ஹைக்கூ இன்றைய தினங்களில் ஒரு சர்வதேச கவிதை நடையாக இரு்கிறது. ஆங்கிலம் லத்தீன் பிரஞ்சு என்று தமிழ்வரை பரவிய இந்த கவிதைபாணி ஆரம்பத்தது என்னவோ ஜப்பானிய மொழியில் தான்.
சரி எதற்கு இப்போது அதெல்லாம் என்போருக்கு. வரலாறு முக்கியம் அமைச்சரே என்பது போல. ஹைக்கூவைப் பற்றிய ஒரு எழில்மிகு எளிய அறிமுகம் அவ்வளவே.
இப்போது சொல்லுங்கள் ஹைக்கூ ஜப்பானிய மொழியின் சொத்தல்லவா. அன்னை தமிழுக்கு வெண்பா கலிப்பா வஞ்சிப்பா விருத்தம் என்பதை போல ஜப்பானிய மொழிக்கு ஹைக்கூவும்.சென்ரியூவும்..
சரி இப்போது போகலாம். ஹைக்கூவிற்குள். ஜப்பானிய மக்கள் இயல்பாகவே இயற்கையை காதலிப்பவர்கள். மேலும் அவர்களுள் அனேகர் ஜென் துறவிகளாக அல்லது ஜென் கொள்கைகளை பின்பற்றும் அசையுள்ளவர்கள்..
இந்த ஜென் துறவிகளின் கொள்கைகளில் தலையாயது கற்பனைகளை விடுத்து நிதர்சனமான உண்மையை மட்டும் தேடுவது.. சொல்லுவது.
இவ்வண்ணமே ஹைக்கூவும் துளியும் கற்பனை இல்லாத . உருவகமில்லாத மூன்று வரிகள். உலகின் இயற்கையை பற்றிய மூன்று வரிகள். அவ்வளவே.
கோடைகாலம் சீக்கிரமாய் வந்தது.
அருவிகள் மலையானது
.என்கிற மாதிரி உப்பிலா தயிர் சாதம்.ஆனால் இந்த ஹைக்கூவின் சிறப்பே அதுதான் எளிதில் சென்று சேர்கிறது. யாவருக்கும் புரிகிறது. சிறதாய் இருக்கிறது. அதுமட்டுமல்ல ஒரு நல்ல ஹைக்கூவின் குணம் என்னவென்றால் படித்ததுமுடித்ததுமே ஒரு சலனத்தை உண்டாக்குவது...
ஏதோ ஒரு உணர்வை தூண்டுவது.(உங்களை ஹைக்கூ எழுத வைப்பதாக கூட இருக்கலாம்). அதற்காக அதில் எந்த ரசாயனமும் சேர்க்க கூடாது.
ஹைக்கூ என்பதே ஒரு ஜென் நிலையின் வெளிபாடு எனவும் சொல்லலாம். துளியும் கற்பனை உருவகங்கள் இல்லாது உண்மையை தேடும் ஒருவனது. பொதுப்படை வெளிப்பாடு என்பது போல.
நீருள்ளவரை மீன்
குளம் வற்றினால் கருவாடு.
இந்த வரிகள் என்ன சொல்கின்றன . வெறும் குளத்தின் நிகழ்வையா? அதனூடே இயற்கையின் படைப்பிலக்கியத்தையா? .. படித்தவுடன் சிந்திக்க வைக்கிறதல்லவா. கூடவே ஒரு தத்துவத்தை மறைமுகமாக சொல்ல முற்படுகிறதல்லவா. இதுவே ஹைக்கூவிற்காக அதியுன்னத இலக்கணம்.
இனி விதிகள் பற்றி..
ஹைக்கூ மூன்று வரி மட்டும்.
ஒன்று அல்லது இரண்டு நிகழ்வுக்குள்.
இயற்கையை மட்டுமே எழுதபடவேண்டும்.
துளியும் கற்பனையோ உருவக உவமையோ இருத்தல் கூடாது.
படித்தவுடன் ஏதோ ஓரு உணர்வை துண்ட வேண்டும்.
சப்த சிலபல்கள் ஹைக்கூ விற்கும் உண்டு. அதைபற்றி ஆரம்பத்தில் வேண்டாம். ஆர்வமுளவர்க்கு.
17 சப்தங்கள் மொத்த ஹைக்கூவும். வரிகள் அதன் கூட்டலின் பரிவுகளாய் அமைக்கலாம்.
575 மிகவும் அதிகமாய் பயன்படுத்தும் வரையறை .
; 57: 552; 444; வெகுசில சமயங்களில் 3333 இன்னபிற சேர்வுகள்..
உதாரணமாய்:
ஆறு ஓடுகிறது
إرسال تعليق