பவள் பொழியும் நேரம்...
நிலவுக்கு என்ன பொய் கோபம்...
நீலவான் வருமென உறங்கும் விழியும்
நித்திரை இருளில் உய்ய காலம்..
நீயென் நிலவே வருந்துகிறாய்...
நிதமொரு துக்கத்தால் தேய்கிறாய்....
நானில்லையா உனை காண...
நல்லதமிழ் கொண்டுதான் பாட...
நிலவே நீ உலவு ...
நான் இங்கு உறங்குகிறேன்...
நாளை காலை நிலவை புகழ்வேன்...
====|||=====||===
விழுந்துவிட்டால் எழுந்துவிடு..
புதைக்கபட்டால் விளைந்துவிடு..
நசுக்கும் சமூகம் ..
நல்லது செய்யாது..
நமெக்கன ஒன்று உதவுதல் கிடையாது..
முட்டி மோதிபார் ...
விளைந்தால் மரம்..
இல்லையேல் உரம்...
========||=|========
நற்றொரு மேகத்தனில் ...
நாள்கணக்காய் காத்திருந்து...
உற்றொரு பொழுததனில்...
உரசிய காற்றதனால்..
உயிர்த்த துளிகள் ...
மண்ணில் சிந்திட..
என்னில் சிந்திய துளியின் ...
பெயரென்ன?.. அதன் பயனென்ன.?...
إرسال تعليق