அம்மேகம் தூறல் விழுதோ
அப்பாடல் தாளம் தருதோ
துளிசிதறல் ராகம் வருதோ
அடிப்பெண்ணே தாகம் தீருதோ
நாம்தானா புவியின் சிறகே
நீயோவெண் மதியின் நகலே
நானோயென் விதியின் சறுகே
நீங்காதே எனையும் அழகே
கறைகாணா வாழ்க்கை அதிலே
முடிவில்லா பயணம் செலவே
நொடியெல்லாம் மனதின் நிறைவே
விடிவில்லா நிலவின் வலமே
எனக்குள்ளே நிறையும் உறவே
உனக்குள்ளே எந்தன் கனவே
நமக்குள்ளே அன்பின் கடலே
புவிக்குள்ளே தீராத் தழலே
எனக்கென உந்தன் பிறப்பே
உனக்கென்ன எந்தன் சிறப்பே
நமக்கென்ன வாழ்க்கை இனிப்பே
தமக்கென வாழா இயல்பே.
إرسال تعليق