ஹைக்கூவை போல்

இங்கொரு மரணம்
அடுத்த வார்ட்டில்
இன்னொரு ஜனனம்

இறுதி ஊர்வலம்
முதலில் நடக்கிறது
ஒருக் குழந்தை

சானையின் சப்தம்
ரசிப்போர்க்கு
சாரங்கி இசை.

தூங்கா இரவு
தொலைதூர ரயில்
சப்தம் நிசப்தமாகிறது

கைக்குழந்தை உறங்குகிறது
அசந்துபடுக்கும் தாய்
அணைக்கும் கணவன்..

தேநீர் கோப்பை
வெளியே கொஞ்சம் மழை
சின்னதொரு கிறுக்கல்

பறக்கிறது பட்டாம்பூச்சி
மலரேதும் இல்லை
இலைகள் தேன் சொரிவதில்லை

வனம் எங்கும் சப்தம்
ஓடை நதியாகிறது.

வருகிறது மழை
குளத்தில் வீடுகள்
சாலையில் குளங்கள்..

நகரும் நதி
மிதிக்கும் இலை
இலைமீதொரு எறும்பு

பழைய மூங்கில்
துளைக்கும் வண்டு
ஏதோ காற்று
முதல் குழலிசை..

ஆசை ஆட்டுகுட்டி
அம்மு செல்லமென
அடுப்பில் வேகிறது..

சாலையில் சிக்னல்
கடைபிடிக்க யாருமில்லை

நல்ல வீணை
வாங்கத்தான் வந்திருந்தான்
விறகு கடையில்..

பெரிய ஆலமரம்
விழுதுகள் ஆடுகிறது
நினைவுகளில்..

சூரிய உதயம் இன்று
மேக மூட்டம்
வானிலை ஆராய்ச்சியின் பொய்..

கொழுத்த மரம்
மரக்கடையில் இழைக்கிறது..

பலமாடி கட்டிடம்
கொத்தனாருக்குதான்
காசில்லை ....

நல்ல கவிதை
வாசிக்கபட்டது
எண்ணை பஜ்ஜியால்..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم