கிருஷ்ண காவியம்

பிறந்ததும் வேறிடம்
வளர்ந்ததும் வேறிடம்
கம்சனுக்கு பயந்துனை
காரிருளில் யமுனை
கடுமழையிலும் கடந்துனை
கொண்டுசென்ற வாசுதேவனை - வணங்கவேண்டும்.

செல்ல சேட்டைகளும்
கள்ள சில்மிஷங்களும்
விரும்பி செய்யுமுனை
கொஞ்சி வளர்த்தன்னை
விளையாடுங் கோபியரை
காதலுடைராதை பெண்ணை - வணங்கவேண்டும்..

வீரபல கொண்ட பலராமனும்
தீயகுணங் கொண்ட மாமனும்
நேயநயங் கொண்ட வார்தைதனை
கூறிப்பல ராமனையடக்கி அசுரனை
கூறாய்கிழித் தெரியும் வீரமதை
மாமனாகியும் நீசெய்த கம்சவதை - வணங்க வேண்டும்.

காடுகரடு மேய்ச்சலை
காணுமாடு கூச்சலை
தூயநற் குழலூதி மயக்குவனை
ஊதுதுர் சங்கென போரினை
நிகழ்த்துமுனை பார்த்த தேரினை
நிகழ்த்தியவாரே நேர்த்த சாதனை -வணங்கவேண்டும்..

கரம்ங்கூப்பிய வேண்டுதலை
தொலைவிருந்தும் தந்தனை
தொழும்நல் ஒழுக்கசீல பக்தனை
அழும்நிலை காட்டியதில் ஆட்கொண்டனை
அவல்தந்த அக்குசேல நண்பனை -வணங்கவேண்டும்

அகவைகள் இல்லாதோனை
அனைத்துளும் இருந்தோனை
அரும்பாடின்றி அடிபணிந் தடைவோனை
அகத்துள்ளும் புறத்துள்ளும் உள்ளோனை
அளந்திங்கு அமைப்பான் தோரணை
அவல்தின்று ஆக்குவான் செல்வனை -வணங்க வேண்டும்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post