அதிர்ச்சி

நூற்றாண்டுகளுக்கு பின் மீண்டும் துவங்குகிறது இந்த யுத்தம். பூமியின் ரேகைகளாக போற்றபடும் நதிகளுக்காக. உலகம் தன் வரலாற்று செப்பேடுகளில் நதிகளையும் சேர்க்கும் அளவில் நதிகளுக்கு பஞ்சமான காலத்தில் தான் இந்த யுத்தம்..

தேவையின் அளவிற்குமேல் இவர்கள் பயன்படுத்தியதுபோல் மீண்டுமதை சேகரிக்க தவறியதால் இன்று உலகமே அலைகிறது எல்லாம் இந்த கார்ப்ரேட்களின் பேராசையும் அலட்சியமும்  தான். நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் நீரெடுத்து அதனை மறுபயன்பாடு செய்யவியலாதபடி வீணடிக்கின்றனர். இதனால் ஊற்றுகளும் கெட்டு நிலங்களும் கெட்டு பல நதிகள் மறைந்தே போயின. குளம் ஏரி என்பதெல்லாம் க்ரூப் எக்ஸாம் கேள்விகளுக்காக மனப்பாடம் செய்யும் வார்த்தைகளாகின..
ஆன்மீகத்தாலும் வரலாற்றாலும் போற்றி புகழபட்ட நதிகள் இன்று வீதிகளின் பெயர் பலகையில் சின்னமாக தேய்கின்றன.. மழை என்ற ஒன்றை அதிசயங்களில் சேர்ந்துகூட வருடங்களாகிவிட்டன.. எஞ்சியது இந்த ஒற்றை நதிதான் .. அதற்கு தான் எத்தனை ஆயுளென்று புகழாதோரில்லை..

ஆகுரிதியான நதியின்று ஓடையளவு சுருங்கிக்கிடக்க அக்கரையில் மாரியப்பனும் இக்கரையில் சேதுராமனும் பரிசல்காரர்கள்.. இன்று ஊற்றுக்கும் ஊனம் வந்ததோ என்னவோ? கோல் வைத்து அக்கரைக்கு செல்லும்படியானது ..

வாரகாலம் தாண்டிய பின் சந்தேகபட்ட சேதுராமன் மாரியப்பனுடன் ஊற்றுக்கண் இடம் சென்று பார்க்க ..

கார்பேட்டுகளே வெளியேறு ; தண்ணீர் எங்கள் தாய்ப்பால்.; நதிகள் எங்கள் சொத்து ; என்பன போன்ற வாசக பலகைகளுடன்
ஆதிக்க அரசு ஒழிக. கோஷம் நிறைந்த கூட்டமதில் இடைசெருகி முன்னேவந்த மாரியப்பனுக்கும். சேதுராமனுக்கும். அதிர்ச்சி..

ஊற்றுக்கண்ணில் ஒரு கார்ப்பரேட் கம்பனி... போரடிக்கிறது என்று போர் போட்டு உறுஞ்சுகிறது. அவ்வளவு தான் இனி உலக வரைபடத்தில் எந்த நதியுமில்லை...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم