நியதி - சிறுகதை

மூச்சிரைக்க ஓடும் சிறுத்தையை எம்பளமாக கொண்ட ஜாக்குவார் கார் அது. குதிரைகளில் கருப்புக்கு மவுசு அதிகம் . இந்த காரோ மின்னும் கருப்பு. சற்றுமுன் வரை அதன் மேலிருந்த அலாதி பிரியமும் மதிப்பும் ஒரு நொடியில் காணாமற் போனது.

[ அது ஏன்னு சொல்லனும்னா ஒரு சின்ன ப்ளாஸ்பேக் போகனும்] எப்படியாவது முடிச்சி குடுத்துறுங்க சார். என்ற அந்த பெண்ணின் வயது 21க்குமேல் இருக்காது அப்படியே இருந்தாலும் 21றே கால் என்று இருக்கலாம்.. ப்ளாக் ஸ்லாப் ஜீன்ஸ் பேண்டும். கருப்பு கோடுகளால் மலர்கள் இலைகள் தண்டுகளென வேய பட்டிருந்த வெள்ளை சட்டை அணிந்திருந்தாள். சட்டையின் முதல் பட்டன் திறப்பு கொஞ்சம் தடுமாறவைத்தாலும். அது அவள் திமிரை காட்டுவதாய் பட்டது. மச்சி என்கிற வார்த்தை வரைவை டாலராக கொண்ட தங்கசங்கிலி (மைனர் செயின்) கழுத்தை காட்டிக்கொடுக்கிறது.  இத்தனைக்கும் வக்கீல் வெங்கி சரியவே இல்லை .. அப்பெண்ணின் வசீகர தந்திரங்கள் அவனிடம் எடுபடவில்லை. 

மாறாக இவன் நோக்கு வர்மம் போல கண்களை பார்த்தே பேசுகிறான். எட்டுநிமிடமாக வாசற்படியில் நிற்குமெனை அங்கேயே அமரந்துகவனிக்க கைகாட்டினான். கப் அண்ட் சாசர் ஆப் காபியுடன் வந்த காரத்தி இயல்பாகவே வழியுறவன். கேன்ஐ நோ யுவர் ஸ்வீட் நேம் என்றவனை என்னை தெரியாதா கார்த்தி என்று வரியல் அடக்கிவிட்டாள் . நான் அருகிலிருக்கும் பல்பை எடுத்து அவனிடம் காட்டினேன்.

விசயத்துக்கு வாங்க மிஸ் ?  நர்மதா லட்சுமணன்  கார்த்தி.  ம். வெங்கட் சார் எனக்கும் பேர் பின்னாடி இருக்கும் லட்சுமணனுக்கும் கல்யாணமாகி ஒன்றரை வருசமாச்சு . குழந்தையில்ல பாக்காத டாக்டருமில்ல. எங்கப்பா ஒரு மல்டி மல்லினியர். ரீசண்டா மாரடைப்பால் இறந்துட்டார். ஆனா சொத்தையெல்லாம் என் கணவர் பெயரில் எழுதிவிட்டு போயிட்டார் . பாவம் குழந்தையில்லைனு தெரிஞ்சும் வேறொரு கல்யாணம் பண்ணிக்காம தன் மகளுக்காக வாழுறார்னு நெனைச்சு எழுதிட்டார் ஆரம்பத்துல நானும் அப்படிதான் நெனைச்சேன். ஆனா.

ஆனால்? சொல்லுங்க என்றார் வெங்கி . ஆனா இப்பதான் தெரிஞ்சது. அவர் எங்க ஆபிஸின் ஜென்ரல் மேனேஜர் சுரபி கூட வாழ்ந்துட்டு இருக்கார்னு. விசயம் தெரிஞ்சு நான் கேட்டப்ப பிரச்சனையாகிட்டது. இப்போ அவர்கிட்ட இருக்குற என் சொத்துக்களை எல்லாம் வாங்கி தரணும் அதே சமயம் டைவர்ஸ்ஸூம் வேணும்.

என் காபியின் சுகம் தீரும் வேளையில் முடிந்தது இந்த உரையாடல் . லீகல் கேஸ் தான் ஈஸியா வாங்கிறலாம். சோ சப்ப மேட்டருன்னு விட்டுட்டேன். ஆனா

பவி வா போகலாம். கார்த்தி வண்டி எடு அந்த பொண்ண பாலோ பண்ணு. உனக்குதான் பாலோயிங் பிடிக்குமே கார்த்தி அதுவும் இந்த மாதிரி பாலோவிங் எல்லாம். அப்படியில்லண்ணா.. நிவேதா இருக்கும் போது மத்த பொண்ணா?. டேய் நீ வழிஞ்சதுல டேபிள்ளே நனைஞ்சிருச்சே. அட ஆமா வக்கீல் சார். என் வண்டியிருக்கு அதுல போகலாம் பாலோ பண்றது தெரியாது. அவ வரும்போதே உன் வண்டிய பாத்திருப்பா...

ம் என்றதும் எக்ஸ் யூவி கிளம்ப.. கார்த்தி எவ்வளவுடா இருக்கும் அந்த வண்டி செம்மையா இருக்குடா. எப்படியும் கோடியில இருக்கும்னா. அங்கயே இருக்கட்டும் டா..

அப்படி இப்படி என திரிஞ்சு ஒரு சிக்னல்ல நின்னுட்டு இருந்தோம். எங்களிடம் இருந்து  எழு கார்களுக்கு முன்னால் இருக்கிறது அந்த கருப்பு ஜாக்குவார். ஆமா வக்கீல் சார் அப்பன் சொத்த புள்ளைக்கு கேட்குறா சப்ப கேஸீ இதுக்கு எதுக்கு பாலோ பண்ணனும்..

ஏன்டா வேலையில்லனா யோசிக்க கூட மாட்டியா என்னா டிடெக்டீவோ போ. அப்பன்ங்காரன் பொண்ணு பேர்ல எழுதாம மருமகன் பேருல எழுதிருக்கான் அப்ப ரெண்டே காரணம் மருமகன நம்பிருக்கனும் . பொண்ணுமேல நம்பிக்கையில்லாம இருக்கனும். ம் கரக்ட் தான் அதுக்கு எதுக்கு பாலோ பன்ற? பொண்ணு எப்படிபட்டவனு தெரியணும். அண்ட் மருமகன் பத்தியும் தெரியணும்.. டேய் கேஸ் வந்தா கம்முனு முடிச்சிட்டு பீஸ வாங்கிட்டு போக வேண்டியது தான..  இல்லடா இதுல ஏதோ இருக்குன்னு உள்ளுணர்வு சொல்லுது..

ம் பாக்கலாம். என்கையில் என்புற கதவை தட்டி பிச்சை கேட்கும் ஒரு இளம் பெண் கையில் கைக்குழந்தை அக்குழந்தையின் பரிதாப முகமும் தோய்வும் பசியினாற் கொண்ட களைப்பும் மேலும் வெய்யில் தரும் சோர்வும் என ஒட்டுமொத்தமாய் சோகையாய் கிடந்தது. அந்த இளம்பெண்ணின் இறைஞ்சும் முகபாவணையில் ஒரு உயிர்பிரியும் வலி தெரிகிறது காரணம் வயிறு கேட்கிறது மானம் தடுக்கிறது.. ஒரு திருக்குறள் ஒன்னு உண்டு  உயிர் ஒடுங்க நாணிக்கூனி யாசிக்கும் ஒருவருக்கு இல்லை என்று சொல்லும் வேளையில் அவர் உயிர் எங்கே ஔிந்திருக்கும் என்கிற பொருளில் ஒரு குறள். உண்மைதான் இல்லையென்று சொல்ல மனமில்லை தருவதற்கு என்னிடம் எதுவுமே இல்லை. இல்லை என்று கூற தடுமாறும் வேளையில் தன் நைந்த அடைகளில் கிழிந்த பாகங்கள் போக எஞ்சியதற்குள் உடம்பை ஆமைபோல் சுருக்கி மறைக்க வேண்டியதிருந்தது அவளுக்கு.. பாவம் ஏழை . வக்கீல் சார் ஒரு நூறு ரூபா தா. என்று வாங்கி . முதல்ல ரெண்டு பேரும் போய் சாப்புடுங்கன்னு சொல்லி குடுத்தேன். சிக்னல் விழுந்து வாகனம் நகர சில நிமிடங்கள் இருந்ததென முன்னிருக்கும் வாகனங்களுக்கும் சென்றாள் அந்த பெண். சரியாக ஜாக்குவாரை கடந்தபோது சிக்னல் விழ. ஜாக்குவார் சீறி பாய்ந்தது. அந்த பெண் மீது. அந்த கருப்பு கார் அவள் ரத்தத்தை பூசி சிவந்தது.

ரத்தக்கரையோடு நான் குடுத்த நூறு ரூபாய் பறந்து எங்கள் காரின் கண்ணாடியில் சாய அவரசமாய் வந்தவன் அந்த பணத்தை எடுத்து ஓடினான். நாங்கள் ஓடிச்சென்று உதவியும் அந்த குழந்தை அவ்விடத்திலேயே. நசுங்கி சாலையாகவே மாறிவிட மயங்கிகிடந்த அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து..

டேய் நீ சொன்ன மாதிரி பெரிய தப்பு நடந்திருக்குடா என்றேன். உண்மையில் உள்ளிருந்து வரும் ஆதங்கமும் துடிப்பும் விரக்தியும். சற்றுமுன் தானே சற்றுமுன். அக்குழந்தை அத்தனை சோகையுடன் என்னை கடந்து செல்கையில் துளித்துளியாய் சிரித்தது. அந்த நினைவின் சுகம் எய்திய நிமிடம் கரையும் முன்னே  இத்தகு மரணம் அவசியம் தானா?..

இவ்வுலகின் அசுரத்தனத்திற்கு அநியாயமாய் பலியாவதா?. டேய் டேய் கார்த்தி அந்த பொண்ண பாத்தியா? அந்த ஜாகுவார்காரிய. ஏன்ணா? இல்லடா அவமுகத்துல எந் அதிர்ச்சியுமே இல்லயே.. ஆமாண்ணா கவனிச்சேன் இந்த ஆக்சிடெண்ட் டென்சன் கூட ஏதோ திருப்தியா இருக்குற மாதிரி இருந்தது அந்த முகம்.

நாள் மறுநாள் அந்த விபத்தை பற்றி எங்குமே எதுவுமே நிகழாத மாதிரி தான் இருந்தது. சென்னை ஹைக்கோர்ட் வக்கீல் வெங்கி அந்த பெண் நர்மதாவுக்காக (ஜாகுவார்காரி) வாதிட்டு கொண்டிருக்க. லட்சுமணனை விசாரித்து. பின் அந்த மேனஜர் பெண்ணை ஆஜர்படுத்த அழைக்க. அட இவள் இவள் இவளே தான் அந்த சிக்னலில் அடிபட்டவள்.. காயங்களோடுவந்திருந்தாள்.

சொல்லுமா நீ திரு லட்சுமணனோட வாழந்தியா? அவர் உன்னை காதலிச்சாரா? இல்ல நீதான் அவர் மேலயோ இல்ல இந்தசொத்து மேல யோ ஆசைபட்டு?

இல்லைங்க அவர்மேல ஆசைபட்டுதான்.

நீ அந்த கம்பனி மேனேஜர் தான. ? அவருக்கு கல்யாணம் ஆனவிசயம் உனக்கு தெரியாதா? ஏன் உங்க முதலாளியம்மாவின் கணவர்னும் தெரியாதா?

தெரியுமுங்க. முதலாளிக்கு குழந்தையில்லனு என் குழந்தைய விலைக்குடுத்து வாங்க பார்த்தார் நான் முடியாதுங்கனு சொல்ல பின்ன என்னை கல்யாணமும் செஞ்சகிட்டார் குழந்தைக்காக.

சரியிருக்கட்டும் இந்த காயம் எப்படியாச்சு?

நான் டூவீலர்ல போகும் போது விழுந்துட்டேன் . ஜஸ்ட் எ ஆக்சிடெண்ட் .

ஜஸ்ட் எ ஆக்சிடெண்ட்டா . நாங்க இல்லைனா அன்னிக்கு நீ உயிர் பொழச்சிருக்க மாட்ட என்று நான் மனதில் நினைத்துக்கொண்டேன்.

ம் உங்களுக்கு கூட பொறந்தவங்க?

இல்லை நான் ஒரே பெண்..

கார்த்தி ஐம்  லைட்டி சிவரிங் நீ கன்டினு பண்ணு...

மிஸ் ரஞ்சனி. நீங்க ஒரே பெண் தான .? ஆமா. சரி கொஞ்சம் காத்திருங்க..

மிஸஸ் லட்சுமணன் . ஓ அது கன்ப்யூசன்ல இருக்குல்ல..? சாரி. நர்மதா மேடம். Tn 07. Bg7. ப்ளாக் ஜாகுவார் உங்க வண்டிதான.

ஆமாம்.

நேத்து காலை 11:30 சி எம் சி ரோட் சிக்னல்ல உங்க வண்டி ஆக்சிடெண்ட் ஆச்சே அப்ப அந்த வண்டிய நீங்கதான ஓட்டுனீங்க..

ஆக்சிடெண்ட்டா என் வண்டிக்கா நோசான்ஸ்.

நோ சான்ஸ்? பட் ஹியர் த எவிடன்ஸ் .  நீங்க வண்டி ஓட்டி ஆக்சிடெண்ட் ஆன நிகழ்வின் சிசிடீவி வீடியோ ஆதாரம். இட்ஸ் யுவர்ஸ் ஆனர்..

மிஸஸ் லட்சுமணன் 2 . ம் . ரஞ்சனி  உங்க குழந்தைக்காக தான் லட்சுமணன் உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டார் இல்லையா . அந்த குழந்தை எங்க?

ஸ்கூல் போயிருக்கு.  ம்.

தட்ஸ் இட் யுவர் ஆனர்.

ஜட்மெண்ட் படி நர்மதா ஆக்சிடெண்ட் பெனால்ட்டி கன்டெம்ப்ட் ஆப் கோர்ட் என 5 லட்ச ரூபாய் அபராதமும். லட்சுமணன் சொத்துக்களை சரிபாகமாக பிரித்து நர்மதாவிற்கு வழங்கிவிட்டு நர்மதாவை பிரிந்து வாழலாம். என முடித்தார்..

எல்லாம் சரி ஏன் இந்த பெண் பிச்சைகாரியாக நடிக்கவேண்டும். பின் கோர்ட்டில் பொய் சொல்ல வேண்டும்?. அந்த குழந்தை யாருடையது?.. எல்லாம் லட்சுமணனுடய திட்டமே என்றாலும் .

பாவம் அந்த அப்பாவி குழந்தை. இந்த ஈன மனிதர்களின் சுயநலத்துக்காக தன் இன்னுயிரை துறந்தது. கேட்டால் விதி என்பர் உலகத்தார். இது போன்ற விதிகளை எழுத என்ன நியதிகள் இருக்கும்.

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم