பெரும் வனம் எங்கும்
உயர்ந்த மரங்கள் அதில்
கோடானகோடி இலைகள்.
அவ்வனத்தின் நிலமட்டத்தில்
சிறுச்செடி ஏந்தும் இலைநான்.
அச்சிறுசெடியை மரமாக்குதல் என்கடமை
சிறுசெடிக்கும் கூட அதே வாழ்வின் தேவை.
இதோ உயர்ந்த மரங்களின்று இலைகள் விழுகின்றன.
இறதியை எண்ணி அச்சம் வருகிறது
விழுந்த இலைகளுக்கு நான் மட்டுமே வருந்துகிறேன்.
விழப்போகும் இலையாயிற்றே.
மரங்கள் ஏனோ வருந்தவில்லை
ஆம் அவை உறுதியடைந்துவிட்டன.
சிறுசெடிக்கு என் மேல் அதீத நம்பிக்கை
சிலநேரத்தில் கர்வமும் வந்து தொலைகிறது.
சிறுசெடியை நானே மரமாக்குவேன்
அம்மரத்திற்கு நானே உரமாவேன்.
ஒருவகையில் இறைவன் கூட அப்படிதானே
ஓருயிர்படைத்து வளர்த்து அதில் தானே நிலைத்து அழிவது.
என்று என் இறுதி என்பது மட்டுமே ரகசியம்.
அதோடு இறுதிக்கு பின் என்பதும் ரகசியமே.
ஆயினும் எனக்கொரு கடனுண்டு
அடுத்தொரு தளிரை விட்டு செல்வது.
#நான் நட்ட செடியில் விழுந்த இலையின் சிந்தனையில்
Post a Comment