அறிவியற்ப் புனைவு(science fiction) ..
என்னதான் தமிழ் சினிமா வருசத்துக்கு 400 படம் ரிலீஸ் பண்ணாலும். ஜானரிக் படங்கள்னா கொஞ்சம் ஜெர்க் ஆகறது வருத்தம் தான்.. அதிலும் சயின்ஸ் பிக்ஷன்னா ஏனோ நூறு வருச தமிழ் சினிமாவுல 157 படங்கள் வரைக்கும் தான் சொல்லிக்க முடியுது..
அதுல 80 சதவிகிதம் ப்ளாப் தான் . அதனாலயோ என்னவோ இந்தமாதிரி படங்களுக்கு சினிமா தயாரிப்பு தயங்குகிறது.. எப்படியோ மீறி வந்த இந்த ரக படங்கள் தமிழ் சினிமா வரலாற்றின் சிம்மானத்தில் வீற்றிருக்கின்றன. உங்களுக்கு தெரிஞ்ச பத்து வருசத்துக்கு முன்னாடி வந்த ஒரு 8 ப்ளாக்பஸ்டர் ப்லிம் சொலலுங்கன்னா 5 வரைக்கும் சொல்ல முடிஞ்சா உங்க சினிமா ஆர்வத்தை நான் பாராட்டியே ஆக வேண்டும். சரி உங்க மனசுக்கு பிடிச்ச படத்தை சொல்லுங்கன்னா குழந்தை வயதிலிருந்து நேற்றுவரை நீண்ட பட்டியலே வரும்..
சரி எல்லாவற்றிக்கும் முன்.. எனக்கும் தூயத்தமிழ் நடை சுமாரா வரும். ஆனால். ஆதி மனிதன் அறிவு வளர தொடங்கிய காலமதில் பிறந்த அரும்தமிழ் அதன் சிறகுகளாய் முளைத்த இயல் இசை நாடக வகைகளில். அரசவைக்குத்தான் இயல் தமிழ். இறைவனுக்கோ இசைத்தமிழ் . என்றாகி நமக்கென முளைத்த சிறகே நாடகத்தமிழாகும். அந்நாடகத்திலும் தெருக்கூத்தாய். மேடைநாடகமாய் தொடங்கி திரைநாடகமாகி .திரைப்படமாகிய .. என்று துவங்கியிருந்தால். நீங்கள் எத்தனையாவது டேப்பிற்கு சென்றிருப்பீர்களோ?..
சரி சயின்ஸ் பிக்ஷனா இருக்க என்ன வேணும்?. ஒரு படம் சயின்ஸ் பிக்ஷனாக ஒரே விதிதான் அறிவியல் சார்ந்த கதைகளமிருக்கனும்.. அறிவியல்னா பிசிக்ஸ் கேமிஸ்ட்ரி ரோபாட்டிக்ஸ். சைக்காலஜி பயாலஜினு எதுவாயினும் கதைகளமாக மாறிவிட்டால் படம் சயின்ஸ் பிக்ஷன் தான்..
இப்ப சில சயின்ஸ் பிக்ஷன் படங்கள கொஞ்சம் பேசுவோம்.. முதல்ல நான் ஆரம்பிக்க நெனைக்கிறது "பிட்சா 2 த வில்லா"ங்கிற படம் தான் . யோவ் அது சயின்ஸ் பிக்ஷனே இல்லையானு வரும் வாசகர்கள் கவனிக்க..
படம் எதிர்காலத்த தெரிஞ்சுக்குற ஒரு அறிவியல பத்தின கான்செப்ட் தான். நாம படத்தோட சீன் பைசீன் கட்லாம் பேசுறதவிட நான் சொல்ல வேண்டிய விசயம்..
புது நடிகர்களை தேர்ந்தெடுத்த இயக்குனர பாராட்டியாகனும்.. ஒருவேள கதாநாயகனா விஜய் நடிச்சிருந்தா கதைக்கு சிதைவு தான். ஆனா அசோக்செல்வன் சரியாக அதே கதாநாயகனா நிற்க காரணம் பரிச்சயமின்மை.. முடிப்தவரை இந்த பரிச்சயமில்லா நடிகர்களையே பயன்படுத்தி கதைக்கு உருவத்தை எதார்த்த குடுத்த கார்த்திக் சுப்புராஜ் க்கு பாராட்டுகள்...
சேம் சைடு மைனஸ் .. ஆம் இப்படிபடம் பரிச்சயமில்லாத நடிகர்கள கொண்டு வந்ததால சரியான படி ரசிகர்கள சேரல . அதுவுமில்லாம இந்த படத்த முதல்ல எடுக்க காரணம் ஹாலிவுட்ல இப்படி ஒரு கான்செப்ட் இதுவரையில்ல.. இந்த கான்செப்ட் தமிழ்ல தான் முதல்முறை வெளிவந்தது.. அந்த ரிஸ்க் கொஞ்சம் எடுத்த தயாரிப்பாளரையும பாராட்டனும்..
படத்துல ஓவியக்கலைய பயன்படுத்திய விதம் . சில டம்ப் சீன்ங்கள க்ளைமாக்ஸ்ல வேற ஆங்கிள்ல காட்டியவிதம்.. அதுவுமில்லாம கடைசியா பாக்க வந்த எஸ் ஜே சூரியாவை வைத்து அடுத்த படமென லீட் குடுத்து முடித்த போது . கொஞ்சமா தமிழ் சினிமாவை நம்ப வைக்கிறது..
ஏன்னா இன்னுமும் அப்பாவை கொன்ன வில்லனை வளர்ந்து பழிவாங்கும் கதையும் . ரோஜோவோடு கதாநாயகி பின் அலையும் கதாநாயகனையும் இன்னமும் தமிழ் ரசிகர்கள் . ரசிக்கிறார்களே .. தமிழ் சினிமாவின் மிக பெரும் பலமது என்றாலும் இது போன்ற படங்கள் அடிக்கடி தேவை என்பதில் ஐயம் இல்லை..
Post a Comment