இந்த தேசம் இந்திய தேசமாக அரும்பாடுபட்டது. நிலம் பிறந்து மதம் பிறந்தது முதல் இந்த நாடு அடிமைப்பட்டே கிடந்தது. அத்தகு நாட்டில் எத்தனை பெரிய புரட்சி கிளர்ந்தது தெரியுமா?..
விந்திய மலைக்கு அப்புறம் திலகர் . காந்தி . கோபாலகிருஷ்ணன். என்போர் எல்லாம் போராடியேற்றிய சுதந்திர எண்ணத்தை . இப்புறமான தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது கலைகள் மட்டுமே..
தெருக்கூத்தாக மேடைநாடகமாக வளர்த்த விழிப்புணர்வுதான் மக்களை விடுதலை வேள்விக்கு கொண்டு வந்தது. அப்படி படிப்படியாக வளர்ந்த சினிமாவுல தேசப்பற்று இல்லாம போகுமா என்ன?..
தேசபற்று படங்கள்ளயே ஒரு நீண்ட லிஸ்ட் போடலாம் சில நாயகர்களை அந்த ஜானருக்கே வழங்கியிருக்கிறது தமிழ் சினிமா.
கட்டபொம்மன் வசனங்களை மறந்தோர் ஏது. வரி வட்டி கிட்டி..என்ற வசனம் ஆண்டுகளை கடந்த கம்பீரம்.
சமீபத்தின் உன்னைப்போல் ஒருவன். தீவிரவாதத்தை எதிர்க்கும் வீரத்தை ரசிகர்களிடம் இலையோட வைத்தது. சமூகத்தின் மீதான பார்வை அகல படுத்தியது.. இந்தியனாக வந்த கமலின் வசனங்களின் அதிர்வுகள் இன்றும் அடங்கவில்லை.
அடுத்ததாக விஜயகாந்த் அவர்களின் வரிசையான படங்களாக. வல்லரசு நரசிம்மா வாஞ்சிநாதன். போன்ற படங்கள் தேசபற்றை விதைத்தவை..
தேசப்பற்று படங்கள் என்றதும் மனதில் தோன்றும் நடிகர். அர்ஜீன் மட்டுமே. இந்த வகை படங்களுக்கு என்றே சிறந்தவர். ஜெய்ஹிந்த், செங்கோட்டை, கர்ணா, என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதில் பல படங்கள், சுதந்திர தினத்தன்றே ரிலீஸ் ஆகியிருக்கும்.
பெரும்பாலும் தேசபற்று படங்களில் தீவிரவாதமும். தேசஎதிர்ப்பும் அதை எதிர்த்து நடக்கும் போராட்டமுமே என்றிருந்தபோது. மக்களின் தேவையையும் , பிரச்சனையும் அதன் தீர்வையும் சொல்லும் படங்களும் ஒரு வகையில் தேசபற்று படங்கள் தான். அவ்வகையில் மக்களாட்சி, அமைதிப்படை, முதல்வன், போன்ற படங்கள் தங்கள் சிறப்பை சமூகத்தில் எய்தியதும் உண்மை. மேலும் ஜெயம் ரவியின் பேராண்மை ., கமல்ஹாசனின் ஹேராம். விஐயகாந்த்தின் ரமணா. விஜயின் துப்பாக்கி.,
அத்துடன் இந்த சுதந்திர தினத்தின் அன்று பிறந்தநாள் காணும் எங்கள் அர்ஜீன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
சில தேசத்தின் தேவைகள் ரசனைக்குறிய வசனங்களாக...
மன்னிக்கிறமோ இல்லையோ மறந்துடறோம் . மறதி ஒரு தேசிய வியாதி - உன்னை போல் ஒருவன்..
லஞ்சம் வாங்கி வாங்கியே இந்தியாவின் அடையாளம்னு கேட்டா லஞ்சம்ங்கிற அளவுக்கு மாத்திட்டீங்க.. - இந்தியன்
நான் இந்த ஒருநாள்ல செஞ்சத நீங்க இந்த ஒருவருசத்துல செஞ்சிருக்கலாமே - முதல்வன்.
சீட்டே குடுத்தாலும் ஜனங்க ஓட்டு போடமாட்டாங்கண்ணா..
நான் எதுவுமே பண்ணலயே மணியா.
அதான்ங்கண்ணா ஓட்டு போட மாட்டாங்க... - அமைதிப்படை..
சின்ன சின்ன தீவெல்லாம் எப்படி வர்ந்திருக்கு?
அங்க எல்லாம் லஞ்சமில்ல..
இருக்கு இருக்கு அங்கயெல்லாம் கடமைய மீறதுக்குத்தான் லஞ்சம் இங்க கடமைய செய்யறதுக்கே லஞ்சம்.. - இந்தியன்
நம்ம நாடு வளராதத்துக்கு காரணம் 3 பேர் தான்..
1)கடமையை செய்யாதவங்க
2) கடமையை செய்யும் போது குறுக்க வரங்க.
3) காசு வாங்கிட்டு கடமையை செய்யவிடாம தடுக்குறவங்க..
- முதல்வன்..
இப்படிக்கு . பவித்ரன் கலைச்செல்வன்.
إرسال تعليق