#பூசாரி
ஆடுதான் வந்ததாம்
ஆத்திரத்தில் பேசுதாம்.
சூறையாடு கூட்டம் எம் முன்
எதற்கு இந்த குத்தாட்டம்..
நாலுபேருக்கு நல்லதுனா.
நாயகன் சொல்லிக்கார்
நான்மட்டுமா தின்பேன்
நன்றியிலா ஆடே கொஞ்சவா வளர்த்தேன்?.
வளத்ததெல்லாம் வெட்டதாண்டா - எங்கப்பன்
படைச்சதெல்லாம் அழிக்கதாண்டா
வளந்தகெடா வாய்கிழியுதோ.
முளச்ச புல்ல நீ தின்ன
துளுத்த உன்ன ஊர் தின்னுது..
எது பாவம் புல்லுக்கு இல்லா நியாயம்
நீ கேட்டாயோ...
வாழ்க்கை என்ன வக்கீல் வாதமா?
எங்கருப்பன் தின்காட்டி
எதிர்வீட்டுக்கு ரம்ஜான் நீ
விதியென்ன சொன்னதோ
விலக்கென்ன செல்லுமோ
பூசாரி வெட்டாட்டி நூறாண்டு வாழ்வோ
இருக்குதே தலப்பாகட்டி
காடு திரிஞ்ச உன்ன
வீடு வெச்சி வளத்தா
கரடு தேடி உனக்கு மேச்சா
சரடு புல்லு பூண்டு கொடுத்தா
காது கிழிய பேசுதோ
கிடா குறும்பு வீசுதோ
ஆண்டவனா கேட்டான்
ஆண்பிள்ள கறிகொடுனு
தம்புள்ள காக்க தம்புடி
உம்தோல உரிச்சாச்சு
நரிக்கதை போல இந்த தந்திரம்
நாடெங்கும் பரவிருச்சு
மந்தையாட்டு கூட்டமே
மக்கவாழ பரிகிறாயோ?
உயிர்வதை கூடாதுனா நீ தின்னும்
பயிர்கூட கிடைக்காதே
ஐந்தறிவு ஜீவி நீ
ஆறாம் அறிவை அறிவாயோ
தாம்வாழ பிறழிக்கும் அறிவது..
கணமுனை கடவுளாக்கித்தான்
வணங்கி வெட்டுகிறோம் இலையில்..
பூசாரிக்கு மட்டும் மனம் கேட்கிறாய் - வேட்டை
சிங்கத்திடமும் இறைஞ்சுவையோ
சிங்கம் தின்றால் பசி
நாங்க தின்றால் ரூசியோ
கடவுளுக்கும் படைச்சு ஏழசனத்துக்கும் வெச்சு
உன்னயும் சமதர்ம பொருளாக்குறோம்..
வேதம்படிக்கல நாங்க வேண்டியத செய்யுறோம்
பேதம்பாக்குறதே மனுச குணம் உனக்கெதுக்கு அது..
உயிர் நீ கணத்தால்
ஊர் கூடி கொண்டாடுதே
ஒற்றுமைக்கு காரணமே
கர்வமோ?
வயித்துக்குத்தான் என்றாலும்
குலவழக்கத்துக்கு தான் ஆடே
ஆண்டவன் கேட்டானாங்கிற கூட்டமே
ஆசவந்து திங்கிறோம் சட்டமே
வந்தாலும் நம்மசனம் வழக்கம் மாறாது
நட்டமே வந்தாலும் பனமரம் சாயாது.
நாட்டுகோழிக்கில்லா வெறுப்பு எதுக்குனக்கு?
பயிரையோ புல்லையோ தின்கும் ஆடே
உனை தின்க மட்டும் ஏன் வாடுகிறாய்.
பயிர் ஒரு உயிர்
நீயும் ஒரு உயிர்
காவக்காரன் வேலி தாண்ட
காலவெட்டி சூப்பு வெச்சான்
காட்டுச்சாமி கேட்டா குத்தமோ?
إرسال تعليق